Monday, April 21, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கஇன்று டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகை

இன்று டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகை

-

மூடு டாஸ்மாக்கை – எனப் பேசுபவர்கள் தேசத்துரோகிகளா?
சாராயம் விற்று தாலி அறுப்பவர் தேசபக்தரா?

1. இன்று ஏப்.20, 2016 தமிழகம் முழுவதிலுமுள்ள டாஸ்மாக் மண்டல அலுவலகங்களை மக்கள் அதிகாரம் அமைப்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகிறது. இதன்படி விழுப்புரத்தில் நடக்கும் முற்றுகை போராட்டத்திற்கு கலந்து கொள்ளச் சென்ற மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு, ரயில் நிலையத்தில் வைத்து போலிசால் கைது செய்யப்பட்டார்.

2. சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில் இருக்கும் தாளமுத்து நடராசன் மாளிகையில்தான் டாஸ்மாக்கின் தலைமை அலுவலகம் உள்ளது. இன்று காலை சுமார் 11 மணியளவில் இந்த அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் தற்போது சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாளிகையின் மூன்று சாலைகளிலும் போராட்டம் நடைபெறுகிறது. போலிசார் ஒவ்வொரு போராட்டக்காரரையும் அடித்து இழுத்து வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று கைது செய்கின்றனர். இதனால் போராட்டம் தடைபடவில்லை. அனைத்து தொலைக்காட்சிகளிலும் போராட்டம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

3. மதுரை, கோவை, திருச்சி, விழுப்புரம் ஊர்களில் உள்ள டாஸ்மாக் மண்டல அலுவலகங்களும் மக்கள் அதிகாரம் அமைப்பினரால் முற்றுகை செய்யப்பட்டு வருகிறது. அனைத்து ஊர்களிலும் போலிசாருடன் தள்ளு முள்ளு ஏற்பட்டாலும் போராட்டம் முதன்மைச் சாலைகளில் தொடர்ந்து நடைபெறுகிறது.

டாஸ்மாக் தலைமை அலுவலகம்
முற்றுகை

தாளமுத்து நடராசன் மாளிகை, எழும்பூர், சென்னை
ஏப்ரல் 20, 2016, காலை 11.00 மணி

டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம்
முற்றுகை

சிட்கோ-துவாக்குடி, திருச்சி
ஏப்ரல் 20, 2016, காலை 11.00 மணி

shutdown-tasmac-posterதாலிக்கு தங்கம் தரும் அரசே
எங்கள் தாலியை அறுக்கவா டாஸ்மாக்?

தமிழகத்தை சீரழிக்கும்
டாஸ்மாக்கை ஒழிக்க
மக்கள் அதிகாரத்தை
கையிலெடுக்க வேண்டும்!

போதையும் போலீசும் ஒழிக!
சாராயம் விற்பது சமூக விரோதச் செயலா?
அரசின் சட்டபூர்வ தொழிலா?

மக்களை வதைக்கும் டாஸ்மாக்கை மூட
எதுக்கு தேர்தல்! எதுக்கு ஓட்டு!

மூடு டாஸ்மாக்கை!
நீங்களும் வாங்க இந்த சனியனை ஒழிக்க!

யாருக்காக அரசு? மூடு டாஸ்மாக்கை!
பீகாரில் மதுவிலக்கு,
கேரளாவில் மதுவிலக்கு…!
தமிழகத்தில்
மது ஒழிப்பு கோரினால்
தேச விரோத வழக்கு!

பீகாரில் கள்ளசாராயம்
விற்றால் மரணதண்டனை!
தமிழகத்தில்
மது ஒழிக்கப் போராடினால்
தேச விரோத வழக்கில் சிறை

சட்டமன்ற தேர்தல்
அதிகார போதைக்காக
நடக்க இருக்கும்
சட்டமன்ற தேர்தல்
இந்தப் போதையில் மூழ்கியவர்களால்
டாஸ்மாக்கை வீழ்த்த முடியாது!

வீட்டுக்கு ஒரு குடிகாரனை உருவாக்கிய
ஜெயா டாஸ்மாக்கை இழுத்து மூடுவோம்!

குடி நோயால் சாகக் கிடக்கும்
சமூகத்தை மீட்க
போராட்டமே ஒரே தீர்வு!

போதையில் இருந்து
தமிழகத்தை மீட்காமல்
நமது போராட்டம் ஓயாது

அருகதை இழந்தது அரசுக் கட்டமைப்பு
இதோ ஆள வருகுது மக்கள் அதிகாரம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு