Saturday, April 19, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கமக்கள் அதிகாரம் : மேளப்பாளையூர் டாஸ்மாக் மூடப்பட்டது

மக்கள் அதிகாரம் : மேளப்பாளையூர் டாஸ்மாக் மூடப்பட்டது

-

melapalayam tasmac (6)விருத்தாசலம் அருகில் உள்ள மேளப்பாளையூர் கிராமத்தின் டாஸ்மாக் கடையை மக்கள் அதிகாரம் அமைப்பின் தலைமையில் மக்கள் மூடினர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ கிராம மக்கள், தோழர்கள் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருத்தாசலத்தில் போராடிய தோழர்கள் காவல் நிலையத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். “எங்களுடைய கோரிக்கை டாஸ்மாக்கை மூட வேண்டும் என்பதே. அது தொடர்பாக அதிகாரிகள் வந்து பேச்சு வார்த்தை நடத்தாத வரை சாப்பிட மாட்டோம்” என்று போராடுகின்றனர். அதை ஒட்டி தாசில்தார் வந்து பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.

களத்தில் மட்டுமல்ல கைது செய்தாலும் போராட்டம் தொடர்கிறது. டாஸ்மாக்கை மூடும் வரை தமிழகமெங்கும் போராட்டம் ஓயாது என்று மக்கள் அதிகாரத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ தெரிவித்தார்.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க