Saturday, April 19, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கமூடு டாஸ்மாக்கை ! கம்பம் முதல் சென்னை கடற்கரை வரை ஆர்ப்பாட்டம்

மூடு டாஸ்மாக்கை ! கம்பம் முதல் சென்னை கடற்கரை வரை ஆர்ப்பாட்டம்

-

மூடு டாஸ்மாக்கை ! கம்பத்தில் ஊர்வலம்!!

cumbam rally (3)

ன்று தமிழத்தில் நடந்த முழு கடையடைப்பு போராட்டத்தில் ஒரு அங்கமாக தேனி மாவட்ட விவிமு சார்பாக கம்பத்தில் டாஸ்மாக் கடையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

தோழர் மோகன் தலைமையில் நடந்த போராட்டத்தில் கம்பம் பஸ் நிலையத்தில் இருந்து தேவபாலா தியேட்டர் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை நோக்கி “மூடு மூடு டாஸ்மாக்கை இழுத்துமூடு!  உடைத்தெறிவோம் உடைத்தெறிவோம் டாஸ்மாக் கடையை உடைத்தெறிவோம்!அருகதை இழந்தது அரசு கட்டமைப்பு!  மக்கள் அதிகாரத்தை கட்டியமைப்போம்!” என்ற முழுக்கங்களுடன் ஊர்வலமாக சென்றனர்.

கம்பம் காந்தி சிலை அருகில் ஊர்வலத்தை தடுத்து நிறுத்திய காவல்படை தோழர்களை கைது செய்ய முயற்சித்தது. சீறிஎழுந்த தோழர்கள் சாலையில் அமர்ந்து முழக்கமிட்டனர். பேருந்து மற்றும் போக்குவரத்து இருபுறமும் நிற்க சுற்றிலும் பொதுமக்கள்  திரண்டார்கள். இதை சற்றும் எதிர்பாராத காவல்துறை தோழர்களை வலுக்கட்டாயமாக தூக்கி வண்டியில் ஏற்ற முயற்சித்தது.

மூத்த தோழர் கணேசன் அவர்களை நான்கு காவலர்கள் ஈவிரக்கமில்லாமல் சாலையில்  இழுத்தனர். ஆனால் தோழரோ இந்த வயதிலும் வெகுண்டெழுந்து நான்கு காவலர்களின் பிடியில் இருந்து விடுபட்டு முழக்கத்துடன் மீண்டும் தோழர்களோடு இணைந்து சாலையில் அமர்ந்தது சுற்றியிருந்த பொதுமக்களுக்கு உணர்ச்சியுட்டுவதாக இருந்தது. தொடர்ந்து அரைமணிநேரம் சாலை மறியலுடன்   போராடிய பின் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் படங்கள்:

படங்களை பெரிதாக பார்க்க அழுத்தவும்

_________________________________________

சென்னை உயர்நீதிமன்றத்தில் போராட்டம்

chennai highcourt (1)

chennai highcourt (2)_______________________________________

சென்னை கந்தசாமி நாயுடு கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

பச்சையப்பா மாணவர்களை தாக்கிய போலிசைக் கண்டித்தும், முழு மதுவிலக்கை அமல்படுத்துமாறு கோரியும் சென்னை கந்தசாமி நாயுடு கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளைப் புறக்கணித்து வேலை நிறுத்தம் செய்தனர்.

காலையில் கல்லூரியில் கூடிய மாணவர்கள் சுமார் 300 பேர் அணிதிரண்டு கல்லூரி வாயில் அருகே முழக்கமிட்டனர். இந்த போராட்டத்தை அடுத்து அந்த கல்லூரிக்கு இன்றும் நாளையும் விடுமுறை என்று நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

இதே போன்று காஞ்சிபுரம் பச்சைய்யப்பன் கல்லூரி மாணவர்களும் போராடினர்.

kandasamy (2)

kandasamy (1)

__________________________________

சென்னை பிரசிடென்சி கல்லூரி மாணவர் போராட்டம்!

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், தமிழகத்தில் முழு மதுவிலக்கு கொண்டு வரக்கோரியும் சென்னை பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு போராடினர். கல்லூரியில் குழுமி முழக்கமிட்ட மாணவர்கள் பிறகு வெளியே சாலையிலும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

presidency (2)______________________________________________________

திருச்சியில் சுவரொட்டி

tiruchi