Wednesday, April 23, 2025
முகப்புசெய்திகாவல்துறை அடக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி !

காவல்துறை அடக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி !

-

காவல்துறை அடக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ளுங்கள் !

மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களுக்கு,

தமிழக காவல்துறை தமிழகம் தழுவிய அளவில் இரவிலும், பகலிலும் திடீர் திடீரென வீடுபுகுந்து பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என்று பாராமல் அனைவரையும் அடித்து  நொறுக்குகிறார்கள். வன்முறையில் ஈடுபட்டார்கள் என பலரையும் சட்டவிரோதமாக கைது செய்து வருகிறார்கள்.

இப்படி அடக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கட்டணமின்றி  சட்ட உதவி செய்ய‌ சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் முன்வந்துள்ளனர். சென்னை பகுதியில் வழக்கறிஞர்கள் சமூக ஆர்வலர்களுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.  போலீசால் சட்டத்திற்கு புறம்பாக கைது செய்து சிறையில் இருப்பவர்களிடமும்  வழக்கு குறித்து பேசி வருகின்றனர்.

ஆகையால் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போலீசின் வன்முறை மற்றும் சட்ட விரோத நடவடிக்கையால் உடல்ரீதியான பாதிப்பு, உடைமைகள் இழப்பு, காணாமல் போனவர்களை பற்றிய விவரங்கள் இருப்பின் உடனடியாக கீழ்காணும் வழக்கறிஞர்களின் எண்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள். இந்த செய்தியை அனைவருக்கும் தெரிவியுங்கள்.

—–

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் காவல்துறை வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான
சட்ட உதவிக்குழு வழக்கறிஞர் கூடம்
,
எண்:96, மாவட்ட நீதிமன்ற வளாகம், கே.கே.நகர், மதுரை

—–

மிழக வரலாற்றில், மாணவர்கள்-இளைஞர்கள்-பொதுமக்கள் கொண்ட சுமார் ஒரு கோடிப்பேர் பங்கேற்று கடந்த 10 நாட்களாக அமைதியான முறையில் நடந்து வந்த ஜல்லிக்கட்டு போராட்டம் கடந்த 23.01.2017 திங்கட்கிழமை அன்று முடிவுக்கு வந்தது.

மாணவர்கள், வழக்கறிஞர்கள், மீனவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், அரசுப் பணியாளர்கள், பல்கலை, கல்லூரி, பள்ளி ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், பத்திரம் எழுதுவோர், ஆட்டோ தொழிலாளர்கள், சினிமாத்துறையினர், குடும்பத்தலைவிகள், குழந்தைகள், அனைத்து அமைப்புகள், கட்சிகள், இயக்கங்கள் உள்ளிட்ட ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமும் பங்கேற்ற மாபெரும் பண்பாட்டு, அரசியல் நிகழ்வாக இப்போராட்டம் இருந்தது.

உலகமே உற்று நோக்கிக் கொண்டிருந்த இப்போராட்டம் கடந்த 23.01.2017 மாலை 04.30 மணிக்கு தமிழக சட்டப் பேரவையில் ஜல்லிக்கட்டு சட்டம் நிறைவேறியபின் முடிவடைய இருந்தது.

இச்சூழலில் 23.01.2017 அன்று காலை தமிழ்நாடு காவல்துறை, சென்னை, அலங்காநல்லூர், மதுரை, கோவை மற்றும் தமிழகம் முழுவதும் மக்கள், மாணவர்கள் கூடியிருந்த இடங்களில் கொடூரமாகத் தாக்குதல் நடத்தி வன்முறையில் ஈடுபட்டது.

அதன்பின் போராட்டத்தில் கலந்து கொண்ட,உதவி செய்த பலரையும் வீடுவீடாகச் சென்று கைதுசெய்து, காவல்நிலையத்தில் வைத்து கொடூரமாகத் தாக்கி சிறையில் அடைத்துள்ளனர். இன்னும் பலரை புகைப்படங்களை வைத்துக் கொண்டு தேடிக்கொண்டுள்ளனர்.

காவல்துறையின் இச்சட்ட மீறல்களால் மாணவர்களும், மக்களும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அரசின் இத்தகைய மனித உரிமை மீறல்களுக்கு, மத்தியில் ஆளும் பா.ஜ.க, மாநிலத்தில் ஆளும் அ.தி.மு.க.வினர் உறுதுணையாக உள்ளனர்.

மக்களும்-மாணவர்களும் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாக உள்ள சூழலில் மதுரை உயர்நீதிமன்ற மற்றும் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் இணைந்து ஜல்லிக்கட்டு போராட்டத்தில் காவல்துறை வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சட்ட உதவிக்குழு கீழ்க்கண்ட வழக்கறிஞர்கள் கொண்டு அமைத்துள்ளோம்.

