Wednesday, April 16, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கமுதலாளித்துவத்தைக் கொல்வோம் - பிரான்ஸ் மாணவர்கள் - படங்கள்

முதலாளித்துவத்தைக் கொல்வோம் – பிரான்ஸ் மாணவர்கள் – படங்கள்

-

கடந்த மாதம் மே 31ம் தேதி உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது, பிரான்ஸ் மாணவர்களும் தொழிலாளிகளும் இணைந்து நடத்திய மாபெரும் போராட்டம். தொழிலாளர் சட்டத்தில் சீர்திருத்தங்களை கொண்டு வருவதாக கூறி அவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் செயலில் ஈடுப்பட்டது பிரான்ஸ் அரசு. இதனை முறியடிக்கும் வகையில் தொழிலாளர்கள் போராட்டங்களை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக கடந்த மே மாதம் நடந்த போராட்டத்தில் மாணவர்களும் கலந்து கொண்டு முதலாளித்துவக் கோட்டையை அச்சுறுத்தினர்.

இந்தப் போராட்டம் பல இடங்களில் அமைதியான முறையில் நடந்தாலும் சில இடங்களில் அரசு அடக்குமுறையால் வன்முறையில் முடிந்தது. இந்த அடக்குமுறையின் போது கிழக்கு பாரிசில், முகமூடி அணிந்த சில போராட்டக்காரர்கள் ஆளும் வர்க்கத்தின் கஜானவாக செயல்படும் வங்கிகளிலும் கடைகளிலும் பெயிண்ட் குண்டுகளை வீசினர். சில இடங்களில் போலீசாரால் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.

மேற்கு பிரான்சில் உள்ள நாண்டீஸ் மற்றும் ரேன்ஸ் நகரங்களில் சில இளம் போராட்டக்காரர்களுக்கும் போலீசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மாதத்தில் இது நான்காவது ஆர்ப்பாட்டமாகும். வாரத்தில் 35 மணிநேரம் பணி என்கிற சட்ட திருத்தத்தை அரசு திரும்ப பெற வேண்டும் என இரயில் ஓட்டுநர்கள் மற்றும் ஆசிரியர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டனர். இதனால் பள்ளிகள் மருத்துவமனைகள் மற்றும் அரசு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.