Wednesday, April 23, 2025
முகப்புசெய்திசெப் 1 சென்னை பொதுக்கூட்டம் மற்றும் களச் செய்திகள்

செப் 1 சென்னை பொதுக்கூட்டம் மற்றும் களச் செய்திகள்

-

new-education-policy-rsyf-meeting1. சென்னையில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக பொதுக்கூட்டம்

மீண்டும் மனுதர்ம ஆட்சி!மீண்டும் காலனியாக்கம்!
சேட்டுகள் – பார்ப்பனர்களின் சதித்திட்டத்தை முறியடிப்போம்!

மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து…
செப்டம்பர் 1, 2016 மாலை 5 மணி

பொதுக்கூட்டம்

மதுரவாயல், எம்.எம்.டி.ஏ EB ஆபிஸ் அருகில், சென்னை

தகவல்

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
சென்னை, 94451 12675

seerkazhi-pp-road-roko2. காவிரி உரிமை நிலைநாட்டிட சீர்காழியில் சாலை மறியல்

காவிரியில் தமிழகத்தின் நீர் உரிமையை நிலைநாட்டிட!
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட!
காவிரிநீர் பங்கீட்டு ஒழுங்காற்று ஆணையம் உடனடியாக அமைத்திட!
மேக தாட்டுவில் கர்நாடகா அணை கட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்திட!

சாலை மறியல் போராட்டம்

நாள் : 30-08-2016 நேரம் : காலை 10.00 மணி இடம் : கொள்ளிட முக்கூட்டு, சீர்காழி

தகவல்
மக்கள் அதிகாரம்
விவசாயிகள் விடுதலை முன்னணி,
விவசாயிகள் சங்கங்கள்
தொடர்புக்கு : தோழர் ரவி, 98434 80587

new-education-policy-rsyf-demo-kovilpatti-23. கோவில்பட்டியில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

மோடி அரசு முன்வைத்துள்ள புதிய கல்விக்கொள்கை 2016-ஐ கண்டித்து 24-08-2016 மாலை  40 மாணவர்கள் உட்பட 50 பேர் கலந்து கொண்ட பேரணியும் ஆர்ப்பாட்டமும் கோவில்பட்டியில் பயணியர் விடுதி முன்பு நடந்தது. அனைவரும் முழக்கமிட்டபடி பேரணியாக வந்து அணிவகுத்து நின்றனர். பு.மா.இ.மு.தோழர் சிவா தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். பு.மா.இ.மு.தோழர் மாரிமுத்து நன்றியுரையாற்றினார். மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் ஆதி எழுச்சிகரமாக ஆர்ப்பாட்ட முழக்கமிட்டார். 500 க்கும் மேற்பட்ட மாணவர்களும், பொதுமக்களும் சுற்றி நின்று கவனித்து பிரசுரங்களை வாங்கிச்சென்றனர். போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் இனி வரும் காலங்களில் “அதிகம்பேரை திரட்டி தொடர்ந்து போராடணும்.” என்றனர்.

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கோவில்பட்டி

4. விருத்தாசலத்தில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

new-education-policy-virudai-demo

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க