Saturday, April 19, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விசென்னையில் ஆர்ப்பாட்டம் - பென்னாகரத்தில் வாசகர் வட்டம்

சென்னையில் ஆர்ப்பாட்டம் – பென்னாகரத்தில் வாசகர் வட்டம்

-

களச் செய்திகள் 22/07/2016

1. மாணவர் லெனின் கொல்லப்பட்டதைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் – படங்கள்

பத்திரிகை செய்தி

பொறியியல் பட்டதாரி லெனின் மரணம் தற்கொலையல்ல – கொலையே!
கொலைக்கு பாரத ஸ்டேட் வங்கியும், அடியாள் ரிலையன்சுமே பொறுப்பு!

பு:மா.இ.மு கண்டன ஆர்ப்பாட்டம்:  நாள் – 217.16 நேரம் – காலை 11.30 மணி, இடம் – s8, மண்டல அலுவலகம், பாரிமுனை, சென்னை-1.

துரை அவனியாபுரத்தைச் சேர்ந்த கொத்தனார் கதிரேசன் என்பவரது மகன் சிவில் இன்ஜினியரிங் பட்டதாரியான லெனின், பாரத ஸ்டேட் வங்கியின் கடன் வசூல் அடியாளாக நியமிக்கப்பட்ட ரிலைன்ஸ் நிறுவனத்தால் கொலை செய்யப்பட்டிருக்கிறார். மாணவன் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டுமெனில் அவனுக்கு வேலை கிடைக்க வேண்டும், 100% கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வு என்று கல்லூரிகள் உத்திரவாதம் கொடுக்கும் போது ஏன் இவ்வளவு இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர்

இந்த தனியார் கல்லூரிகளின் வேலைவாய்ப்புமோசடியைக் கண்காணிக்கிறதா இந்த அரசு? படித்தவர்களின் வேலைவாய்ப்பினை உறுதிப்படுத்துகிறதா இந்த அரசு இதனை செய்யாமல் மாணவர்களை கல்விக்கடன் என்ற புதைகுழியில் தள்ளுகிறது அரசு-வங்கி- தனியார் கல்லூரிகள் என்ற இந்த முக்கூட்டு களவாணிகளின் லாபவெறிக்கு உருவாக்கப்பட்ட இந்த மாயவலையில் சிக்கிய லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து முடித்து வேலை கிடைக்காமலும், கல்விக்கடனைக் கட்ட முடியாமலும் பரிதவித்துவருகின்றனர்

இத்தகைய சூழலில் தான் ஏழை கொத்தனார் கதிரேசன் தனது மகன் லெனினை சிவில் இன்ஜினியர் ஆக்க ஆசைப்பட்டிருக்கிறார். பலமுறை அலைந்து திரிந்து தனது மகனுக்கு அரசு தாராளமாக வழங்க உத்தரவிட்டிருக்கும் கல்விக்கடனை பாரத ஸ்டேட் வங்கியிடம் வாங்கி ஒரு தனியார்கல்லூரியில்  இன்ஜினியரிங் சேர்த்துவிடுகிறார். படித்து முடிக்கின்ற பொழுது லெனின் பல லட்சம் இளைஞர்களில்  ஒருவராக வேலைவாய்ப்பு சந்தையில் தள்ளப்படுகிறார்

வேலை கிடைக்க தாமதமாகி வந்த நிலையில் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி கல்விக்கடன்களை வசூலித்துக் கொள்ளும் உரிமையை ஏற்கனவே பலலட்சம் கோடி வாராக்கடனை வைத்திருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் 40% விலைக்கு கொடுக்கிறது. விஜய் மல்லையாபோன்ற கார்ப்பரேட் முதலாளிகளிடம் வாராக்கடனை வசூலிக்கும் உரிமையை வாங்கத் துணியாத ரிலையன்ஸ் நிறுவனம் மல்லையாவிடம் கடன் வசூலிக்க சென்றால் அவன் வேறு ஒரு நிறுவனம் மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் வாராக்கடனை வசூல் செய்யும் நிலைமை உருவாகலாம்) மிக எளிதில் மிரட்டி உருட்டி மாணவர்களிடம் வாங்கி விடலாம் என்பதால் இதனை வாங்குகிறது

