Thursday, April 17, 2025
முகப்புசெய்திநேரலை : இன்றைய செய்திகள் – Live News 08/06/2017

நேரலை : இன்றைய செய்திகள் – Live News 08/06/2017

-

செய்தித் தொலைக்காட்சிகள் பெருகிவிட்ட நிலையில் அவைகளுக்கிடையே போட்டி என்பது என்ன? யார் முதன்முதலாக பிரேக்கிங் நியூசையும் அதன் காட்சிகளையும் வெளியிடுகிறார்கள் என்பதே. இறுதியில் அனைத்து அலைவரிசைகளும் ஒரே செய்தியையும், ஒரே காட்சியையும் வெளியிடுவதாக நீர்த்துப் போகிறது. நடந்தது என்ன என்பதான இந்தப் போட்டி தனது பரிணாம வளர்ச்சியில் சுவையற்ற, சத்தற்ற மக்கிப் போன நொறுக்குத் தீனியாக காதுகளையும் கண்களையும் அச்சுறுத்துகின்றது.

நடந்தவற்றில் எது முக்கியமானது, அது ஏன் அப்படி நடந்தது, பெரும்பான்மை மக்கள் வாழ்வில் அந்த நிகழ்வின் தாக்கம் என்ன என்ற பயணத்தில்தான் குறிப்பிட்ட நிகழ்வின் கருப்பொருளை நாம் கண்டறிய முடியும். செய்திகளை உடனுக்குடன் தருவது பிரச்சினையல்ல, செய்திகளை ஊடுறுவி புரிந்து கொள்வதே நமது பிரச்சினை.

இன்றைய செய்தி நேரலையைத் துவங்குகிறோம்.

தினசரி காலை 10 முதல் மாலை 6 மணி வரை உலகம், இந்தியா, தமிழகம், அறிவியல் தொழில்நுட்பம், சினிமா, டிவி, ஊடகம், உரைகள் போன்ற தலைப்புகளில் குறைந்தது பத்து செய்திகள் வெளி வரும். இருப்பினும் இது ஒரு சோதனை முயற்சியே. உங்கள் ஆலோசனைகள், பங்களிப்புகளையும் தெரிவிக்கலாம். நன்றி

இணைந்திருங்கள் ! (பதிவுகள் முடியும் இடத்தில் அடுத்தடுத்து வரும் load more entries…ஐ அழுத்தவும்.)

  • வினவு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க