Wednesday, April 23, 2025
முகப்புஅரசியல்ஊடகம்உண்மையறியும் குழுவின் அறிக்கை 31.01.2017 இன்று வெளியீடு !

உண்மையறியும் குழுவின் அறிக்கை 31.01.2017 இன்று வெளியீடு !

-

வழக்கறிஞர்களின் உண்மையறியும் குழுவின் அறிக்கை 31.01.2017 இன்று வெளியீடு !

ல்லிக்கட்டுக்காக நிரந்தர சட்டம் வேண்டும் என்ற கோரிக்கைக்காக தமிழகம் தழுவிய அளவில், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என பல லட்சக் கணக்கானவர்கள் இணைந்து அமைதி வழியில் போராடினார்கள்.  கடந்த 23ந் தேதி போராடிய மாணவர்களுடன் எந்த பேச்சுவார்த்தையும் அரசு நடத்தாமல், கலைந்து போக சொல்லி போலீசு உத்தரவிட்டது. கலைந்து போக மறுத்தவர்களை குண்டுக்கட்டாக தூக்கி எறிந்தார்கள். பெண்கள் என்று கூட பாராமல் கொடூரமாக தாக்க ஆரம்பித்தார்கள்.

Press-Meet-HC-Adv-PAtroபோராடும் தங்கள் தம்பி, தங்கைக்கு என்ன ஆயிற்றோ என பதறிவந்த பொதுமக்களை கண்ணீர்புகை, தடியடி செய்து போலீசு துரத்தினார்கள். போலீசே தீ வைத்தார்கள். கல்லெறிந்தார்கள்.  கடற்கரையில் தாக்குதலுக்குள்ளான மாணவர்கள் உயிருக்கு பயந்து அருகில் இருந்த மீனவ மக்களிடம் தஞ்சமடைந்தார்கள்.

அடைக்கலம் கொடுத்த  ‘குற்றத்திற்காக’ மீனவர்களின் வீடுபுகுந்து, வயதானவர்கள், குழந்தைகள் என பாராமல் போலீசு லத்தியால் விளாசித்தள்ளினார்கள். திட்டமிட்டு உடைமைகளை சேதப்படுத்தினார்கள். வாழ்வாதாரத்தை சிதைத்தார்கள்.  கண்ணாடி பாட்டில்களை, கற்களை கொண்டு வந்து வீடுகள் மீது எறிந்தார்கள்.

இப்பொழுது சமூக விரோதிகளை கைது செய்துகிறேன் என்று தமிழகம் தழுவிய அளவில் போராடிய மாணவர்களை, இளைஞர்களை குறிவைத்து பகல், இரவு என பாராமல் கைது செய்து வருகிறார்கள்.  கைது செய்வதோடு மட்டுமில்லாமல், எதிர்காலத்தில் போராடக்கூடாது என போலீசு நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்கிறார்கள்.  போராட்டத்தில் கலந்து கொண்ட சில மாணவர்கள், இளைஞர்கள் இன்னும் வீடுவந்து சேரவில்லை என பல குடும்பங்கள் நிம்மதியின்றி அலைந்து திரிகிறார்கள்.

இந்த நெருக்கடியான சூழ்நிலையில் சமூக அநீதிகளுக்கு எதிராகப் போராடும் சமூக அக்கறை கொண்ட வழக்கறிஞர்கள்,  மாணவர்கள் – இளைஞர்கள் மீதான தாக்குதலை நிறுத்த நீதிமன்ற வளாகங்களில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.  பொதுநல வழக்குகள் தொடுத்து வாதாடி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜாமீன் பெற்றுத்தருவது, மருத்துவ உதவி பெற்றுத்தருவது என எல்லாவகையான சட்ட உதவிகளை செய்ய மூத்த வழக்கறிஞர்கள் உட்பட பல வழக்கறிஞர்களும் குழுவாக இணைந்து  செயல்பட்டு வருகிறார்கள். இதில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்கள் பட்டியலையும், அவர்களுடைய தொலைபேசி எண்களையும் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் அறிவித்திருக்கிறார்கள்.

மேலும் கடுமையாக பாதிக்கப்பட்ட கடற்கரையை ஒட்டியுள்ள பல பகுதிகளில் சென்னை உயர்நீதி மன்ற மூத்த வழக்கறிஞர்கள் உட்பட பல வழக்கறிஞர்கள் இணைந்து உண்மை அறியும் குழுவாக கடந்த வாரம் மக்களிடம் பாதிப்புகளை நேரிடையாக கேட்டறிந்தனர்.  இப்பொழுது அறிக்கையாக தொகுத்து உள்ளனர்.  இந்த அறிக்கையை மூத்த வழக்கறிஞர்களும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க நிர்வாகிகளும் சேப்பாக்கம் பத்திரிக்கை மன்றத்தில் (CPC) இன்று (31/01/2017) மதியம் 1:00 மணியளவில் வெளியிட இருக்கிறார்கள்.

பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு அச்சு மற்றும் ஊடக நண்பர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு உரிமையுடன் கோருகிறோம்.

நன்றி !

வழக்கறிஞர் பாவேந்தன்,
சென்னை உயர்நீதிமன்றம்,
சென்னை. 94433 06110

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க