Wednesday, April 23, 2025
முகப்புசெய்திகாவிரி : அக். 16 - 17 இரயில் மறியல் போராட்டத்தை ஆதரிப்போம் !

காவிரி : அக். 16 – 17 இரயில் மறியல் போராட்டத்தை ஆதரிப்போம் !

-

PP Logo

பத்திரிக்கைச் செய்தி

15.10.2016

மிழகத்தின் உயிராதாரமான காவிரி நதி நீர் உரிமையில் நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கிய ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகும், அதை அமல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என மத்திய பா.ஜ.க மோடி அரசாங்கம் நிராகரித்து விட்டது.

உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டாலும் தமிழகத்திற்கு தண்ணீர் விடமாட்டேன் என கர்நாடக காங்கிரஸ் அரசு அனைத்து கட்சிகளையும் கூட்டி அடாவடித்தனம் செய்கிறது., ஆர்.எஸ்.எஸ், பிஜே.பி. கர்நாடகத்தில் வன்முறை கலவரங்களை முன்னின்று நடத்துகின்றன. காவிரி நடுவர்மன்ற இடைக்காலத்தீர்ப்பு, இறுதித் தீர்ப்பை அமல் படுத்தாமல், சட்டவிரோதமாக அணைகளைக் கட்டி நீரைத்தேக்கி வருகிறது. காங்கிரசு, பிஜே.பி கட்சிகள் கர்நாடக வாக்கு அரசியல் லாபத்திற்காக, தமிழகத்திற்கு எதிராகவும் ஓரவஞ்சனையாகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் வரும் 17,18 தேதிகளில் மத்திய அரசையும், கர்நாடகத்தை கண்டித்து அனைத்து கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில் நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தை ஆதரிக்கும் அதே வேளையில் காங்,பி.ஜே.பி கலந்து கொள்வதை எதிர்க்க வேண்டும்.

மக்கள் அதிகாரம் பிற கட்சிகள், விவசாய அமைப்புகளோடு காவிரி உரிமைக்காக தமிழகத்தில் பிரச்சாரம் போராட்டம் என தொடர்ந்து நடத்தி வருகிறோம். அது போல் இந்த ரயில் மறியல் போராட்டத்திற்கும் எங்களது அமைப்பின் சார்பில் ஆதரவை தெரிவித்து கொள்கிறோம்.

அதே சமயம் தமிழகத்தின் உரிமைகளுக்கு எதிராக நிற்கும் பா.ஜ.க. காங்கிரசு கட்சிகளோடு சேர்ந்து நிற்க முடியாது. துரோகத்தனமான, மக்கள் எதிரி கட்சிகளுடன் தோள் உரசி நின்று நமது உரிமைக்காக எப்படி போராட முடியும்?.

தோழமையுடன்
வழக்கறிஞர்.சி.ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்.