Wednesday, April 23, 2025
முகப்புகளச்செய்திகள்போராடும் உலகம்மெரினா : போலீசு பயங்கரவாதம் - ஊடக மாமாத்தனம் ! வீடியோ

மெரினா : போலீசு பயங்கரவாதம் – ஊடக மாமாத்தனம் ! வீடியோ

-

போலீசு தாக்குதலை மறைக்கும் ஊடகங்கள் !

மெரினாவில் காவல்துறை நடத்திய வன்முறைகளை திட்டமிட்டே ஊடகங்கள் மறைத்தன. மேலும் பல்வேறு இடங்களில் மக்கள் தன்னெழுச்சியாக மாணவர்களுக்கு ஆதரவாகச் நடத்திய போராட்டங்களையும் மூடி மறைத்து போலீசு சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லி போராட்ட உணர்வைப் பரவவிடாமல் தடுக்க முயன்றன ஊடகங்கள். இவற்றைத் தாண்டி மக்கள் போராடும் மாணவர்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து போராடியுள்ளனர்.

ஆளும் வர்க்க ஊடகங்களின் முகத்திரையை கிழிக்கும் இந்த வீடியோவைப் பாருங்கள், பகிருங்கள்.

மெரினா : போலீசு வன்முறை வெறியாட்டம் !

மெரினாவில் நடந்த மாணவர் போராட்டத்தை சமூகவிரோதிகள் வன்முறைக்கு இட்டுச் சென்றுவிட்டனர் என ஹிப் ஹாப் ஆதியும், RJ பாலாஜியும், ராகவா லாரன்சும், கமிஷ்னர் ஜார்ஜ்-ம் கூறுகின்றனர். மக்களின் மண்டையை உடைத்ததும் குடிசைகளையும், வாகனங்களையும் கொளுத்திய சமூகவிரோதிகள் யார் என்பதை இந்த வீடியோ அம்பலப்படுத்துகிறது. பாருங்கள் பகிருங்கள்.