
காஷ்மீரில் நடைபெறும் போராட்டங்களை இந்திய அரசு ஒடுக்குவதின் விளைவாக இதுவரை 37 பேர்கள் கொல்லப்பட்டனர். கூடுதலாக பலருக்கும் கண்பார்வை பறிபோய் விட்டது. உயிரைப் பறிக்கும் துப்பாக்கி போக உயிரைப் பறிக்காத சிறு குண்டுகளை உமிழும் ஏர் கன் துப்பாக்கிளையும் பாதுகாப்பு படைகள் பயன்படுத்துகின்றனர். இவை உடலில் காயம் ஏற்படுத்துவதோடு, கண்ணில் பட்டால் பார்வை பறிபோய்விடும்.
காஷ்மீர் மருத்துவர்கள் கூற்றுப்படி இதற்கு முன்னர் வட்ட வடிவமாக இருந்த இந்த குண்டுகள் தற்போது கூர்மையான அதிகம் காயம் ஏற்படுத்தும் வடிவில் இருக்கின்றன. இதனால் மக்கள் அதிக ஆழத்துடன் காயமடைகின்றனர்.
2010-ம் ஆண்டில் இதே போன்றொதொரு கல்லெறி போராட்டம் நடைபெற்ற போது நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் காஷ்மீரில் கொல்லப்பட்டனர். அப்போதுதான் இந்த ஏர்கன் சிறு குண்டு துப்பாக்கி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த துப்பாக்கியினுள் இருக்கும் கேட்ரிஜ் என்ப்படும் தோட்டாப்பையில் சில நூறு குண்டுகள் இருக்கும். ஒரு முறை சுட்டால் எதிர் முனையில் ஒரே தடவையில் நூற்றுக்கணக்கான குண்டுகளை உமிழும்.

மக்களை உடனே கொல்வதற்கு பதில் இந்த குண்டுகள் சித்திரவதை செய்து கொல்கிறது அல்லது வதைக்கிறது. தற்போது இந்த குண்டினால் பாதிப்படைந்தோரின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 117 பேர்களில் 106 பேருக்கு அறுவைசிகிச்சை நடந்து அதில் ஐவருக்கு ஒரு கண் முற்றிலும் பறிபோயிருக்கிறது. மேலும் கண்களில் பாய்ந்திருக்கும் குண்டு துகளையும் பல நேரங்களில் எடுக்க முடியவில்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து சென்ற கண் மருத்துவர்களோ இந்த துப்பாக்கிகளை தடை செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர்.

14 வயது இன்ஷா மாலிக் ஸ்ரீநகர் மஹாராஜா ஹரிசிங் மருத்துவமனை ஐசியூ வில் நினைவின்றி கிடக்கிறார். அவரது இரு கண்களையும் காஷ்மீர் போலீசார் இந்த ஏர் கன் சிறு குண்டுகளால் துளைத்தெடுத்துவிட்டனர். இனி என்ன செய்தாலும் கண்பார்வையை மீட்கவே முடியாது. அப்பெண்குழந்தையின் வலது கண் சிதைக்கப்பட்டுள்ளது; இடது கண்ணோ கிழிக்கப்பட்டுள்ளது. இனி அவள் வாழ்நாள் முழுவதும் பார்வையில்லாமல் கழிக்க வேண்டும். ஜூலை 8 புர்ஹான் முசாஃபர் வானி படுகொலைக்குப் பின்னர் நூற்றுக்கணக்கான சாதாரண மக்கள் மேல் காஷ்மீர் போலீசும் இந்திய துணைஇராணுவமும் கட்டவிழ்த்து விட்ட பயங்கரத்தால் பாதிக்கப்பட்ட் ஆயிரக்கணக்கானவர்களில் இவளும் ஒருத்தி. சோஃபியான் மாவட்டத்தின் சீடோ கிராமத்தில் ஒன்பதாம் வகுப்பில் முதல் மாணவியான இக்குழந்தை செவ்வாய்க்கிழமை இரவு வீட்டிற்குள் அமர்ந்து இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது போலீஸ் கண்மூடித்தனமாக பெல்லட் கண்ணால் சுட்டதில் சமயலறைக்குள் இருந்த அப்பெண்ணின் கண்பார்வை பறிக்கப்பட்டுள்ளது.
2014-ல் எதிர்க்கட்சியாக இருந்த மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி இந்த துப்பாக்கிகளை பயன்படுத்துவதை கடுமையாக கண்டித்தார். காஷ்மீர் இளைஞர்களின் பார்வையை பறிக்கும் சதி என்ன்றெல்லாம் கூறினார். தற்போது அவரும் முதலமைச்சராக இருந்து அதை வேடிக்கை பார்க்கிறார். போராட்டக்காரர்களை கொல்லாத துப்பாக்கி என்ற பெயரில் இப்படியாக கண்கொள்ளாக் காஷ்மீரின் கண்கள் பிடுங்கப்படுகின்றன. கீழே ஐந்து வயது சோஹ்ரா எனும் சிறுமி இந்த துப்பாக்கியால் தாக்கப்பட்டு தனது மழலை மொழியில் பேசுகிறாள், பாருங்கள்! ஒரு வேளை அவளும் எல்லா தாண்டிய பயங்கரவாதியோ!

5 வயது சிறுமியினாக சோஹ்ராவின் வாக்குமூலம் – வீடியோ
படங்கள், வீடியோ நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்
மேலும் படிக்க
What are pellet guns and why are they so lethal?