Tuesday, April 22, 2025
முகப்புசெய்திபறி போகிறது சேலம் உருக்காலை ! - ஓசூர் கண்டன ஆர்ப்பாட்டம் !

பறி போகிறது சேலம் உருக்காலை ! – ஓசூர் கண்டன ஆர்ப்பாட்டம் !

-

பறி போகிறது சேலம் உருக்காலை! பறித்தெடுக்கிறது மோடி அரசு!

சேலம் உருக்காலையை தனியார்மயமாக்க முனைகின்ற அரசின் சதித்திட்டத்திற்கு எதிராக 22-12-2016 மாலை 5 மணியளவில் ஒசூர் பழைய நகராட்சி அலுவலகம் எதிரில் பு.ஜ.தொ.மு- சார்பாக எழுச்சிகரமான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அவ்வமைப்பின் பாகலூர் பகுதி அமைப்பாளர் தோழர். ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். பு.ஜ.தொ.மு-ன் மாநில துணைத் தலைவர் தோழர்.பரசுராமன், கண்டன உரையாற்றினார். இறுதியாக தோழர்.ராஜூ (பு.ஜ.தொ.மு) நன்றியுரையாற்றினார். நூற்றுக் கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தை கவனித்தனர். பலர் இறுதி வரை நின்று கவனித்து ஆதரவளித்தனர். சேலம் உருக்காலை தனியார்மயமாக்கத்தைக் கைவிட வேண்டும். கஞ்சமலையை ஜிண்டால் ஆக்கிரமிக்க அனுமதிக்கக் கூடாது. ஆனால், மோடி அரசோ கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சேவை செய்யும் நோக்கில் செயல்படுகிறது.

சென்ற காங்கிரசு அரசை விட பல மடங்கு வேகமாக கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்கிறது. இதற்காக மக்களை ஒடுக்கத் தயாராக உள்ளது. அதனால், இந்த அரசின் நடவடிக்கைகளை முறியடிக்கும் வகையில் நமது போராட்டங்கள் அமைய வேண்டும். இல்லையேல் உருக்காலை மட்டுமல்ல, மொத்த நாடே மீண்டும் அடிமையாகிவிடும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் அறைகூவல் விடுத்தனர்.

முன்னதாக ஒரு வாரத்திற்கும் மேலாக ஒசூர் நகரில் பல ஆயிரம் பிரசுரங்கள் போட்டு பிரச்சாரம் செய்து மக்களிடம் விழிப்புணர்வூட்டியுள்ளது. அந்த வகையில் பொதுமக்கள் பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வந்து கலந்து கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
ஒசூர். பேச – 97880 11784 .

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க