லாகூர் இக்பால் பூங்காவில் முசுலீம் மதவெறியர்களின் கொடூரம்!

பாகிஸ்தான் தாலிபான் குழுவிலிருந்து பிரிந்த ஜமாத் அல் அஹ்ரார் எனும் பயங்கரவாதிகளின் கொடூரத்தால் லாகூரில் ஒரு படுகொலை நடத்தப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானில் இருபது இலட்சத்திற்கும் குறைவான கிறித்தவ மக்கள் வாழ்கின்றனர். இவர்களின் பெரும்பான்மையினர் ஏழைகள், நடுத்தர மக்கள். ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் முகமாக லாகூர் நகரத்தில் இருக்கும் இக்பால் பூங்காவில் குழுமிய இம்மக்களை 27.03.2016 அன்று முசுலீம் மதவெறியர்களின் குண்டு வெடிப்பு கொன்று குவித்தது. 72 பேர்கள் கொல்லப்பட்டனர், 300 பேர்கள் படுகாயமடைந்தனர்.
கொல்லப்பட்டவர்களில் முப்பதுக்கும் மேற்பட்டோர் குழந்தைகள். கொல்லப்பட்டு, படுகாயமடைந்தவர்களில் முஸ்லீம்களும் உண்டு. பாகிஸ்தானில் ஷியாக்கள், அஹ்மதியாக்கள், கிறித்தவர்கள் மீது வகாபிய பிரிவைச் சேர்ந்த முஸ்லீம் பயங்கரவாதிகள் நடத்தும் படுகொலையினால் அந்நாடே சுடுகாடாகி வருகிறது. ஒரு நாடு மதவெறியில் சிக்கினால் என்ன ஆகும் என்பதற்கு பாகிஸ்தான் ஒரு சான்று.
முஸ்லீம் மதவெறியை உருவாக்கி வளர்த்த அமெரிக்காவில் அதன் குடியரசு வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லீம் பயங்கரவாதத்தை ஒழிப்பேன் என்று சவடால் அடிக்கிறார். அது உண்மையானால் அமெரிக்க அரசுதான் இஸ்லாமிய பயங்கரவாதத்தை உருவாக்கியதற்கு தண்டிக்கப்பட வேண்டிய முதல் குற்றவாளி.

பிரஸ்ஸல்ஸ் நகரில் ஐ.எஸ் பயங்ரவாதிகள் நடத்திய தாக்குதலை முதன்மைச் செய்தியாக வெளியிட்ட இந்திய நாளிதழ்கள் லாகூர் பயங்கரச் செய்தியை மூலைக்குத் தள்ளிவிட்டு கிரிக்கெட் வெற்றியை தலைப்புச் செய்தியாக வெளியிட்டுக் கொண்டாடுகின்றன. இந்தியாவையும் இந்துமதவெறி நாடாக மாற்றும் சதி நடைபெறும் போது ஊடகங்கள் இப்படித்தானே இருக்கும்?
இந்து மதவெறியோ இல்லை முஸ்லீம் மதவெறியோ இரண்டுமே ஒரு நாட்டை கவ்விப்பிடித்தால் அங்கே அன்றாடம் மரண ஓலம் கேட்டுக் கொண்டே இருக்கும்!
மதவெறியர்களுக்கு எதிராக உழைக்கும் மக்களாய் ஒன்றுபடுவோம்!
மதவெறி அமைப்புக்களை புறக்கணிப்போம்!
மதவெறியர்களையும் அவர்களின் புரவலர்களான ஆளும் வர்க்கங்களையும் முறியடிப்போம்!

கார்ட்டூன் நன்றி: Cartoon Movement
வினவு ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகள், கேலிச்சித்திரங்கள்.
இணையுங்கள்: