Wednesday, April 16, 2025
முகப்புகட்சிகள்இதர கட்சிகள்ராவண லீலா : ராமனை எரித்த செயல் வீரர்கள் விடுதலை !

ராவண லீலா : ராமனை எரித்த செயல் வீரர்கள் விடுதலை !

-

டநாட்டில் திராவிடர்கள் மற்றும் பழங்குடி மக்களை இழிவுபடுத்தும் விதமாக,பல ஆண்டுகளாக ‘ராமலீலா’ என்ற பெயரில்  இராவணனை எரித்து மகிழ்கின்றனர். இந்த வருடம் அதில் ஆரியப் பார்ப்பனியத்தின் பிரதமர் என்றழைக்கப்படும் மோடி அதில் கலந்து கொண்டு, ஆனந்தக் கூத்தாடினார்.

இதற்கு மரண அடி கொடுக்கும் நோக்கில், தந்தை பெரியார் திராவிடர் கழகம்  இராவண லீலா நடத்தி, ஆரிய ராமனை எரிப்போம் என அறிவித்தது. பல அடுக்குமுறைகள், தடைகள், 500 காவலர்களின் ஆக்கிரமிப்பு, என அனைத்தையும் உடைத்து, தந்தை பெரியார் திராவிடர் கழக தோழர்கள் 7 பேர் ஆரிய ராமன், சீதை, லட்சுமணன் ஆகியோரது உருவப்பொம்மைகள் எரித்துப் பொசுக்கி ஆரிய பார்ப்பனியத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர்.

இவ்வளவு தடையையும் மீறி சொன்னபடி நடத்தி விட்டனரே என்ற தோல்வி வெறியில், த.பெ.தி.க தோழர்களோடு  போராட்டத்திற்கு ஆதரவாக நின்ற திராவிடர் விடுதலைக் கழக தோழமைகள் இருவரையும், ஆதரவாளர்கள் இருவரையும் சேர்த்து கைது செய்தனர். பார்ப்பனியத்தின் மனம் குளிர்வதற்காக கைது செய்யப்பட்ட அனைத்து தோழர்களும்,  திங்களன்று பிணையில் வந்தனர்.

தமிழர்களின் பாரம்பரியத்தை, சுயமரியாதையை நிலைநாட்டிய வீரமிகு தோழர்களை வரவேற்று, சென்னை ராயப்பேட்டையில் உள்ள மீசாப்பேட்டை மார்கட்டில் இருந்து வி்எம்.வீதி உள்ள பெரியார் சிலை வரை குதிரையில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். அவாள்களின் ஆரியப் புரட்டிற்கு வேட்டு வைக்கும் விதமாக தோழர்கள் வரும் போது பட்டாசு வெடிக்கப்பட்டது. கூடவே முழக்கங்களும் ஒலித்தன.

**********************************************

மோடியே ! கேடியே !!
இனித்ததா இனித்ததா ?
எங்கள் மாமன்னன் இராவணனை
எரித்த போது இனித்ததா?
‘ராமலீலா’ என்ற பெயரிலே
எரித்த போது இனித்ததா?

பார்த்தாயா பார்த்தாயா !!
எங்கள் ராவணனை
எரித்த ராமன் இங்கே
எரிந்து பொசுகுவதை பார்த்தாயா ?
கூடவே சேர்ந்து
லட்சுமணனும்,சீதையும்
கருகியதை பார்த்தாயா?

தெரிகிறதா தெரிகிறதா?
ராமனோடு சேர்த்து
ஆரியம் எரிவது தெரிகிறதா?
திருப்பி அடிப்போம் திருப்பி அடிப்போம் !!

உணர்ந்து கொள் ! உணர்ந்து கொள் !!
பெரியார் மண் இது பெரியார் மண் !!

செய்தி :
தந்தை பெரியார் திராவிடர் கழகம்
சென்னை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க