Wednesday, April 23, 2025
முகப்புசெய்திவிழுப்புரத்தில் சாராய எதிர்ப்பு - ஆம்பூரில் ஆட்டோ சங்கம்

விழுப்புரத்தில் சாராய எதிர்ப்பு – ஆம்பூரில் ஆட்டோ சங்கம்

-

சாராய வியாபாரிகள் பற்றி போலீசுக்கு புகார் தெரிவித்ததாலும், சுவரொட்டி ஒட்டியதாலும், விழுப்புரம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழரின் வீட்டுக்குள் புகுந்த சாராய வியாபாரிகள் 10 பேர் பொருட்களை அடித்து நொறுக்கி, சூறையாடி தீவைத்தனர்.

கடந்த வாரம் இது போன்று பு.மா.இ.மு நகர அமைப்பாளர் தோழர் செல்வகுமாரின் வீடு சாராய விற்பனை கும்பலால் சூறையாடப்பட்டது. அதைக் கண்டித்து பு.மா.இ.மு சார்பில் நகர் முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டது.

போலிசே! தமிழக அரசே!

  • குடியை கெடுக்கும், தாலியை அறுக்கும் டாஸ்மாக் மற்றும் கள்ளச்சாராயத்தை ஒழித்துக் கட்டு!
  • வி.மருதூரில் ஆயுதங்களுடன் நடமாடும் ரவுடிகளை குண்டர் சட்டத்தில் அடை!
  • சாராய வியாபாரிகளிக்கு துணை போய் ஊர் அமைதியை சீர்குலைக்கும் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரையை பணி நீக்கம் செய்! சொத்துக்களை பறிமுதல் செய்!

உழைக்கும் மக்களே

  • ரவுடிகளைக் கண்டு அஞ்சாதீர்! போலிசிடம் போய் கெஞ்சாதீர்
  • நம்மை பாதுகாத்துக் கொள்ள நாமே தயாராவோம்!
  • ரவுடிகளோ 10,50 பேர்! நாமோ 1000, 100000 பேர்.

rsyf-vpm-poster

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விழுப்புரம்

_______________________________________

ஆம்பூரில், ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம், பு.ஜ.தொ.மு.வின் கிளை திறப்பு விழா!

26-06-2015 அன்று காலை 10 மணியளவில், ஆம்பூர் தாலூக்கா வெங்கிளியில் ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம் கொடி ஏற்றி பெயர் பலகை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்க செயலாளர் தோழர் வி.ஆல்வின் தலைமை தாங்கினர். வெங்கிளி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் கலந்து கொண்டு பெயர் பலகை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். ஆட்டோ சங்க மாவட்ட பொருளாளர் தோழர் சரவணன் ,ஆம்பூர் தோழர் கார்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

பு.ஜ.தொ.மு மாநில அமைப்புச் செயலாளர் வெற்றிவேல் செழியன் சிறப்புரையாற்றினார். காவல் துறை, RTO, இவர்களின் அடக்குமுறையை சங்கமாக இருந்தால் தான் முறியடிக்க முடியும், என்றும் நமது மொத்த இந்த அரசு கட்டமைப்பு மக்களுக்கு தேவையற்றதாக உள்ளது, இனி மக்கள் அதிகாரத்தை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

இறுதியாக தோழர் சந்தோஷ்குமார் நன்றியுரையாற்றினார்.

இவண்

வேலூர் மாவட்ட பு.ஜ.தொ.மு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க