Tuesday, April 22, 2025
முகப்புசெய்திஅத்திப்பட்டு ஐ.ஓ.சி பெட்ரானஸ் ஆலை ஓட்டுநர் அடித்துக் கொலை !

அத்திப்பட்டு ஐ.ஓ.சி பெட்ரானஸ் ஆலை ஓட்டுநர் அடித்துக் கொலை !

-

அத்திப்பட்டு ஐ.ஓ.சி பெட்ரானஸ் ஆலையில் பணிபுரியும் லாரி ஓட்டுநர் அடித்துக்கொலை!
நீதி கேட்டு போராடிய தொழிலாளர்கள் மீது தடியடி, கைது – சிறை

நிர்வாகமே!

  • உயிர் பாதுகாப்பு! விபத்துக்கான இன்சூரன்ஸ் போன்ற அடிப்படை உரிமைக்காக போராடும் தொழிலாளர்களை போலீசைக் கொண்டு ஒடுக்காதே!
  • லாரி ஓட்டுநர்கள் மீது கொடுக்கப்பட்ட பொய்ப்புகார்களை வாபஸ் வாங்கு

தொழிலாளர்களே!

  • நமது உரிமைகளைப் பறிக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!

tanker-lorry-strike12000 ஓட்டுனர்கள் ஆயிரக்கணக்கான வண்டிகளில் எரிபொருளை ஏற்றிக் கொண்டு நாடு முழுவதும் கொண்டு செல்கின்றனர். சரவணன் என்ற ஓட்டுனர் ஹைதராபாத்தில் இரவு நேரத்தில் பாதுகாப்பின்றி போய்க் கொண்டிருக்கும் போது, ஒருவர் அடிக்க வந்து பரிதாபமாக இறந்து போனார். அவருக்கு உரிய நிவாரணம் கொடுக்க வேண்டும் என்றும் மற்ற ஓட்டுனர்களுக்கு உரிய பணி பாதுகாப்பு வேண்டும் என்றும் தொழிலாளர்கள் போராடுகின்றனர்.

“இரவு நேரங்களில் வண்டி இயக்கக் கூடாது. இரவு 10 மணிக்கு மேல் காலை 6 மணி வரை இயக்கக் கூடாது” என்ற விதியை நிர்வாகம் கொண்டு வந்தது. அதை லாரி உரிமையாளர்கள் அடித்து உடைத்து விட்டார்கள். யாராவது இறந்து போனால் பரவாயில்லை, அடுத்த டிரைவர்கள் வந்து விடுகிறார்கள் என்று அலட்சியமாக நடத்துகிறார்கள்.

tanker-lorry-strike4“வண்டியை இரவு பகலாக ஓட்டக் கூடாது, பகலில்தான் ஓட்ட வேண்டும்” என்பது அரசு ஆணை, மத்திய அரசின் ஆணை. பாதுகாப்பாக ஓட்ட வேண்டும். ஏனென்றால் வெடித்தால் இது ஒரு நபரோடு தொடர்புடையது அல்ல. சுற்றியிருக்கும் பொதுமக்கள், வேடிக்கை பார்க்கும் மக்கள் எல்லோருக்கும் விபரீதமாக ஆகி விடும்.

தினமும் 12 மணி நேரம் வண்டி ஓட்டுவோம். நான்கு மணி நேரத்துக்கு ஒரு தடவை ஒரு மணி நேரம் வண்டியை நிறுத்தி டேங்க், டெம்பரேச்சர் சரிபார்க்க வேண்டும்.

tanker-lorry-strike2இரவு நேரத்தில் போவதால்தான் திருட்டுக்கள் நடக்கின்றன. பாதுகாப்பான இடத்தில் நின்று கொண்டு படுத்தால், போலீஸ்காரர் இங்கு படுக்காதே, அங்கு படுக்காதே என்று விரட்டுகின்றனர். இதனால் ஓட்டுனர்கள் தூக்கக் கலக்கத்தில் வண்டியை எடுத்துச் சென்று விபத்துக்கள் ஏற்படுகின்றன.

இரவு நேரங்களில் வண்டிகளை நிறுத்தி தூங்குவதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் சுங்கச் சாவடியில் பாதுகாப்பு தர வேண்டும்.

மேலும், இறந்த ஓட்டுனருக்கு இழப்பீடு வேண்டும். “வண்டிக்கு இழப்பீடு இருக்கு, உள்ளே போற எரிவாயுக்கு இழப்பீடு இருக்கு, வண்டியில அடிபட்டு இறந்து போனா கிட்டத்தட்ட 30 பேர் வரை இன்சூரன்ஸ் கிளெய்ம் பண்ணலாம். ஆனால் டிரைவருக்கு இன்சூரன்ஸ் போடவில்லை.” என்கின்றனர் தொழிலாளர்கள்.

மேலும், “இவ்வளவு நாள் நாங்க தொழிற்சங்கம் இல்லாம இருந்தோம். இனிமேல் எங்களுக்கு தொழிற்சங்கம் வேண்டும், எதுவானாலும் கேட்க. எங்களுடைய ஊதியம், வேலை பற்றி கேட்க.

அரசு ஊழியர் 8 மணி நேரம் வேலை பார்க்கின்றனர். நாங்க 24 மணி நேரம் வேலை செய்கிறோம், மாதக் கணக்கில். ஞாயிற்றுக் கிழமை வேலை பார்த்தால் சட்டப்படி 2 சம்பளம் கொடுக்கணும் அந்த ஓனர்.” என்று உறுதிபடக் கூறுகின்றனர்.

tanker-lorry-strike-posterதகவல்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் (கிழக்கு மாவட்டம்) 9445389536

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க