Sunday, April 20, 2025
முகப்புபோலி ஜனநாயகம்நீதிமன்றம்நீதித்துறை ஊழலுக்கெதிரான வழக்குரைஞர் போராட்டம் - வீடியோக்கள்

நீதித்துறை ஊழலுக்கெதிரான வழக்குரைஞர் போராட்டம் – வீடியோக்கள்

-

ழல் நீதிபதிகளுக்கெதிராக வழக்குரைஞர்களின் பேரணி
இது ஊழல் நீதிபதிகளுக்கெதிரான தமிழக வழக்குரைஞர்களின் போராட்டம்.
செப்டம்பர் 10-ம் தேதி தமிழக வழக்குரைஞர்கள் மதுரையில் நடத்தியிருக்கும் இந்தப் போராட்டம் இந்தியாவில் வேறு எங்கும் நடந்திராத போராட்டம்.
நீதிபதிகளின் ஊழலை வீதியில் நிறுத்தி விளக்கம் கேட்கும் போராட்டம்

உங்களுக்கு பி.ஆர்.பழனிச்சாமியை தெரிந்திருக்கும்; தாது மணல் வைகுண்டராசனை தெரிந்திருக்கும்; ஆற்று மணல் கொள்ளையர்களை, கல்விக் கொள்ளையர்களை தெரிந்திருக்கும். இவர்களிடமெல்லாம் காசு வாங்கிய கட்சிக்காரர்களை, அதிகாரிகளை, போலீசை தெரிந்திருக்கும்; ஆனால் இந்தக் கொள்ளைகளை எல்லாம் சட்டபூர்வமாகவே அனுமதித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளின் பெயர் தெரியுமா உங்களுக்கு?

இதோ வழக்குரைஞர்கள் அவர்களை அடையாளம் காட்டுகிறார்கள்.

நீதிபதிகளின் குற்றங்கள் தெரிந்தவர்கள் கூட அவர்களின் பெயர்களை உச்சரிக்க மாட்டார்கள்.
நீதிபதிகளின் ஊழலை கேள்வி கேட்டால் அவர்களை அவமதித்ததாகக் கூறி சிறையில் தள்ளுவார்கள் என்று நடுங்குகிறார்கள்.

உயர்நீதிமன்ற நீதிபதியோ, உச்சநீதிமன்ற நீதிபதியோ என்ன குற்றம் செய்து பிடிபட்டாலும், அவர்கள் மீது வழக்கு போட சட்டத்தில் இடமில்லை. அவர்களை பதவியிலிருந்து இறக்குவதற்கே நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும்.

இதனால்தான் தட்டிக் கேட்பாரின்றி தறிகெட்டு ஆடுகிறது, நீதித்துறை. இந்த ஆட்டத்துக்கு முடிவு கட்டும் போராட்டத்தின் துவக்கம்தான் இந்தப் பேரணி. எந்த நீதிபதி எந்த வழக்கில் எத்தகைய முறைகேடான தவறான தீர்ப்பை வழங்கியிருக்கிறார் என்று குறிப்பாக சுட்டிக் காட்டுகிறார்கள் வழக்குரைஞர்கள்.

அதனை வெளியிடாமல் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்கின்றன ஊடகங்கள். நீதிபதிகளோ ஹெல்மெட் தீர்பபை விமர்சித்ததாக வழக்கு போட்டு விட்டு ஊழல் எதிர்ப்பு பேரணி பற்றி விசாரணை நடத்துகிறார்கள். 75 வயது முதியவரான வழக்குரைஞர் சங்கச் செயலர் ஏ.கே ராமசாமியை ஒன்றரை மணி நேரம் நிற்க வைத்தே விசாரித்து தங்களது வக்கிர புத்தியைக் காட்டுகிறார்கள்.

இந்த முறைகேடுகள் அனைத்தையும் விரைவிலேயே முடிவுக்குக் கொண்டு வருவோம்.

நீதிபதிகள் லார்டுகளும் அல்ல வழக்குரைஞர்கள் அடிமைகளும் அல்ல. மக்களுக்கு எதிரான தீர்ப்புகள் அனைத்தையும் இனி விசாரணைக்கு உட்படுத்துவோம். மக்களின் விமர்சனத்துக்கும் கண்காணிப்புக்கும் நீதிபதிகளை உட்படுத்துவோம்.

நீதித்துறை ஊழலுக்கு எதிரான வழக்குரைஞர் போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றுவோம்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – செப்டம்பர் 16, 2015 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது என்ன? நேர்காணல் வீடியோ ஹைலைட்கள்… (வாட்ஸ்-அப்-ல் பரவலாக பகிரும்படி கேட்டுக் கொள்கிறோம்)

முழு வீடியோவை பார்க்க https://www.vinavu.com/2015/09/19/contempt-case-incidents-in-chennai-high-court/

தகவல்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க