மாணவர்கள் வேலை கிடைத்ததும் கட்ட வேண்டிய கடன்தொகையை வேலை கிடைக்கும் முன்பே உடனடியாக வசூல் செய்ய ரிலையன்ஸ் நிறுவனம் தனது அடியாள் குண்டர்படையை ஏவிவிடுகிறது. இதே போன்றதொரு நிலைமையில் தான் கதிரேசனும், அவரது மகன் லெனினும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அடியாள்படையால் மிரட்டப்படுகின்றனர். ஒரு மாதமாக இந்த மிரட்டல் தொடர்ந்த பொழுது, அன்றாடம் உழைத்துக் கிடைக்கும் வருமானம் மட்டுமே உடைய கதிரேசன் மிரட்டலை எதிர்கொள்ள முடியாமல், கடன் வாங்கியாவது ரிலையன்ஸ் அடியாட்கள் கோரிய முதல் தவணையாக ரூபாய் 50,000 கட்ட ஒப்புக்கொள்கிறார். அந்தப் பணத்தைக் கதிரேசன் தயார்செய்து கொண்டிருக்கும்போதே லெனினுக்கு ஜூலை 16-ம் தேதி அன்று ஒரு போன் வருகிறது “உங்கள் விட்டிற்கு ஆட்கள் வந்து மிரட்டுவார்கள், உன் குடும்பத்தை அவமானப்படுத்துவார்கள் என்றெல்லாம்ரிலையன்ஸ் அடியாட்கள் மிரட்டியுள்ளனர். இதனால்தன்னை கஷ்டப்பட்டு வளர்த்து படிக்க வைத்த தந்தை தன்னால் மேலும் கஷ்டத்தை அனுபவிப்பதை சகித்துக் கொள்ள முடியாது லெனின் தற்கொலைசெய்துகொள்கிறார்

புமா.இ.மு இந்த மரணத்தைத் தற்கொலையாக பார்க்கவில்லை. தனியார் கல்லூரிகளின் லாபவெறிக்கு தீனியோடும் அரசு -பாரத ஸ்டேட் வங்கி – ரிலையன்ஸ் மூன்றும் சேர்ந்து நடத்திய படுகொலையாகவே கருதுகிறது. இதற்கு வன்மையான கண்டனங்களைத் தெரிவித்து இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் புமா.இ.மு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த.கணேசன் கலந்து கொண்டு கண்டனம் தெரிவித்தார். திரளான மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

ஒவ்வொருவரின் அடிப்படை உரிமையான கல்வி பெறுவதற்காக கல்விக்கடன் வாங்கும்படி அரசால் தள்ளப்பட்ட மாணவர்கள் கல்விக்கடனைத் திருப்பி செலுத்த வேண்டாம் என அறைகூவல் விடுக்கிறது. கல்வியை இலவசமாக கொடுக்க வேண்டியது அரசின் கடமை. அதை செய்ய தவறிய அரசே கார்ப்பரேட் முதலாளிகளின் வாராக்கடனை வதுலித்து மாணவர்களின் கல்விக் கடனைத் திருப்பிசெலுத்து என்றுபோராட மாணவர்களை அறைகூவி அழைக்கிறது

 

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இவண்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
எண் 41, பிள்ளையார் கோவில் தெரு, மதுரவாயல், சென்னை – 95
தொடர்புக்கு: 94451 12575

2. புதிய ஜனநாயகம் வாசகர் வட்டம் – பென்னாகரம் பகுதி

பென்னாகரத்தில் நடைபெற்ற ஜூலை மாத புதிய ஜனநாயகம் வாசகர் வட்டத்தில் மக்கள் கருத்துகள்:

ரேந்திர மோடி வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்வது வீண்வேலை என்று மக்கள் கருதி வந்த நிலையில், ஆளும் வர்க்கத்தின் முகத்திரையை கிழிக்கும் வகையில் பாசிச கோமாளி என்று இடம் பெற்றது சிறப்பாக இருந்தது. அட்டைப்படத்தை பார்த்த உடன் வாசகர்கள் பலரும் சிரித்தவாறே இதழை வாங்கினர்.

மேலும் ஆர்.எஸ்.எஸ்.இன் தேசபக்தியைத் தோலுரித்த ரகுராம் ராஜன் கட்டுரையில் நிறைய விவரங்களை தொகுப்பாக கற்றுக்கொள்ள முடிந்தது. எந்த பத்திரிக்கையிலும் இவ்வளவு விவரமாக இடம்பெறவில்லை ஆர்.எஸ்.எஸ்-ஐ பாதுகாக்கும் வகையில் எழுதிவந்த மற்ற பத்திரிக்கைகள் மத்தியில், பு.ஜ -வில் இக்கட்டுரை வந்தது சிறப்பாக இருந்தத என்ற பலரும் தெரிவித்தனர்.

அடுத்தாக, மதன் காணாமல் போய்விட்டார்! பச்சமுத்து அரசால் பாதுகாக்கப்படுகிறார்! என்ற கட்டுரையில் பலரும் கருப்பு பணத்தை சுவிஸ் வங்கியில் பதுக்கி வைக்கின்றனர். ஆனால் பச்சமுத்து மடங்கள், மருத்துவமனைகள்,கல்வி நிறுவனங்கள், ஊடகங்கள் ஆகியவற்றில் பதுக்கி வைக்கும் கருப்பு பண பேர்வழி பச்சமுத்துவை அரசே பாதுகாக்கிறது என்று அவரின் தில்லுமுல்லு தனத்தை புட்டு வைக்கும் விதமாக சிறப்பாக இருத்தது.

