Tuesday, April 22, 2025
முகப்புவாழ்க்கைகுழந்தைகள்3-ம் வகுப்பு பாடத்தில் “ரேப் – RAPE குரு” ஆஸ்ராம் பாபு !

3-ம் வகுப்பு பாடத்தில் “ரேப் – RAPE குரு” ஆஸ்ராம் பாபு !

-

asaram vinavu cartoon 700 pixசிரமம் வரும் பக்தர்களின் சிறுமிகளை வன்புணர்ச்சி செய்து தன்னை கடவுளாக அறிவித்து ‘அருள்’ பாலித்தவர் மேதகு ஆஸ்ராம் பாபு! இந்த ‘தவ’த்திற்காக கடந்த ஒரு வருடம் ஜோத்பூர் சிறையில் இருப்பவர், தனது சீமந்த புத்திரனையும் அதே – வன்புணர்ச்சி– புண்ணிய செயலுக்காக சிறை மீட்டியிருக்கிறார்.

மாடி வீட்டு மார்வாடி முதல் பா.ஜ.க கட்சி மோடி வரை உள்ள பக்தர்களின் பலம்தான் பலான கழிசடை காரியங்கள் செய்வதற்கான உந்து சக்தி. பாதிக்கப்பட்ட சிறுமிகள் புகார் கொடுத்து வழக்கு நடைபெற்றாலும், நேரடி சாட்சியங்கள் பலர் கூண்டிலேறி உண்மை சொன்னாலும் சாட்சிகள் சிலரை பரலோகமே அனுப்பி விட்டார்.

இப்பேற்பட்ட மகான் சிறையில் இருக்கும் மாநிலமான ராஜஸ்தானை பா.ஜ.க சீரும் சிறப்புமாக ஆள்கிறது. வசுந்தராஜே முதலமைச்சராக இருந்து ஐ.பி.எல் மோசடி மகாராஜா லலித் மோடி எனும் உலகம் சுற்றும் மைனருக்கு தொழிலும், வருமானமும் ஏற்பாடு செய்து ராஜஸ்தானை எழுதிக் கொடுத்தவர்.

இந்நிலையில் மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளின் பாட நூலில் நாட்டின் புகழ் மிக்க சாமியார்கள் வரிசையில் சீக்கிய குரு நானக், விவேகானந்தர், அன்னை தெரசா, ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆகியோர் வரிசையில் ஆஸ்ராம் பாபுவும் ஜம்மென்ற் அமர்ந்திருக்கிறார். இனி ஆஸ்ராம் பாபு ஆசி பெற்ற சுவாமி விவேகானந்தர் என்று பிளக்ஸ் போடாததுதான் பாக்கி!

டெல்லியைச் சேர்ந்த குருகுல் பிராகாசன் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டிருக்கிறது. பொறுக்கி சாமியாரை புத்தகத்தில் போடலாமா என்று கேட்டால் நாங்கள் புத்தகம் போடும் போது சாமியார் மேல் வழக்கில்லையே என்கிறார்கள் புத்தக நிறுவனத்தினர். என் இ ஆர் டி நிறுவனத்தின் பாடத்திட்ட வழிகாட்டுதல் கீழில் தயாரிக்கப்பட்டிருப்பதால் இது ஏதோ ஒரு தனியார் நிறுவனத்தின் தவறல்ல. மேலும் இந்த பிரச்சினை வெளி வந்த பிறகு நூல் வெளயீட்டு நிறுவனமும், பா.ஜ.க அரசும் இது குறித்து விசாரிக்கிறோம், ஆவண செய்கிறோம் என்று உதிர்த்துவிட்டு ஆண்டவனை தொழுகிறார்கள்.

மோடி பிரதமராக இருந்து மத நல்லிணக்கத்தை போதிக்கும் போது ஆஸ்ராம் பாபு பாடத்திட்டத்தில் இருந்து ஒழுக்கம் குறித்து பேசுவதில் என்ன தவறு? இனி குழந்தைகளுக்கு நித்தியானந்தா, ஜெயேந்திரன், தேவநாதன் போன்ற பூஜைக்குரிய மாந்தர்களின் கதைகளை போட்டு படிக்க சொல்ல வேண்டியதுதான்.

இதில் பாபா ராம்தேவ் இல்லையென்று யாரும் வருத்தப்பட வேண்டாம். அண்ணலும் ஆஸ்ராமுக்கு கம்பெனி கொடுக்கும் வண்ணம் குழந்தைகளை அச்சுறுத்தும் நூலில் வீற்றிருக்கிறார்.

வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட குறுஞ்செய்தி
இணையுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க