Monday, April 21, 2025
முகப்புபோலி ஜனநாயகம்போலீசுதே…முண்ட ஏன்டி அரெஸ்ட் ஆக மாட்டேங்குற !

தே…முண்ட ஏன்டி அரெஸ்ட் ஆக மாட்டேங்குற !

-

தே…முண்ட ஏன்டி அரெஸ்ட் ஆக மாட்டேங்குற !

மதுரவாயல் மே 5, 2016 டாஸ்மாக் முற்றுகை

போர்க்களத்தில்………பாகம் 5

 

மதுரவாயல் நொளம்பூர் டாஸ்மாக் மூடும் போராட்டத்தில் போலிசு ஏவிய அடக்குமுறை குறித்த நேர்காணல் வீடியோக்களின் கடைசி பாகத்தில் செல்வி, வெண்ணிலா இருவரும் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றார்கள்.

சென்ற வீடியோவில் பேசிய கீதாவைப் போல வெண்ணிலாவின் இரு மகன்கள் மற்றும் கணவர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு போலீஸ் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கின்றனர். மகன் ஆகாஷ் மயக்கமடைய அவனைக் காப்பாற்றச் சென்ற வெண்ணிலாவும் அடிபடுகிறார். கணவர் தெய்வீகனுக்கு போலீஸ் பூட்ஸ் உதையால் உதடு கிழிந்து விட்டது. போலீசின் காட்டுமிராண்டித்தனத்தை நினைவுகூறும் வெண்ணிலா, எதற்கெடுத்தாலும் பாலியல் வசவுகளை வாந்தி எடுக்கும் போலீசை அம்பலப்படுத்துகிறார்.

போராட்டக் களத்தில் செல்வியை பிடித்து தள்ளி, தலை முடியைக் கொத்தாக பிடித்து அடித்து துவைக்கிறார்கள் போலீசார். இதில் இருபாலினத்தவரும் உண்டு. பொதுவில் பெண் போலீஸ் அதிகரிப்பதால் போலீசின் காட்டுமிராண்டித்தனம் குறைந்து விடுவதில்லை. இங்கு ஆண் போலீசோடு போட்டி போட்டுக் கொண்டு பெண் போலீசார் அடிக்கின்றனர். காவல் துறை ஆளும் வர்க்கத்தின் ஒரு அமைப்பு எனும் போது அரசின் அடியாள் எனும் போது இங்கே பாலினமோ இல்லை ஒடுக்கப்பட்ட சமூகம் எனும் பிரிவுகளோ எடுபடுவதில்லை.

மதுரவாயல் பகுதியில் டாஸ்மாக் கடைகளின் பாதிப்பை விளக்கும் செல்வி இறுதியில் விழுப்புரம் பகுதியில் ஒரு சிறுமியின் அனுபவத்தை கூறுகிறார். நெஞ்சை அடைக்கும் அந்த அனுபவத்தை பார்க்கும் போது டாஸ்மாக் கடைகளை மூடும் வரை அயராது போராடுவோம் என்கிறார் அவர். ஆம். இந்தப் போராட்டத்தின் பின்னே பல ஆயிரம் மக்களின் மரணம், விபத்து, வதை, தற்கொலை எனும் பெரும் காவியத் துயரம் இருக்கிறது.

நேர்காணல்: வினவு செய்தியாளர்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க