Monday, April 21, 2025
முகப்புசெய்திபாஜக ஆளும் மாநிலங்களில் குழந்தை திருமணங்கள் அதிகம் !

பாஜக ஆளும் மாநிலங்களில் குழந்தை திருமணங்கள் அதிகம் !

-

ட இந்திய நகர்ப்புறங்களில் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குழந்தை திருமணம்
குழந்தைத் திருமணம்

குழந்தை உரிமைக பாதுகாப்புக்கான தேசிய கமிசன், மற்றும் எங் லைவ்ஸ் இந்தியா என்ற அமைப்பும் நடத்திய சமீபத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. 2011-ம் ஆண்டின் அரசின் சென்சஸ் புள்ளிவிவரத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.

தேசிய அளவில் ஆண் குழந்தைகளில் 1.32%, பெண் குழந்தைகளில் 1.9% பேர்களுக்கு குழந்தை திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.இருப்பதிலேயே மோசமான மாநிலமாக இருப்பது இராஜஸ்தான் தான்  என்கிறது இவ்வாய்வு. பெண் குழந்தைகளில் 10-17 வயது குழந்தைகளில் 8.3% குழந்தைகளும், 10-20 வயதுடைய ஆண் குழந்தைகளில் 8.6% குழந்தைகளும் குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

குழந்தை திருமணங்கள் அதிகம் நடைபெறும் முதல் 20 மாவட்டங்கள் இராஜஸ்தான், குஜராத், மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருப்பது தற்செயலானது அல்ல. இவ்வாய்வில் குழந்தை திருமணங்கள் மிகமிக குறைவாக நடைபெறும் முன்னேறிய மாநிலங்களாக தமிழ்நாடு உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்கள், காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. தொழில் துறையில் முன்னேறிய மாநிலமாக அறியப்படும் மகாராஷ்டிர மாநிலத்தில் பந்தாரா மாவட்டத்தில் 2001-ஐ விட ஐந்து மடங்கு குழந்தை திருமணம் அதிகரித்துள்ளது.

குழந்தை திருமணங்களில் முதல் 70 மாவட்டங்கள் எடுத்துக்கொண்டால் ஆந்திராவில் சில மாவட்டங்கள் வருகின்றன. ஆனால் தமிழகம் அப்பட்டியலில் இல்லை. மாட்டு மூத்திரத்தை குடிக்கும் மாநிலங்களைவிட மாட்டுக்கறி சாப்பிடும் தமிழகம்,கேரளா போன்ற மாநிலங்கள் குழந்தை திருமணங்களை தடுப்பதில் மிகவும் முன்னேறி இருப்பதை இப்புள்ளிவிவரம் காட்டுகிறது.

குழந்தை திருமணங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களை பாஜக ஆள்வதும், அங்கே செல்வாக்கோடு இருப்பதும் தற்செயலானதல்ல. ஆதிக்க சாதிவெறி, அகமணமுறை இறுக்கம், லவ்ஜிகாத் பெயரில் முசுலீம் மக்களை அச்சுறுத்துவது என பார்ப்பனியம் இங்கே கோலேச்சுகிறது.

தமிழகத்தில் ஏன் குழந்தை திருமணம் குறைவு? இதற்கான விடையை பெரியாரின் குடியரசு தொகுப்புகளின் வாயிலாக அறியமுடிகிறது.

குழந்தை திருமணத்தை ஒழிப்பது இந்துக்களின் மனதை புண்படுத்துகிறது என்று காரணம் கூறி ஆங்கில திருமண வயது சட்டத்தை எதிர்த்த திலகர், மாளவியா, மூஞ்சே உள்ளிட்ட அந்த கால ஆர்.எஸ்.எஸ் முன்னோர்களை எதிர்த்து பெரியார் நடத்திய போராட்டத்தை பெரியாரின் மொழியிலேயே வினவில் வெளியிட்டிருந்தோம். அதை இந்த இணைப்பில் படிக்கலாம்.

குஜராத், ம.பி, உ.பி என ‘மாட்டு’ மாநிலங்களின் அருகதை சந்தி சிரிக்கிறது. வட இந்தியாவை சுடுகாடாக வைத்திருக்கும் இந்த புண்ணியவான்கள் தான் திராவிட இயக்கம் தமிழகத்தை சீரழித்துவிட்டதாகவும், இவர்கள் வந்து தூக்கி நிறுத்த போவதாகவும் சவடால் அடிக்கிறார்கள்.

செய்தி ஆதாரம்:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க