Monday, April 21, 2025
முகப்புசெய்திஎழுவர் விடுதலையை எதிர்க்கும் மோடி அரசு

எழுவர் விடுதலையை எதிர்க்கும் மோடி அரசு

-

எழுவர் விடுதலையை எதிர்க்கும் மோடி அரசு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்ட அப்பாவிகள் 7 பேர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு சீராய்வு செய்யக் கோரி அதே நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று மறுசீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில்,“20 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை அனுபவித்து விட்டார்கள் என்பதை காரணம் காட்டி 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து விட முடியாது. அது தவறான முன்னுதாரணமாகிவிடும்” என்று கூறியிருக்கிறது பா.ஜ.க அரசு.

முள்ளிவாய்க்கால் போரின் இறுதி நாட்களில் இருந்து பா.ஜ.கதான் ஈழத்தின் பாதுகாவலன் என்று வைகோ, பழ.நெடுமாறன் தொட்டு பெயர்ப்பலகை தமிழ் அமைப்புக்கள் வரை பொங்கி எழுந்தனர். ஈழத்தில் போரை நடத்துவதில் இருந்து இலங்கை குறித்த கொள்கைகளை அமல்படுத்துவது வரை அனைத்தும் இந்திய அரசுதான் என்றும், அதில் காங்கிரசு – பா.ஜ.க என்ற கட்சி சார்ந்த வேறுபாடு இல்லை என்று சொன்ன போதெல்லாம் இவர்கள் மக்களின் கோபத்தை வடிப்பதற்கு காவிக் கட்சியினரை முன்னிறுத்தினர்.

அப்சல் குருவை தூக்கிலிட்டுக் கொன்ற காங்கிரசு அரசு போல பா.ஜ.க அரசும் காஷ்மீர் மட்டுமல்ல இலங்கை குறித்த கொள்கையிலும் அப்படியேதான் மாற்றமில்லாமல் நடந்து கொள்ளும். மேலும் சிறுபான்மையினர் – குறிப்பாக முஸ்லீம்கள், தேசிய இன விடுதலைக்காக போராடும் குழுக்கள், புரட்சிகர அமைப்புக்கள் அனைவரையும் ஒடுக்குவதை இருபெரும் கட்சிகளும் விரும்புகின்றனர். அதனால்தான் இந்த விடுதலை என்பது “தவறான முன்னுதாராணம்” என்று வாதிடுகிறது மோடி அரசு.

2002-குஜராத்தில் முஸ்லீம் மக்களை நரவேட்டை ஆடிய ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பல் தனது பங்காளியான சிங்கள இனவெறி அரசுக்கு ஆதரவாகத்தான் செயல்படும். ஒருக்கால் அவர்களே அப்படி நடித்துக் கொண்டு ஆதரவளிப்பதாக காட்டிக் கொண்டாலும் அது தற்காலிக வேடம் மட்டுமே. பால் தாக்கரே, மோடி போன்ற பாசிஸ்டுகளின் ஆதரவை பெற்றுத்தான் ஈழம் விடுதலையடைய வேண்டுமென்றால் அது தவறில்லை என்றே பல தமிழினக் குழுக்கள் நினைக்கின்றன.

விடுதலை என்பது நேர்மையான வழியின் மூலமே பெற முடியும் என்பதை இவர்கள் எக்காலத்திலும் ஒத்துக் கொள்ளப் போவதில்லை. பிற இன மக்களை ஒடுக்கும் ஒருவன் எனது இன மக்களுக்கு ஆதரவாக இருப்பான் என்பதால் அவனது பிற ஒடுக்குமுறைகளை கண்டுகொள்ள மாட்டேன் என்று நினைப்பதற்கு இது ஒன்றும் இலாப நட்டம் பார்த்து செயல்படும் பன்னாட்டு வணிகம் அல்ல.

_____________________

பணக்கார இந்தியா சார்பாக மோடியின் கனவுத் திட்டம்
பணக்கார இந்தியா சார்பாக மோடியின் கனவுத் திட்டம்

இலட்சம் கோடி ரூபாயில் மோடியின் கனவு!

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்திற்கான முன்வரைவை ஜப்பானிய அதிகாரிகள் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் அளித்திருக்கின்றனர். மணிக்கு 350 கி.மீட்டர் வேகத்தில் இந்த இரு நகரங்களின் 550 கி.மீட்டர் தூரத்தை புல்லட் ரயில் கடக்கும். திட்டத்தின் உத்தேச செலவு 98,805 கோடி ரூபாய். 2017-ல் திட்டம் ஆரம்பித்தால் 2024-ல் பயன்பாட்டுக்கு வரும். இந்த வழித்தடத்திற்கான பயணக் கட்டணம் ரூ.2,800. ஒரு லட்சம் கோடி ரூபாயை கடனாக ஜப்பான் அரசு தரும். வட்டி உண்டு.

மோடியின் கனவால் யாருக்கு ஆதாயம்?

கடன் கொடுத்த ஜப்பானுக்கு வட்டியுடன் வரவு. புல்லட் ரயில் பாதை, இன்ஜின், பெட்டி, இதர கட்டமைப்புகள் என்று பணம் அள்ளப் போவதும் ஜப்பான்தான். இதை ஒட்டி உள்ளூரில் உதவும் முதலாளிகளுக்கு கமிஷன் தனி. இந்த ஒரு லட்ச ரூபாயை கட்டப் போவது இந்திய மக்களின் வரி மூலம். 2,800 ரூபாய் கொடுத்து இதில் பயணிக்கப் போவது குஜராத்தி பனியா முதலாளிகள் மற்றும் மேல் தட்டு நடுத்தர வர்க்கம்.

ஏழை மக்களிடம் சுரண்டி ஜப்பானுக்கும், பனியாக்களுக்கும் தாரை வார்ப்பதை கனவு என்று சொன்னால் அந்த கனவுக்கு நாம் மரியாதை செய்ய வேண்டியது செருப்பால் மட்டுமே!

________________________

வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகள்
இணையுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க