குல்பர்க் சொசைட்டி தீர்ப்பு குறித்து சிலர் புரியவில்லை என்று கருத்து தெரிவித்தனர். இதுகுறித்து வாசகர் வட்டத்தில் விவாதித்த பிறகு புரிந்து கொண்டதாக தெரிந்து கூறினர். இம்மாத கட்டுரையில் நிறைய எழுத்துப்பிழை இடம்பெற்றுள்ளது.

சி.பி.ஐ யை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், “ஒருகாலத்தில் காங்கிரஸ்க்கு எதிர் கட்சியாக சி.பி.ஐ இருந்தது. ஆனால் இன்றைக்கு அது வேலைக்கு ஆகவில்லை, ஏனென்றால் எங்க கட்சி தொழிற்சங்கத்திலேயே லட்சகணக்கில் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் எங்களுக்கு ஓட்டுபோடுவதில்லை. மாற்று கட்சிக்குக்கு தான் ஓட்டு போடுகிறார்கள். எல்லாமே ஆதாயத்துக்குதான் இருக்குறாங்க. அதனால இதை எல்லாம் பலப்படுத்துனும்னா, கொஞ்ச நாளுக்கு தேர்தல் நிக்கிறதை விட்டுட்டு மக்கள் பிரச்சனைகளுக்குகாக போராடுனும்” என்று கருத்து தெரிவித்தார். மேலும், “இந்தியா முழுவதும் உள்ள கம்யூனிஸ்டுகள் ஒன்று சேர்ந்தால் நிச்சயமாக மாற்றத்தை கொண்டுவந்து விடமுடியும் என்று இந்த அரசு கட்டமைப்புக்குள்ளே தீர்வு காணமுடியும்” என்று இத்து போன ஜனநாயகத்தை தூக்கி நிறுத்தி பேசுகிறார். இவர்களுக்கு சரியான பதில் அளிக்கும் வகையில் இம்மாத இடம் பெற்றுள்ளது சிறப்பாகும்.

ஊத்தங்கரையை சேர்ந்த சி.பி.எம் ஒன்றிய செயலாளர், “கம்யூனிஸ்ட் கட்சி நல்லதுதாங்க. அதில் இருக்கூடிய சில ஆளூங்க தான் சரியில்லை, டில்லிபாபு சரியில்லை, சி.பி.ஐ கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறிக்கும் கட்சியாக மாறிடுச்சு, சி.பி.எம் ஓரளவுக்கு பரவாயில்லை என்ன செய்யிறது நான் 17 வயதில் இருந்து இந்தக் கட்சியில் இருக்கிறேன். நாங்க எல்லாம் மக்கள் நலக் கூட்டணியில சேருவதற்கு எதிர்ப்பு தெரிவிச்சோம். ஆனாலும் தலைமை கேட்கவே இல்லை, இதனால் தேர்தல் வேலையை உறுப்பினர்கள் யாரும் செய்யவே இல்லை” என்று கருத்து தெரிவித்தார். இதனால் இம்மாதம் இடம்பெற்றுள்ள சட்டமன்ற தேர்தல்களில் போலி கம்யூனிஸ்டுகளின் தோல்வி; கட்டெறும்பானது கழுதை என்ற கட்டுரையை மட்டும் ஜெராக்ஸ் எடுத்து இந்த அணிகள் மத்தியில் விநியோகிக்கலாம் என்ற கருத்தையும் தெரிவித்தனர்.

குறிப்பாக கடந்த இரண்டு மாதங்களாகவே போக்குவரத்து தொழிலாளர்கள் சி.பி.ஐ யை சேர்ந்த தொழிற் சங்க தொழிலாளர்கள் வாசகர் வட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிப்பது அவர்களின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்துவது என்று இருந்து வருகின்றனர். புதிய புதிய நபர்கள் கலந்து கொண்டு வருவது அதிகரித்திருக்கிறது. அதோடு பெண்களும் கலந்து கொண்டனர். அப்போது, “என்னால் கருத்து சொல்ல முடியவில்லை. ஆனால் நீங்கள் பேசியது புரிந்து கொள்ள முடிந்தது. அடுத்த மாதம் வரும்போது இதழை படித்து நானும் விவாதத்தில் கலந்து கொள்வேன்” என்று ஆர்வமாக கூறினர். இறுதியாக அன்றாடம் நடக்கும் கொலை, கொள்ளை, பெண்கள் மீதான பாலியல் வன்முறை குறித்து விவாதம் நடந்தது. அதற்கான தீர்வும் கூறி வாசகர் வட்டத்தை முடிவு பெற்றது.

இப்படிக்கு

இரா.சுந்தரம்.
பென்னாகரம் முகவர்.
(21-07-2016)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க