Thursday, April 17, 2025
முகப்புசெய்திகும்மிடிப்பூண்டியில் மோடி மசோதா எரிப்பு - படங்கள்

கும்மிடிப்பூண்டியில் மோடி மசோதா எரிப்பு – படங்கள்

-

செப்டம்பர் 2 017தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமையை காவு கொடுக்கின்ற தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதாவை தீயிட்டுக் கொளுத்துவோம்! என்று அறிவித்தபடி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் மாவட்டத்தின் சார்பாக கும்முடிப்பூண்டி பைபாஸ் சாலையில் இன்று (செப் – 02) காலை 08.30 மணிக்கு தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதா தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் (கிழக்கு) மாவட்டத் தலைவர் தோழர் சதிஷ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் (கிழக்கு) மாவட்டச் செயலாளர் தீயிட்டுக் கொளுத்தினார்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில இணைச் செயலாளர் தோழர் சுதேஷ் குமார் தொழிலாளர்கள் மத்தியில் கண்டன உரையாற்றினார். கிளை / இணைப்பு சங்க தொழிலாளிகள், உழைக்கும் மக்கள் என 700 மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் போலிசு கைது செய்துள்ளது.

கும்முடிப்பூண்டி சமுதாயக் கூடத்தில் அடைத்துள்ளது. இடமில்லாத காரணத்தால், கோயிலின் உள்ளே அடைத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டமானது, தொழிலாளி வர்க்கத்துக்கு விடிவெள்ளியாக பு.ஜ.தொ.மு மட்டுமே உள்ளது என்பதை பறைசாற்றுவதாக அமைந்தது. தொழிலாளி உரிமைகளை பறிக்கும் அரசை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம்.

படங்களை பெரிதாக பார்க்க அழுத்தவும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க