Thursday, April 17, 2025
முகப்புசமூகம்நூல் அறிமுகம்நூல் அறிமுகம் : பாலஸ்தீனம் - வரலாறும் சினிமாவும்

நூல் அறிமுகம் : பாலஸ்தீனம் – வரலாறும் சினிமாவும்

-

பாலஸ்தீனம் – வரலாறும் சினிமாவும்

சில ஆண்டுகளுக்கு முன்புவரை பாலஸ்தீனம் என்றொரு ஊர் இருக்கிறது என்றும், அங்கே ஏதோ பிரச்சனை இருக்கிறது என்றும் மட்டுமே அறிந்துவைத்திருந்தேன். அதற்கு மேல் எதுவும் தெரியாத நிலைதான்.

பாலஸ்தீனத்திலிருந்து அகதிகளாக ஐரோப்பா வந்திருந்த சிலரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் கதைகளைக் கேட்கும் வாய்ப்பும் கிடைத்தது. தூக்கத்தைப் பறித்துக்கொள்ளும் சக்திவாய்ந்த கதைகள் அவை. அதன்பிறகு சர்வதேச பாலஸ்தீன ஆதரவு அமைப்புகள் சிலவற்றில் என்னை இணைத்துக்கொண்டேன். அம்மக்களின் பிரச்சனைகளை இவ்வுலகுக்கு எடுத்துச்சொல்லும் பணிகளில் சிறிதளவேனும் பங்குபெறமுடிந்தது. இந்நூலை எழுதியதும் அதன் ஒரு பகுதியாகத்தான்…

பாலஸ்தீனம் குறித்து எனக்கிருந்த கேள்விகளுக்கு பலநூல்களை வாசித்தும், பல பாலஸ்தீனர்களோடு உரையாடியும், நூற்றுக்கணக்கான திரைப்படங்களைப் பார்த்தும் சேகரித்த பதில்கள், இந்நூலை எழுதுவதற்கு பெருமளவில் உதவின…

பாலஸ்தீனத்தின் வரலாறு என்ன?
பாலஸ்தீனம் ஏன் நாடற்ற பகுதியானது?
இஸ்ரேல் உருவான கதையென்ன?
இன்றைய பாலஸ்தீனர்களின் நிலை எவ்வாறு இருக்கிறது?
பாலஸ்தீனப் போராட்டக்காரர்கள் பயங்கரவாதிகளா?
பாலஸ்தீனத்தின் எதிர்காலம்தான் என்ன?

என்கிற கேள்விகளுக்கு 147 பாலஸ்தீனத் திரைப்படங்களின் உதவியோடு எழுதப்பட்ட நூல் இது.

விருப்பமிருந்தால் ஆன்லைனில் வாங்க:
பாலஸ்தீனம் வரலாறும் சினிமாவும் – thamizhbooks.com
பாலஸ்தீனம் வரலாறும் சினிமாவும் – wecanshopping.com

-இ.பா.சிந்தன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க