Thursday, April 24, 2025
முகப்புசெய்திமோடி அரசை வீழ்த்த அணிவகுப்போம் – விழுப்புரம் ஆர்ப்பாட்டம்

மோடி அரசை வீழ்த்த அணிவகுப்போம் – விழுப்புரம் ஆர்ப்பாட்டம்

-

சென்னை IIT, ஐதராபாத் பல்கலை கழகத்தை தொடர்ந்து டெல்லி JNU வை ஆக்கிரமிக்க துடிக்கும் RSS ன் பார்ப்பன பாசிச நடவடிக்கைகளை முறியடிப்போம்! விழுப்புரம் ஆர்ப்பாட்டம்!!

villupuram 20160222 protest (3)கடந்த 12-ம் தேதி JNU மாணவர் தலைவர் கண்ணையா குமார் தேசிய பாதுக்காப்பு சட்டத்தில் மோடி அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய கைதைக் கண்டித்து உலகம் முழுவதும் மாணவர்கள், பேராசிரியர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் என பல தரப்பினரும் போராடி வருகின்றனர். தமிழகத்தில் புரட்சிகர அமைப்புகள் தொடர்ந்து கண்ணையா குமாரை விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விழுப்புரத்தில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பாக 22.02.2016 திங்கள் அன்று மாலை 4.00 மணிக்கு விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் திருவள்ளுவர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் மணிமேகலை தலைமை தாங்கி பேசுகையில், “கண்ணையா குமார் இந்தியாவுக்கு எதிராக முழக்கமிட்டார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றபோதும் கூட கண்ணையா குமாரை விடுதலை செய்ய மறுக்கிறது என்றால் இது மாணவர்களை அச்சுறுத்துவதற்க்கான நடவடிக்கை தான்” என்பதை அம்பலப்படுத்தி பேசினார்.

அடுத்ததாக கண்டன உரையாற்றிய புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் திலீபன், “மார்டின் லூதர் கிங் கூறியது போல ‘எங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை விட, நல்லவர்களின் மவுனம் தான் மரணத்தை ஏற்படுத்துகிறது’, அதுபோல் BJP-RSS கும்பல் மாணவர்கள் மத்தியில் சாதி ரீதியாக, மத ரீதியாக பிளவை ஏற்படுத்தி அவர்களின் கனவான இந்து ராஷ்டிரத்தை நிறுவிக்கொள்ள துடிக்கிறார்கள். இந்த அபாயத்தை எதிர்த்து போராடாமல் இருப்பது தான் நமக்கு அச்சுறுத்தலாக உள்ளது” என்பதை உணர்த்தி பேசினார்.

இறுதியாக கண்டன உரையாற்றிய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் அமைப்புக்குழு செயலர் தோழர் ஞானவேல் பேசுகையில், ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்வமாக வந்து கலந்து கொண்ட பள்ளி மாணவர்களை அச்சுறுத்தி களைய வைக்கும் முயற்சியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் சந்துருவை அம்பலப்படுத்தி பேசிய பின்பு, டெல்லி JNU என்பது மற்ற பல்கலை கழகங்களை போல் பட்டம் தயாரித்து வழங்கும் தொழிற்சாலை அல்ல. முற்போக்கு சிந்தனையாளர்கள், எழுத்தாளர்களை உருவாக்கும் அறிவுத்துறையினரின் பிறப்பிடம். இந்த கேடுகெட்ட அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து போராடுபவர்கள் தான் JNU மாணவர்கள். அங்கு பணியாற்றக்கூடிய பேராசிரியர்களும் தொடர்ச்சியாக உழைக்கும் மக்களுக்காக போராடக்கூடியவர்கள் தான்.

ஆகவே தான் JNU மற்ற எல்லா பல்கலை கழகங்களுக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறது. இதனை சகித்துக் கொள்ள முடியாத பார்ப்பன RSS கும்பல் திட்டமிட்டு நிகழ்த்தியது தான் கண்ணையா குமார் கைது. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து அரசுத்துறைகளிலும் RSS பார்ப்பன கும்பலை நியமித்து வருகிறது மோடி அரசு. கல்வி நிலையங்களை காவிக் கூடாரமாக்க துடிக்கிறது. நெருங்கி வரும் இந்த மாபெரும் அபாயத்தை முறியடிக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். அதற்கு ஓட்டுக்கட்சிகளை நம்பி பயனில்லை. மக்கள் அனைவரும் புரட்சிகர அமைப்புகளில் அணி திரள்வதே தீர்வு என்பதை விளக்கி தனது உரையை முடித்துக்கொண்டார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விழுப்புரம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க