Wednesday, April 16, 2025
முகப்புசெய்திLive: மாட்டுக்கறியை தடுப்பது யார் ? மோடி அரசே மோதிப்பார் !

Live: மாட்டுக்கறியை தடுப்பது யார் ? மோடி அரசே மோதிப்பார் !

-

“மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்று அரசு உத்தரவு சொல்லவில்லை. மாடு விற்பனையைத்தான் ஒழுங்குபடுத்தியுள்ளது” என்று பாஜக-வின் தமிழிசை சௌந்திரராஜன் ஊடக சந்திப்பில் பேசுகிறார். உடனே மாடுகளை இறைச்சிக்காக விற்கக்கூடாது, வாங்கக் கூடாது என்று சொல்லிவிட்டு மாட்டிறைச்சியை உண்ணத் தடையில்லையே என்று கூறினால் மாட்டிறைச்சியை எப்படித்தான் சாப்பிடுவது என்று செய்தியாளர்கள் கேட்கிறார்கள்.

உடனே தமிழிசையின் முகம் ரத்தக் காவியாக கொதிக்கிறது. உடனே அந்த செய்தியாளரைப் பார்த்து கழுத்து நரம்பு புடைக்க, “அதை சாப்பிடுவர்களிடம் போய்க் கேளுங்கள். அதை சாப்பிடாத என்னிடம் எப்படிக் கேட்க முடியும்? நாங்கள் மாடுகளை காப்பாற்றுவதைக் கொள்கையாக கொண்டவர்கள். என்னை ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்?” என்று அதிகாரம் இருந்தும் அந்த பத்திரிகையாளர்களை தண்டிக்க முடியவில்லையே எனும் கோபத்தோடு கத்துகிறார்.

இதுதான் ஆர்.எஸ்.எஸ் – பாஜக-வின் இலக்கண சுத்தமான இந்துத்துவ முகம். மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்று அனைத்து கதவுகளையும் அடைத்து விட்டு சாப்பிடுவதை தடை செய்யவில்லை என்று பச்சையாக புளுகுவதன் மூலம் இவர்கள் மாட்டிறைச்சியை நிரந்தரமாக தடை செய்வதே எங்களது நோக்கம் என்று பகிரங்கமாக கத்துகிறார்கள். அதை ஏற்கவில்லை என்றால் அத்லக் – பெஹ்லுகானுக்கு நடந்தது நமக்கும் நடக்கும். சென்னை ஐஐடி மாணவர் சூரஜ்ஜுக்கும் அதுதான் நடந்தது.

சூரஜை கொலை வெறியோடு தாக்கிய மணீஷ்குமார் கும்பலின் மனநிலை என்ன? மத்தியில் நமது ஆட்சி, இராணுவம், துணை இராணுவம், ஐஐடி, அனைத்தும் நம் கையில் இருக்கும் போது ஒரு சூத்திரன் அல்லது பஞ்சமன் தைரியமாக மாட்டுக்கறி சாப்பிட்டால் என்ன ஒரு வெட்கக் கேடு? என்று கண்ணே போகுமளவு சூரஜை அடித்திருக்கிறான். தனது குற்றத்தை மறைத்து ஒரு பொய்க்கதை செட்டப் செய்து அதை ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தின் வானதி சீனிவாசனும், தமிழிசையும், கேடி ராகவனும் தமிழில் வாந்தியெடுப்பார்கள் என்பதும் கூட அவனுக்குத் தெரியும்.

ஏனெனில் அவனது குற்றத்தை மறைக்கும் அந்த பச்சைப் பொய்க் கதையின் லொகேஷன், காஸ்ட்யூம், வெப்பன்ஸ் அனைத்தும் கிராஃபிக்காக சொல்கிறார்கள் மேற்கண்ட இந்துத்வ நிலைய வித்வான்கள்.

ஆகவே மாட்டுக்கறி மீதான நமது உரிமையும் போராட்டமும் விவசாயத்தை காப்பது, விவசாயிகளை ஆதரிப்பதில் துவங்கி இறுதியில் மாடுகளைக் காப்பதோடும் தொடர்புடையது. மற்றொரு புறத்தில் முஸ்லீம், தலித் மக்கள் மீதான அடக்குமுறைக்கும் மாட்டுக்கறி பயன்படுகிறது. பார்ப்பனிய இந்துத்துவத்தை ஒழிக்காமல் இந்தியாவில் ஒரு போதும் நிம்மதி இல்லை என்பது இனி நமது உயிர் வாழும் உரிமையோடு தொடர்புடையது.

தமிழகத்தில் இன்று முழுவதும் பல்வேறு இடங்களில் மாட்டுக்கறி விழாவை ஒரு போராட்டமாக அறிவித்திருக்கிறது மக்கள் அதிகாரம்.

“மாட்டுக்கறியைத் தடுப்பது யார்? மோடி அரசே மோதிப்பார்! சென்னை ஐஐடி மாணவர்களுக்கு ஆதரவாக….எனும் முழக்கத்தோடு நடக்கும் இப்போராட்டங்களை ஒட்டி இன்றைய நேரலையை துவக்குகிறோம்.

(பதிவுகள் முடியும் இடத்தில் அடுத்தடுத்து வரும் load more entries…ஐ அழுத்தவும்.)