Tuesday, April 22, 2025
முகப்புசெய்திகளச் செய்திகள் - 31/08/2016

களச் செய்திகள் – 31/08/2016

-

1. விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து பென்னாகரத்தில் தெருமுனைக் கூட்டம்

pennagaram-meeting-supporting-farmers-1மிழகத்தை பாலைவனமாக்கி, மீத்தேன் திட்டத்தை நிறைவேற்ற மேக்கேதாட்டுவில் அணைகட்டும் சதித்திட்டத்தை முறியடிப்போம்! என்ற முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம் சார்பில் பென்னாகரம் கடைகளில் பிரச்சாரம் செய்யப்பட்டது; 30-08-2016 அன்று காலை 11 மணியளவில்  தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் விவசாயிகள் காவிரி நீரை விடக்கோரி போராடிக்கொண்டிருக்கின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலும், இப்பகுதி மக்களை போராட உணர்வூட்டும் வகையிலும் தெருமுனை கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்திற்கு மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் இராஜா தலைமை தாங்கினார். அவர் பேசும்போது, “கர்நாடகா மேக்கேதாட்டுவில் தமிழகத்திற்கு வரும் தண்ணீரை தடுக்க அணை கட்டுகின்றனர். டெல்டா விவசாயிகள் சித்தராமைய்யாவிடம் தண்ணீர் விடக் கோரி கேட்கும்போது விடமுடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். காவிரி தண்ணீர் தமிழகத்தின் உரிமை. மத்திய மாநில அரசு இதைப் பற்றி கண்டு கொள்வதில்லை. ஆகவே, மக்கள் அனைவரும் நம் உரிமையை நிலைநாட்ட போராடவேண்டும். மத்திய மாநில அரசுகள் இதைப் பற்றி கண்டு கொள்வதில்லை. ஆந்திரா, கேரளாவில் அணை கட்டவுள்ளனர். நம் உரிமையை மீட்க இன்றைக்கு தவறவிட்டோம் என்றால் எப்பவும் உரிமையை மீட்க முடியாது. நம்நாட்டை பாலைவனமாக்கி டெல்டாவில் உள்ள மீத்தேன், நிலக்கரியை எடுக்கத் துடிக்கின்றனர். டெல்டா மாவட்டத்தில் உள்ள விளைநிலங்களை தரிசாக்க கர்நாடகா மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு வரும் தண்ணீரை தடுக்க அணைகட்டுகின்றனர். இதேபோன்று ஆந்திரா, கேரளாவில் அணை கட்டவுள்ளனர்” என்று மக்களுக்கு உறைக்கும்படி பேசினார்.

மக்கள் அதிகாரம் தோழர் கோபிநாத் பேசும்போது, “டெல்டாவில் தண்ணீர் விடாமல் 17 இலட்சம் ஹெக்டேர் நிலம் தரிசாக உள்ளது. 149 டீஎம்சி தண்ணீர் விட வேண்டும். இது நம் உரிமை. நம் உரிமையை மீட்க விவசாயிகள் போராடுகின்றனர். அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும் கர்நாடக காங்கிரசு அரசின் சதித்திட்டத்தை முறியடிக்க இந்த தெருமுனை கூட்டம் நடைபெறுகிறது” என்று பேசினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
பென்னாகரம்

2. காண்டிராக்ட் சுரண்டலை எதிர்த்து பு.ஜ.தொ.மு ஆர்ப்பாட்டம்

ndlf-demo-against-corporate-barbarismமுதலாளித்துவம் கொல்லும்! கம்யூனிசமே வெல்லும்!!

விவசாயம் – நெசவு – சிறுவணிகம் சிறுதொழில்களை அழித்து
காண்டிராக்ட் சுரண்டலை தீவிரப்படுத்துகின்ற கார்ப்பரேட் காட்டாட்சிக்கு முடிவு கட்டுவோம்!

செப்டம்பர் 2 கண்டன ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் அருகில் காலை 10 மணி
ஆவடி அண்ணா சிலை அருகில் காலை 10 மணி
காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் எதிரில் மாலை 4.30 மணி

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
காஞ்சிபுரம், திருவள்ளூர் (கிழக்கு), (மேற்கு)- மாவட்டங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க