  • 1.கனகவேல்-97903 17864
  • 2.கதிர்வேல்-9894913820
  • 3.குருசாமி-98432 60434
  • 4.நாராயணன்-9382823253
  • 5.ஜான் வின்சென்ட்-9629709011
  • 6.வில்லவன் கோதை-94430 56580
  • 7.மனோகரன் – 9894344783
  • 8.ஜெயராமச்சந்திரன் -9486729074
  • 9.சிவக்குமார்-9894340925
  • 10.ராஜேந்திரன் -9842159078
  • 11.நாகலிங்கம்-9444509535
  • 12.பழனியாண்டி-9443744348
  • 13.பொற்கொடி-9865524094
  • 14.பகத்சிங்-9443917588
  • 15.பானுமதி-9443122860
  • 16.சின்னராஜா-9443926381
  • 17.மருது-9344120290
  • 18.தியாகராஜன் – 9489871974
  • 19.ராஜீவ் ரூபஸ்-9487682817
  • 20.ஜெரின் மேத்யூ-9952004890
  • 21.விஜயராஜா-9791114234
  • 22.திருமுருகன் – 9942612950
  • 23.ஆறுமுகம்-9942371885
  • 24.நாகை திருவள்ளுவன் – 9842902437
  • 25.ராபர்ட் சந்திரகுமார்-9865496521
  • 26.அழகுதேவி-9585750745
  • 27.அப்பாஸ்-98423 40954
  • 28.அப்துல்காதர்-97511 51916
  • 29.பாஸ்கர்-9842380072
  • 30.வாஞ்சிநாதன்(வாழ்நாள் தடை) -9865348163
  • 31.முருகன் – 9003782261
  • 32.சின்னமணி-9843387100
  • 33.வடிவேலன் -9443794926
  • 34.அகராதி-9345717179
  • 35.கிசோர்-9443710015
  • 36.பகவன்தாஸ்- 9791432380
  • 37.செந்தில்-9486910238
  • 38.முத்து கிருஸ்ணன் -9894840093
  • 39.மணி-9842665338
  • 40.மாறன் -9865586446
  • 41.கருணாநிதி-9994513250
  • 42.நெடுஞ்செழியன் (வாழ்நாள்தடை) -9629502828
  • 43.ஆனந்தமுனிராஜ்-9443042060
  • 44.சிவக்குமார்-9629294292
  • 45.பால்ராஜ்-9443456023
  • 46.கோபிநாத்-9443394107
  • 47.பாரதி பாண்டியன் – 9976925999
  • 48.நஜீம்-9171444664
  • 49.கணேசன் -9443571271
  • 50.ஜின்னா-9443475003

நாங்கள் ஜாமின்,முன்ஜாமின், மருத்துவ உதவி, வாகனங்கள், பொருட்களைத் திரும்பப்பெற்றுத் தருவது, தாக்குதல் நடத்திய மற்றும் அச்சுறுத்திவரும் காவல்துறை அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் எவ்வித கட்டணமின்றி செய்துதருகிறோம். மேற்காணும் வழக்கறிஞர்களை அனைவரும் தொடர்பு கொள்ளவும்.

வழக்கறிஞர் கனகவேல்,
ஒருங்கிணைப்பாளர், மதுரை, 26.01.2017

****

சென்னை பகுதி

சென்னை உயா்நீதிமன்ற வழக்கறிஞா்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் இணைந்து உண்மையறியும் குழு அமைத்து 23/01/17 அன்று போலீசாரால் நடத்தப்பட்ட வன்முறையில் பாதிக்கபட்டவா்களை நோில் சந்தித்து பாதிப்புகளை கேட்டறிந்து வருகிறோம்.

பாதிக்கப்பட்டவா்கள் யாரேனும் இருந்தால் கீழ்கண்ட வழக்கறிஞர்களின் கைபேசி எண்ணுக்கு தொடா்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளபடுகிறோம்.

  • பாவேந்தன். – 9443306110,
  • மில்டன். – 9842812062,
  • சாரநாத்.- 9884082930,
  • ரஜினிகாந்த் – 9444711353,
  • சாமுவேல் – 8122713460,
  • செங்கொடி-9444225179
  • முத்துஜி- 9842624451.
  • கோகுல் – 9444849484

குறிப்பு : நண்பா்கள் தங்கள் முகநூல் பக்கங்களிலும், வாட்ஸப்  குழுக்களிலும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

ஒருங்கிணைப்பு :
பாவேந்தன்,
வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்.
9443306110

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.