Wednesday, April 23, 2025
முகப்புகட்சிகள்பா.ஜ.கமீனவர் - விவசாயிகளுக்காக களமிறங்கிய பச்சையப்பன் மாணவர்கள் !

மீனவர் – விவசாயிகளுக்காக களமிறங்கிய பச்சையப்பன் மாணவர்கள் !

-

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழக மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதையும், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கெடுக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும் கண்டித்து கல்லூரி வளாகத்தினுள் போராட்டம் நடத்தினர்.

வியாழனன்று (09.03.2017) பிற்பகல் 12:00 மணிக்கு பச்சையப்பன் கல்லூரியில் இயங்கிவரும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தலைமையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் வகுப்புக்களைப் புறக்கணித்து போராடினர். மேலும் தமிழக மக்களின் வாழ்வைச் சூறையாட வரும் மோடி அரசை கண்டித்து விண்ணதிரும் முழக்கங்களை முழங்கினர்.

இந்த போராட்டத்தை தொடக்கத்திலே சிதைக்கும் விதமாக கல்லூரி நிர்வாகமும் உளவுத்துறையும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன. இன்று கல்லூரியில் தேர்வுகள் நடக்கிறது எனவே போராட்டத்தை கைவிடும்படி சொல்லிப்பார்த்தது. மேலும் தேர்வு முடிந்தும் போராட்டத்துக்காக காத்திருந்த மாணவர்களை கல்லூரி வளாகத்தை விட்டு விரட்டவும் முயற்சித்தது போலீசு.

இந்தத் தடைகளைத் தாண்டி மாணவர்கள் தங்கள் உணர்வைப் பதியவைக்கும் வகையில் போராட்டத்தை நடத்திக் காட்டினர். இனி அனைத்து பிரச்சினைகளுக்காகவும் களமிறங்குவோம் என பறைசாற்றும் வகையில் இப்போராட்டம் அமைந்தது. டாஸ்மாக்கை மூடும் போராட்டத்த்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்தான் அருகாமை டாஸ்மாக் கடையை உடைத்து நொறுக்கி போர்க்குணத்துடன் போராடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  அதன் பொருட்டே தற்போதைய போராட்டத்தின் போதும் போலீஸ் துறை கல்லூரியை சுற்றி சுற்றி வந்தது.

போராட்டத்தில் முழங்கிய முழக்கங்கள் :

  • நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் மோடி அரசு திணிக்கும்
    கொள்ளிவாய்ப் பிசாசு !
  • வெல்லட்டும்… வெல்லட்டும்…
    நெடுவாசல் விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும் !
  • நாட்டுக்காக தமிழகத்தை தியாகம் செய்யச் சொல்லும்
    BJP-யே தைரியம் இருந்தா பச்சையப்பாஸ் பக்கம் வா !
  • இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு !
    அவன் தூதரகத்தை இழுத்து மூடு !

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
சென்னை – 94451 12675

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க