Saturday, April 19, 2025
முகப்புமறுகாலனியாக்கம்சிறு தொழில்கள்திருவாரூர் மாட்டுக்கறி தொழிலாளர்கள் நேர்காணல் - வீடியோ

திருவாரூர் மாட்டுக்கறி தொழிலாளர்கள் நேர்காணல் – வீடியோ

-

மாட்டுக்கறி தடையை மோடி அரசு அறிவித்த மறுநாளே திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் செயல்பட்டுவரும் மாட்டிறைச்சி கடைகளில் வேலை செய்பவர்களை சந்தித்தோம்.

இங்கு இத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெரும்பாலான மக்கள் பல ஆண்டுகளாக இத்தொழிலையே செய்து வருகின்றனர். முசுலீம்களின் ஈகைத் திருநாளில் விற்பனையாவதை விட தீபாவளி நாளன்று அதிக மாடுகள் வெட்டப்படுகின்றது. முசுலீம்கள் மட்டுமல்ல தற்போது பரவலாக அனைவரும் மாட்டுக்கறி சாப்பிடுகின்றனர். மேலும் மாட்டுக்கறி மீதான தடை என்பது விவசாயிகளைத் தான் பெரிதும் பாதிக்கும். நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இத்தொழிலை நம்பித் தான் வாழ்கின்றனர்.

ஒரு பக்கம் இப்படி தடை செய்ய வேண்டும் எனக்கூறும் ஆர்.எஸ்.எஸ் கும்பலை சேர்ந்தவர்கள் தான் வெளிநாட்டுக்கு ஏற்றுமதியும் செய்து வருகின்றனர். மாட்டிறைச்சி மீதான தடை என்பது மொத்த சமூகத்துக்குமே எதிரானது என்பதை தங்கள் அனுபவத்தில் இருந்தே தொழிலாளிகளும் வணிகர்களும் அம்பலப்படுத்துகின்றனர். திருவாரூர் மாட்டிறைச்சி வளாகத்தில் எடுக்கப்பட்ட நேர்காணல் இது. வீடியோக்களை பாருங்கள், பகிருங்கள்.