Monday, April 21, 2025
முகப்புசெய்திLive Updates : சென்னை ஐஐடியில் RSS வெறியாட்டம் - முறியடிப்போம்

Live Updates : சென்னை ஐஐடியில் RSS வெறியாட்டம் – முறியடிப்போம்

-

மாட்டுக்கறி விருந்தில் பங்கேற்ற சென்னை ஐஐடி மாணவரை தாக்கி ஆர்.எஸ்.எஸ் கொலை வெறியாட்டம்!

சென்னை ஐஐடி வளாகத்தில் மாட்டுக்கறி விழா நடத்தப்பட்டதை அறிவீர்கள். அதில் பங்கேற்ற மாணவர் சூரஜ் என்பவர் (அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட உறுப்பினர்) தனியாக இருந்த போது ஐ.ஐ.டி வளாகத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் வட இந்திய மாணவ வெறியர்கள் கும்பலாகச் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளனர்.

கடந்த இரு நாட்களாக மாட்டுக்கறி விருந்தில் பங்கேற்ற வேறு சில மாணவர்களுக்கு இந்த வட இந்திய ஆர்.எஸ்.எஸ் மாணவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து ஐ.ஐ.டி நிர்வாகத்திற்கு புகார் அளித்த பின்னரும் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

அவரது கண்ணில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது என்பதில் இருந்து ஆர்.எஸ்.எஸ் வெறிநாய்கள் எப்படி குதறியிருக்கும் என்று தெரிகிறது. மாணவர் சூரஜ் சங்கர நேத்ராலாயாவில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

பார்ப்பனக் கோட்டையான ஐஐடியில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் தொடங்கப்பட்டு இன்று மாட்டுக்கறி விருந்து வரை வந்துள்ளது இந்துத்துவ பாசிஸ்டுகளுக்கு கொலைவெறியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த கொலை வெறியை தமிழ்நாட்டை விட்டே தூக்கி எறியவேண்டியது தமிழக மாணவர்களின் கடமை! தமிழகம் திருப்பிக் கொடுக்கும் பதிலடியில் இந்தியா திரும்பிப் பார்க்க வேண்டும்.

பெரியார் மண் இது என்று ஆர்.எஸ்.எஸ் நாய்களுக்கு காட்டுவோம்!

(இந்த தாக்குதலை நாடறியச் செய்து மாணவர்கள் இளைஞர்களின் எழுச்சியை உருவாக்கும் பொருட்டு இந்த நேரலையை துவக்குகிறோம். பதிவுகள் முடியும் இடத்தில் அடுத்தடுத்து வரும் load more entries…ஐ அழுத்தவும்.)