Tuesday, April 22, 2025
முகப்புசெய்திபு.ஜ.தொ.மு அறிக்கை - கோவை ம.க.இ.க : களச் செய்திகள்

பு.ஜ.தொ.மு அறிக்கை – கோவை ம.க.இ.க : களச் செய்திகள்

-

1. வழக்கறிஞர் போராட்டத்தை ஆதரித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி பத்திரிகை செய்தி

30.07.16

நீதிமன்ற பாசிசத்துக்கெதிரான வழக்கறிஞர் போராட்டத்தை ஆதரிப்போம்!

கடந்த ஜூல் 25-ந் தேதி, வழக்கறிஞர்கள் சட்டம் பிரிவு 34 (1) ல் திருத்தம் செய்வதை எதிர்த்தும், கண்டித்தும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு.கவுலை மாற்ற கோரியும் தமிழக – புதுவை வழக்கறிஞர்களின் சங்கம் தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்காத நீதிமன்ற செயலை கண்டித்து நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆதரிக்கிறது. ஏனெனில் இதனை சட்டரீதியான பிரச்சினை என சுருக்கி பார்க்க கூடாது. போராடுகின்ற மக்களுக்கு உறுதுணையாக நிற்பவர்கள் வழக்கறிஞர்கள் தான். ஆதலால் இப்போது வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக களத்தில் நிற்க வேண்டியது மக்களின் கடமை.

தலைமை நீதிபதி கவுலின் சர்வாதிகாரத்துக்கும், பார் கவுன்சில் செல்வம் – பிரபாகரனின் துரோகத்துக்கும் முதல் உயிர் பலியாக்கப்பட்டுள்ளார், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 126 வழக்கறிஞர்களில் ஒருவரான நெல்லை வழக்கறிஞர் சங்கத் தலைவர் திரு. P. முத்துராமலிங்கம். போராடுபவர்களின் பெயர்களைக் கொடுங்கள் என கேட்டதற்கு மறுத்ததால் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். காட்டிக்கொடுப்பது அவமானம், போராடுவதே தன்மானம் என வாழ்ந்து மரணமடைந்துள்ளார், திரு. P. முத்துராமலிங்கம். எத்தனை இழப்புகள் வந்தாலும் தன்மானத்துடன் போராடும் வழக்கறிஞர்களின் மீதான ஒழுங்கு நடவடிக்கையை கைவிட கோரியும், கருப்பு சட்டத்தை வாபஸ் வாங்க வேண்டும் என போராடிய, போராடுகின்ற வழக்கறிஞர் சங்கத்திற்கு பு.ஜ.தொ.மு என்றும் தன் ஆதரவை தரும்.

மேலும், கடந்த ஜூலை 25-ம் தேதி நடந்த உயர்நீதிமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு பிறகு, தற்காலிமாக இந்த சட்ட திருத்ததை நிறுத்தி வைப்பதாக தலைமை நீதிபதி அறிவித்து இருந்தாலும், ஏற்கெனவே அதாவது ஜூலை 24-ம் தேதி சஸ்பென்சன் செய்யப்பட்ட 126 பேர், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 5 வழக்கறிஞர்கள் மற்றும் ஹெல்மெட் பிரச்சினை காரணமாகவும், தமிழில் வாதாட அனுமதி வேண்டும் என போராடி சஸ்பென்சனில் உள்ள வழக்கறிஞர்களின் மீதான மொத்த ஒழுங்கு நடவடிக்கையும் கைவிட்டு சஸ்பென்சனை ரத்து செய்யயும் வரை போராட்டத்தை வாபஸ் பெறுவதில்லை எனவும், அது வரை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்திலும் ஈடுபட போவதாக வழக்கறிஞர்கள் போராட்ட கூட்டுக்குழுவின் தீர்மானத்தை பு.ஜ.தொ.மு ஆதரிக்கிறது. மேலும் வழக்கறிஞர்களின் ஜனநாயகப்பூர்வமான இந்த போராட்டத்தை மக்கள் மத்தியில் அரசியல் பிரச்சாரமாக பல்வேறு வகையில் கொண்டு செல்வது என தீர்மானித்துள்ளோம்.

இவண்,

சுப.தங்கராசு.
மாநில பொதுச் செயலாளர்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி. தமிழ்நாடு.
தொடர்புக்கு – 9444834519

2. பெண்கள் மீதான வன்கொடுமைகளை கண்டித்து கோவை மக்கள் கலை இலக்கியக் கழகம் ஆர்ப்பாட்டம்

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்டுவோம் என்ற தலைப்பில் 26-07-2016 செவ்வாய் கிழமை மாலை 4.30 மணி அளவில் கோவையில் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம், கோவை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க