Wednesday, April 23, 2025
முகப்புஇதரகேலிச் சித்திரங்கள்பாவல் குஷிஸ்ன்ஸ்கி : வேறுபடும் உலகம் - ஓவியங்கள்

பாவல் குஷிஸ்ன்ஸ்கி : வேறுபடும் உலகம் – ஓவியங்கள்

-

பாவல் குஷிஸ்ன்ஸ்கி (Pawel Kuczynski) போலந்து நாட்டைச் சேர்ந்த ஓவியர். சமூகவியல் நகைச்சுவை பார்வையுடன் இவர் வரைந்த ஓவியங்கள் பிரபலமானவை. 1976 ஆம் ஆண்டு போலந்தில் பிறந்த அவர் போஸ்னன் நுண்கலைக் கல்லூரியில் படித்தவர். 2004 ஆம் ஆண்டு முதல் சமூகவியல் நகைச்சுவை சித்திரங்களை வரைவதில் கவனம் செலுத்தி வருகிறார். இத்துறையில் பல பரிசுகளையும் வென்றுள்ளார்.

அவரது படைப்புகளில் பெரும்பாலானவை வறுமை, பேராசை, அரசியல் மற்றும் இறப்பு ஆகியவற்றை பேசுகின்றன. அவர் சொல்ல வரும் விஷயத்தை ஆதாரங்கள் மற்றும் சித்திரங்கள் கொண்ட விளக்க பாணியுடன் இருக்கும். அவருடைய ஓவியங்கள் எதுவும் மூடு மந்திரமாக பேசுவதில்லை. யதார்த்தமான ஒரு விசயத்தோடு மற்றொரு யதார்த்தமான விசயத்தை எதிர் முரணாக வைத்து அவர் குறிப்பிட்ட கருப்பொருளை உணர்த்துகிறார். இம்மூன்றும் சேர்ந்து அவருடைய ஓவியங்களை சுவாரசியம்கொண்டதாக மாற்றுகின்றன.

காற்று மாசுபாடு

ரத்தத்தை விட வர்ணத்திற்கே மதிப்பு அதிகம்.

கைப்பேசிகள் ரீங்காரிக்கின்றன – குருவி இனங்கள் அழிகின்றன.

காற்று மாசுபாட்டினால் காற்றை விலைக்கு வாங்கும் நிலை

பணக்காரன் vs ஏழை

பெட்ரோல் தட்டுப்பாடு

உலகமயமாக்கல்

உண்மையற்ற பேச்சு

பங்குச்சந்தையின் ஏற்றம்

நன்றி: Graphic art news

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க