குற்றவாளி ஜெயாவின் படங்கள் மற்றும் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயாவின் சமாதியை அகற்று ! என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் பல்வேறு போராட்டங்களையும், பிரச்சாரங்களையும் தொடங்கியுள்ளனர்.

அதன் அடிப்படையில் இன்று 20.02.2017 விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் உள்ள குற்றவாளி ஜெயா படத்தை அகற்றக் கோரி மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கிருந்த அ.தி.மு.க குண்டர்கள் ரவுடிக் கூட்டத்துடன் தனக்கு பக்கபலமாக போலீசையும் சேர்த்துக் கொண்டு ‘அம்மா’ படத்துக்கு காவல் காத்தனர். இருப்பினும் பொதுமக்களும் தோழர்களும் தடையை மீறி உள்ளே நுழைந்து குற்றவாளி ஜெயாவின் படத்தை அப்புறப்படுத்தினர். பின்னர் அந்த படம் வீதியில் போட்டு நொறுக்கப்பட்டது. தற்போது மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ உட்பட பல தோழர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனாலும் இப்போராட்டம் தமிழகம் முழுக்க தொடரும் என மக்கள் அதிகாரம் தோழர்கள் அறிவித்துள்ளனர் !
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
பத்திரிக்கை, ஊடகம் மற்றும் சமூகவலைதளங்களில் செயல்படும் நண்பர்கள் இந்த செய்தியை பகிருங்கள் மக்களிடம் கொண்டு சேருங்கள்.