Tuesday, April 22, 2025
முகப்புசெய்திபெரியார் மண்ணில் பெண்கள் மீதான தாக்குதலை அனுமதியோம் !

பெரியார் மண்ணில் பெண்கள் மீதான தாக்குதலை அனுமதியோம் !

-

பெண்கள் மீதான தொடர் பாலியல் வன்முறைகள், படுகொலைகளை கண்டித்து பெண்கள் விடுதலை முன்னணி சார்பாக 03-09-2016 காலை 11 மணியளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியார் சிலை முன்பு தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் செய்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.wlf-demo-against-attack-on-women-01

போராட்டத்துக்கு பெ.வி.மு அமைப்புக்குழு தோழர் வசந்தி தலைமையேற்றார்.

அதில் விண்ணதிர போடப்பட்ட முழக்கங்கள்:

உழைக்கும் மக்களே!

ஆசிட் வீச, கழுத்தை அறுக்க,
அடித்து கொல்ல,
மிருகத்தனமான சிந்தனையைத் தூண்டிய
சினிமா கழிசடைகள்
வியாபார ஊடகங்களை புற்க்கணிப்பீர்!

பாலியல் வெறியர்களை உருவாக்கும்,
ஆபாச இணைய குப்பைகள்
மஞ்சள் பத்திரிக்கைகளை
தீயிட்டு கொளுத்துவோம், வாரீர்,

கடந்த சில நாட்களாக ஒரு தலைக்காதலால் பழிவாங்குவது எனும் கொலை வெறியில் இளைஞர்கள் ஈடுபட்டு இளம் பெண்கள் குதறப்படுகின்றனர், இது பார்ப்பவர் நெஞ்சை பதை பதைக்க வைக்கிறது, இதன் குற்றவாளிகள் யார்?

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ஆபாச சீரழிவை பரப்பும் இணைய குப்பைகள்
நாட்டையே சுய நினைவு இழக்க வைக்கும் டாஸ்மாக் போதை,
மஞ்சள் பத்திரிக்கைகள், ஆபாச சினிமாக்கள்,
சிம்பு அனிருத், தனுஷ் போன்றவர்களின் கொலைவெறி பாடல்கள்,
கட்டை … கட்டை … நாட்டுகட்டை … காதலிக்கலன்னா? உருட்டுக்கட்ட
அடிடா அவள … வெட்ரா அவள …
போன்றவை
கொலைவெறியை தூண்டி சிதைக்கிறது பெண்ணினத்தை
பெண்கள் வாழும் தகுதியை இழந்துவிட்டது நம் சமூகம்

எனும் முழக்கத்துடன் மறியலில் ஈடுபட்டனர்.

wlf-demo-against-attack-on-women-02காவல்துறை கைது செய்து வேனில் ஏற்றியது, மண்டபத்திலும் தோழர்கள் தமது எழுச்சியை காட்டினர், பெண் தோழர்கள் தமது அனுபவங்கள், வெளியில் உள்ள பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள், பள்ளி மாணவிகளின் அனுபவங்கள் என உரையாற்றினார்கள்.

தாம் கைதாகி இருக்கிறோம் எனும் நிலை மறந்து சிறு குழந்தைகள் மழலை மொழியால் புரட்சிகர பாடல்கள் பாடி அனைவரையும் வியக்க வைத்தனர்.

திருச்சியில் கண்டோன்ட்மெண்ட் எஸ்.ஐ-யின் மகளும் ஒருதலை காதலால் கத்திக்குத்தால் பாதிப்படைந்து உள்ளதை தோழர்கள் நினைவு கூர்ந்து கூறும் போது பெண் காவலர்கள், வாழ்த்தினர், நாங்க செய்ய முடியாததை நீங்க செய்யிறீங்க என்றனர்.

இப்போராட்டத்தின் வாயிலாக அழுகி நாறும் சமூகத்தை மாற்றாமல் இது போன்ற சீரழிவுகள் ஒழியாது என மக்களுக்கு அறைகூவினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்:
பெண்கள் விடுதலை முன்னணி,
திருச்சி

wlf-poster-against-attacks-on-women