Tuesday, April 22, 2025
முகப்புபோலி ஜனநாயகம்போலீசுசீர்காழியில் இருப்பது அரசு போலீசா குற்றவாளி ஜெயாவின் போலீசா ?

சீர்காழியில் இருப்பது அரசு போலீசா குற்றவாளி ஜெயாவின் போலீசா ?

-

ல்லிக்கட்டு போராட்டத்தை ஆதரித்து நடைபெற இருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுத்தது சீர்காழி போலீசு. அடுத்ததாக ஜெயா சமாதியை அகற்றக் கோரி சுவரொட்டி ஒட்டியதற்காகவும் மக்கள் அதிகாரம் அமைப்பின் இரண்டு தோழர்கள் மீது வழக்கு போட்டது. தற்போது இந்த வழக்கை கண்டித்தும் காவல் துறையின் ஜனநாயக மீறலையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தக் கோரினால் அதற்கு அனுமதி மறுத்திருக்கிறது சீர்காழி போலிசு. இந்த சுவரொட்டி ஒட்டினாலும், ஒட்டியவர்களை கைது செய்ததைக் கண்டித்தாலும் அது சட்டம் ஒழுங்கு பிரச்சினையாம்! என்ன பிரச்சினை? சொத்து திருட்டு வழக்கில் ஏ 1 ஆன ஜெயலலிதாவைப் பேசினால் அல்லது அவரது சமாதியை அகற்றுவதுதான் இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கிறது என்று பொருள். மாறாக அந்த குற்றவாளியின் பெயரை அரசு அலுவலங்களில் எடு என்று சொன்னால் அதுதான் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை தோற்றுவிக்கும் என்றால் சீர்காழி போலீசு யாருக்கு வேலை செய்கிறது? அரசியல் சட்டத்திற்கா இல்லை திருட்டு அதிமுகவிற்கா? குற்றவாளி ஜெயாவை எதிர்ப்பது அரசை எதிர்ப்பதாம்!

சீர்காழி காவல்துறையின் ஜனநாயக மீறலை கண்டித்து 02/03/2017 நடக்கவிருந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்க்கு அனுமதி மறுத்த காவல்துறையின் ஆணவ ஆவணம்:

ந.க.எண் – 37/D1  PS/2017
நாள்: 28.02.2017

சீர்காழி காவல் நிலையம்
நாகப்பட்டினம் மாவட்டம்

குறிப்பாணை

மக்கள் அதிகாரம் சார்பில் அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவிக்க அனுமதி கேட்டு, அனுமதி காவல்துறையில் மறுக்கப்படுவதை கண்டித்தும், சுவரொட்டி, ஒட்டினால் வழக்கு போடுவதை கண்டித்தும் வருகின்ற 02.03.2017 ந் தேதி சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் மாலை 4.00 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்த அனுமதி கேட்டு 25.02.2017 ந்தேதி மனு கொடுத்துள்ளீர். மேற்கண்ட பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாலும் சீர்காழி காவல் சரகத்தில் 30(2) Police Act நடைமுறையில் உள்ளதாலும் தங்களுக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது என்பதனை இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இக்குறிப்பாணையை பெற்று கொண்டமைக்கு ஏற்பளிப்பு அளிக்கவும்.

பெறுநர் : T.ரவி
மக்கள் அதிகார ஒருங்கிணைப்பாளர்,
அரசாலமங்கலம்,
பச்சபெருமாள் நல்லூர்.

நகல்:

கனம் துணைகாவல் கண்காணிப்பாளர் அவர்கள்,
சீர்காழி உட்கோட்டம், சீர்காழி.

தகவல்
மக்கள் அதிகாரம், சீர்காழி

தொடர்புக்கு 9843480587

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க