Monday, April 21, 2025
முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்சேலம் உருக்காலையை பறிக்கும் மோடி அரசு ! ஓசூர் ஆர்ப்பாட்டம்

சேலம் உருக்காலையை பறிக்கும் மோடி அரசு ! ஓசூர் ஆர்ப்பாட்டம்

-

பறிபோகிறது சேலம் உருக்காலை! பறித்தெடுக்கிறது பாசிச மோடி அரசு!

  • ஆர்ப்பாட்டம்
  • நாள்: 22-12-2016 மாலை 5 மணி
  • இடம்: பழைய நகராட்சி அலுவலகம் எதிரில், ஓசூர்.

Salem Steel Banner

ழைக்கும் மக்களே!

  • தமிழகத்தின் சொத்தான – இலாபம் ஈட்டித்தரும் மகாரத்தினம் தனியாருக்குத் தாரைவார்ப்பு!
  • அந்நியச் செலாவணி ரூ.800 கோடியை – இறக்குமதி வரி ரூ.1,200 கோடியை அரசுக்கு ஈட்டித்தரும் பொக்கிசத்தை தனியார் சுருட்டிக்கொள்ள அனுமதி!
  • சேலம் உருக்காலைக்கு தேவையான இரும்பை தரும் வாய்ப்புள்ள கஞ்ச மலையை, வேடியப்பன் மலையை வெட்டியெடுக்க பன்னாட்டுக் கம்பெனியான ஜிண்டாலுக்கு அனுமதி!
  • சேலம் உருக்காலையை விற்று, தமிழகத்தை வஞ்சிக்கும், தொழிலாளர் வாழ்வைச் சூறையாடும் பாசிச மோடி அரசின் வஞ்சகத்தை முறியடிப்போம்!
  • நாடு மீண்டும் அடியாவதைத் தடுப்போம்!

__________

ன்பார்ந்த உழைக்கும் மக்களே, தொழிலாளர்களே!

சேலம் உருக்காலை தனியார்மயமாகிறது. ஜிண்டால் என்ற கார்ப்பரேட் கம்பெனியின் கட்டுப்பாட்டிற்கு செல்ல இருக்கிறது. சேலத்தின் இயற்கை வளம், நமது நாட்டின் இயற்கை வளம், மகாரத்தினா என்ற தமிழகத்தின் பெருமிதத்தின் அடையளம், ஆயிரக்கணக்கான தொழிலாளர் உழைப்பில் உயர்ந்த நிறுவனம், நமது நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் வரிப் பணத்தில் தொடங்கப்பட்ட நிறுவனம், இன்று கார்ப்பரேட் கம்பெனியின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்லப்பட இருக்கிறது. இது அநீதி, இது துரோகம்!

அன்று அடிமை மன்னர்களிடம் ஒப்பந்தம் போட்டு நமது நாட்டையே வெள்ளையர்கள் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு சென்றார்கள். சொந்த நாட்டு மக்களை அன்னியர்கள் என்று சொல்லி அடிமைப்படுத்தினார்கள். அதே காலனியாதிக்கம் இன்று மறுவடிவம் எடுத்து வருகிறது, மோடி என்ற கார்ப்பரேட் அடிமையின் மூலம். பிரதமர் என்ற போர்வையில் இருக்கும் இந்த கைக்கூலி நமது சேலம் உருக்காலையையும் கஞ்சமலையையும் திருவண்ணாமலை வேடியப்பன் மலையையும் ஜிண்டால் என்ற கார்ப்பரேட் கம்பெனிக்கு விற்றுவிட்டார். இனி, சேலத்தின் மக்கள் அன்னியர்கள், வந்தேறிகள்! அவர்கள் மீது என்ன விதமான கட்டுப்பாடுகளையும் ஜிண்டால் செலுத்த முடியும். இந்த அடிமைத்தனத்தை சகித்துக் கொள்ள முடியுமா?

தஞ்சை டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் திட்டம், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கெயில் எரிவாயு குழாய் திட்டம், சிப்பெட் தனியார்மயம், மாடர்ன் பிரட் தனியார்மயம் என்று நமது இயற்கை வளங்களும் பொதுத்துறை நிறுவனங்களும் அன்னியர்களின் கார்ப்பரேட் முதலாளிகளின் ஆதிக்கத்திற்கு சென்று கொண்டிருக்கின்றன. ஆம், நமது நாட்டை ஒரு அடிமை மேகம் சூழ்ந்து வருகிறது.

ஆகையால், உருக்காலை தனியார்மயம் என்பது ஏதோ சேலத்து மக்களின் பிரச்சனை, தொழிலாளர்களின் பிரச்சனை என்று சுருக்கிப் பார்க்க முடியாது. இது கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் உழைத்து வாழும் கோடானக் கோடி மக்களுக்கும் இடையிலான பிரச்சனை! நமது நாட்டை அடிமையாக்கும் ஓட்டுக் கட்சிகள்–அதிகார வர்க்கத்தினருக்கும் தன்மானமுள்ள ஒவ்வொரு குடிமக்களுமான பிரச்சனை! சுதந்திரமா, அடிமைத்தனமா என்ற பிரச்சனை!

ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்ததன் மூலம் கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் மீது ஒரு போரைத் தொடுத்துள்ள மோடி அரசும் இவரை இயக்கும் RSS பார்ப்பன இந்து மதவெறியர்களும் நமது போராட்டங்களை திசைத்திருப்ப சாதி, மத வெறியைக் கிளைப்பிவிடுதற்கு பலியாகாமல், ஒன்றிணைந்து போராடுவோம்! சேலம் உருக்காலை தனியார்மயத்தை முறியடிப்போம்!

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

கிருஷ்ணகிரி-தருமபுரி-சேலம் மாவட்டங்கள்
தொடர்புக்கு: 97880 11784

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க