Tuesday, April 22, 2025
முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்கோவை ஜிடிஎன் ஆலையில் பு.ஜ.தொ.மு - வின் புது சங்கம் உதயம் !

கோவை ஜிடிஎன் ஆலையில் பு.ஜ.தொ.மு – வின் புது சங்கம் உதயம் !

-

ஜி‌.டி‌.என் நிறுவனம் பல்லடம் செம்மிபாளையத்தில் செயல்பாடு வருகிறது. 228 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். நிரந்தரத் தொழிலாளர்கள் 150 பேர் உள்ளனர். ஜி‌.டி‌.என் நிறுவனத்தில் எண்ணெய் கிணறு சம்பந்தப்பட்ட வால்வு மற்றும் அதன் உதிரி பாகங்கள் தயாரித்தல் நடைபெறுகிறது. AEROSPACE விமானத்தின் உதிரி பாகங்களும் தயாரிக்கப்படுகிறது. அனைத்தும் தயார் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

NDLF Covai GDN (3)தொழிலாளர்கள் அனைவரும் ஏ‌.ஐ‌.டி‌.யு‌.சி சங்கத்தில் ஒரே சங்கமாக செயல்பட்டனர். ஏ‌.ஐ‌.டி‌.யு‌.சி சங்கத்தின் மீது தொழிலாளர்களுக்கு நம்பிக்கை இழப்பு ஏற்பட்டு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை நாடி வந்தனர் நமது தரப்பில் “ஏற்கெனவே ஒரு சங்கம் நிறுவனத்தில் உள்ள நிலையில் இன்னொரு சங்கத்தை துவக்குவது தொழிலாளர்களை கூறு போட செய்யும்” எனவே ஏ‌ஐ‌டி‌யு‌சி சங்கத்துக்குள்ளேயே (அமைப்பு முறைப்படி) போராடுங்கள் என்று அனுப்பினோம், தொழிலாளர்கள் அதன்படி செய்தார்கள். ஆனால் அதற்குள் ஏ‌ஐ‌டி‌யு‌சி சார்பில் புஜதொமு-வை விமர்சனம் செய்து இரண்டு வகையான துண்டுப் பிரசுரம் வெளியிட்டு அவதூறு செய்தனர்.

நாம் நம்மிடம் வந்த தொழிலாளர்களிடம் “எமது அமைப்பு சார்பில் இதற்கெல்லாம் பதில் கூறத் தேவையில்லை எனக் கருதுகிறோம் நீங்களே நேரடியாக புஜதொமு போராட்டம் நடத்திய கம்பெனிகளுக்கு சென்று விசாரியுங்கள்” என அனுப்பி வைத்தோம் ஜி‌.டி‌.என் தொழிலாளர்களும் என்பெஸ்ட், கௌரி மெட்டல், ரோட்டோரோ, சி‌.பி‌.சி, சி‌.ஆர்‌.ஐ-என நேரில் சென்று விசாரித்து நிலைமையை அறிந்தனர். இதன்பிறகு புஜதொமு சங்கத்தின் கிளையை ஆரம்பித்தே ஆக வேண்டும் என அறிவித்தனர். சி‌.ஆர்‌.ஐ கம்பெனியில் கதவடைப்புக்கு எதிராக 600 நாட்களுக்கு மேலாகியும் போராடும் ஒரே சங்கம், தொழிலாளர்கள் பக்கம் நின்று உறுதியாக போராடுவது நமது சங்கம்தான் என உறுதியாக நின்றனர். அதன்பிறகு 200க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் சங்கத்தில் இணைந்தனர்.

கடந்த 18.12.2016 காலை 10:30 மணிக்கு நிறுவனத்தின் முன் கொடியேற்று விழா கிளைத் தலைவர் தோழர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. கிளைச் செயலாளர் தோழர் ஆர்தர் ஜீவநேசன் கௌரவத் தலைவர் தோழர் ஜெயபாலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொழிலாளர்கள் தரப்பில் தோழர்கள் தோழர்கள் கனகராஜ் விஜயகுமார் அசோக், எம்.அசோக், சுப்பிரமணி, மோகன்ராஜ், முருகேசன், ஆகியோர் தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தினர். தோழர்.சந்திரஹாசன் உரைவீச்சு நிகழ்த்தினார். மாவட்ட நிர்வாகிகள் தோழர்கள் திலீப், கோபிநாத், நித்தியானந்தம் சரவணன் ஆகியோர் விளக்க உரை ஆற்றினர்.

NDLF Covai GDN (2)இறுதியாக மாநில துணைத் தலைவர் விளவை ராமசாமி கொடியேற்றி வைத்து உரையாற்றுகையில், ஜி‌.டி‌.என் தொழிலாளர்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு மட்டும் போராட்டம் நடத்துவதோடு மட்டுமல்லாமல் பல்லடம் பகுதியில் உள்ள விசைத்தறி தொழிலாளர்கள் தஞ்சாவூர் விவசாயிகள் போன்றோரின் பிரச்சினைகளுக்கும் போராட வேண்டும். வரலாற்றின் நிகழ்ச்சிப் போக்கில் தொழிலாளி வர்க்கம் இயல்பாக தோன்றியது. அது புரட்சிகர உணர்வின் மூலம் தனக்கான வர்க்கமாக மாற வேண்டும், மார்க்சியம் என்பது உயிராற்றல் நிரம்பிய தத்துவம். அதனைக் கொண்டு சமூகத்தை மாற்ற வேண்டும்

காரல் மார்க்ஸும், லெனின், ஸ்டாலின், மாவோவும் உயர்த்திப் பிடித்த செங்கொடியை கம்பெனி வாயிலில் முழக்கங்களுக்கிடையில் ஏற்றி வைத்துள்ளோம். செங்கொடி உயர்ந்த உடன் காவல் துறையினர் உடனே கையில் கேமராவுடன் வந்துவிட்டனர். இதுவரை இக்கம்பெனி முன்பு காவல்துறை ஏன் வரவில்லை. சமரசமாக சங்கம் நடத்தினால் யாரும் வர மாட்டார்கள். புரட்சிகர உணர்வுடன் சங்கம் நடத்தினால் வெற்றியும் வரும். கம்பீரமான தோல்வியும். வரும் இரண்டுக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்.

NDLF Covai GDN (1)தோல்வி வந்தாலும் அதனை தனது உழைப்பால் போராட்டத்தால் வெற்றியாக மாற்றுபவனே கம்யூனிஸ்டு. ஜி‌.டி‌.என் தொழிலாளர்கள் இரண்டுக்கும் தயாராக இருக்க வேண்டும். நாம் காய்த்து குலுங்கும் கனிமரம். நம்மீது கல்லடி நிச்சயம் விழும். நம் மீது ஏ‌ஐ‌டி‌யு‌சி வைத்துள்ள விமர்சனங்களை இது போலத்தான் பார்க்க வேண்டும்.

புரட்சிகர தொழிற்சங்கம் நாளும் ஒவ்வொரு பாடம் நடத்தும். அதனை உற்சாகத்துடன் படித்து வெற்றி பெற வேண்டும். தோல்வியின் அழகு மகத்தானது. அது நம்மிடம் உறங்கிக் கிடக்கும் ஆற்றல்களை தட்டி எழுப்பும். நம் புரிதலை மேம்படுத்தும். முதலாளித்துவ பயங்கரவாதம் அடுத்து நமக்கு விடுக்கப் போகும் சவாலை சந்திக்க அணியமாவோம் என அறைகூவி முடித்தார். தோழர் கிருபானந்தம் நன்றி கூற விழா நிறைவுற்றது.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை மாவட்ட.ம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க