Monday, April 21, 2025
முகப்புசெய்திமாணவர் போராட்டம் குத்தாட்டமா ? தினமலர் எரிப்புப் போராட்டம் !

மாணவர் போராட்டம் குத்தாட்டமா ? தினமலர் எரிப்புப் போராட்டம் !

-

மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து சென்னை பல்கலை மாணவர்கள் போராடியதை குத்தாட்டம் என்று இழிவுபடுத்திய தினமலர் பத்திரிகையை எரித்துப் போராட்டம்!

மோடி தலைமையிலான பாசிச பாஜக அரசு சில மாதங்களுக்கு முன்பு ‘புதிய கல்வி வரைவுக் கொள்கை 2016 சில உள்ளீடுகள்’ என்ற தலைப்பில், பு.க.கொள்கையின் வரைவு அறிக்கையை வெளியிட்டது. இக்கொள்கை ஒரு புறம் குலக்கல்வியை புதுப்பிப்பதாகவும், மறுபுறம் முதலாளித்துவத்திற்கு கூலி அடிமைகளை உற்பத்தி செய்யும் ஏற்பாடாகவும் அமைந்துள்ளது.
புதிய கல்விக்கொள்கை அறிவிப்பு வெளியான நாள் முதல், நாடு முழுவதுமுள்ள ஜனநாயக சக்திகளாலும், மாணவர்கள்-ஆசிரியர்களாலும், பெரும்பாண்மை கல்வியாளர்களாலும் கடும் எதிர்ப்புக்குள்ளாகி வருகிறது. சென்னை பல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்களும் இக்கல்வி கொள்கையை கடுமையாக எதிர்த்து வருகிறோம். அவ்வப்போது இது குறித்த கூட்டங்களையும், விவாதங்களையும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நடத்தி வருகிறோம்.

MU Student protest (16)
மாணவர்களை கொச்சைப் படுத்தும் வகையில் தினமலர் வெளியிட்ட செய்தி

நேற்று (16/11/2016) மதிய உணவு இடைவேளைக்கு பிறகு பறை இசைத்து புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டோம். ‘இனிமே இப்படித்தான்!’ என்கிற வீதி நாடகத்தையும் நிகழ்த்தினோம். மோடி கும்பலின் பு.க.கொள்கையை அம்பலப்படுத்திய இந்நாடகம் மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

மாணவர்கள் மத்தியில் மோடி கும்பலை அம்பலப்படுத்தியதால் கொதித்து போன ABVP அம்பிகள் அவர்களின் பத்திரிகையான தினமலருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். எமது பிரச்சாரம், கலை நிகழ்ச்சிகளை புகைப்படம் எடுத்துக்கொண்ட தினமலர், மறுநாள் காலை (இன்று 17/11.16) பார்ப்பனவெறியோடும், கொழுப்போடும் ”சென்னை பல்கலையில் மாணவியர் குத்தாட்டம்” என்கிற தலைப்பில் செய்தி வெளியிட்டிருக்கிறது.

தினமலரின் இந்த பொறுக்கித்தனத்தை அறிந்த மாணவர்கள் உடனடியாக வளாகத்தில் திரண்டனர். உழைக்கும் மக்களின் பறையாட்டத்தை ‘குத்தாட்டம்’ என்று எழுதிய தினமலர் குப்பையை குவித்துவைத்து தீயிட்டு கொளுத்தி, அந்த நெருப்பில் பறையை காய்ச்சி எடுத்துக்கொண்டு போராட்டத்தை துவங்கினர். தினமலம் என்கிற நாடகமும் போடப்பட்டது. தமிழகத்தில் வயிறு வளர்த்துக்கொண்டு தமிழ் மக்களுக்கு எதிராக பார்ப்பன நஞ்சை கக்கி வரும் தினமலரை தமிழ் மக்கள் காறி உமிழ்ந்து புறக்கணிக்க வேண்டும்.

முற்போக்கு, புரட்சிகர இடதுசாரி சிந்தனையின் பக்கம் மாணவர்கள் சென்றுவிடக்கூடாது என்பதில் ஆளும் வர்க்கம் கவனமாக இருக்கிறது. தினமலருக்கோ இந்த வார்த்தைகளை கேட்டாலே ஆசனவாயில் மிளகாயை அரைத்து ஊற்றியதை போல எரிகிறது. அதிலும் மாணவர்களாகிய நாங்கள் பேசுவதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. நாங்கள் மட்டுமல்ல இனி தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர்களையும் இந்த சிந்தனையின் கீழ் திரட்டுவோம். மாணவர்களின் சுதந்திரமான அரசியல் நடவடிக்கைகளுக்கு எதிராக தினமலர் இத்தகைய செய்திகளை இனி வெளியிட்டால் கேவலமான முறையில் உதைபடும் என்று எச்சரிக்கிறோம்.
மோடி, பா.ஜ.க கும்பலின் கனவு தமிழகத்தில் பலிக்காது. சித்தர்கள் முதல் பெரியார் வரையிலான பார்ப்பன எதிர்ப்பு மரபை வரித்துகொண்ட மண் இது. நாங்கள் இந்த மண்ணின் புதல்வர்கள். பார்ப்பன எதிர்ப்பு மரபு கொண்ட எமது மண்ணில் பார்ப்பன பாசிசத்தை வேறூன்ற விட மாட்டோம்.

போராட்டத்தின் போது மாணவர்கள் எழுப்பிய முழக்கங்கள் :

கண்டிக்கின்றோம்! கண்டிக்கின்றோம்!
தின மலரைக் கண்டிக்கின்றோம்!
பறையடிப்போம்! பறையடிப்போம்!
புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக பறையடிப்போம்!
முறியடிப்போம்! முறியடிப்போம்!
தின மலரின் பார்ப்பன திமிரை முறியடிப்போம்!
எழுதாதே! எழுதாதே!
எச்சைத் தனமாய் எழுதாதே!
மன்னிப்பு கேள்!மன்னிப்பு கேள்!
மாணவர்களிடம் மன்னிப்பு கேள்!

படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்

தகவல் :
சென்னை பல்கலைக்கழக மாணவர்கள்.