Monday, April 21, 2025
முகப்புவாழ்க்கைகுழந்தைகள்இந்தியாவின் தீட்(ண்)டப்படாத வைரங்கள் - ஆவணப்படம்

இந்தியாவின் தீட்(ண்)டப்படாத வைரங்கள் – ஆவணப்படம்

-

இந்தியாவில் ஐம்பது லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் மேதைகளுக்குரிய அறிவுத்திறனை கொண்டுள்ளனர். ஆனால் அவர்கள் பெரும்பாலானோர் சேரிகளில் வாழ்வதால் ஒருபோதும் கண்டறியப்படுவதில்லை.

இப்போது வரை கல்வியின்மை மற்றும் வாய்ப்பின்மை ஆகியவற்றால் அவர்களது திறமை உணரப்படாமலேயே போய்விடுகிறது.

அல்ஜஜீராவின் இந்த ஆவணப்படத்தில் 101 கிழக்கு (101 East) குழு ஏழ்மையான சூழ்நிலையிலுள்ள பிரகாசமான குழந்தைகளை கண்டுபிடிக்க முயற்சிக்கும் வழிகாட்டி மற்றும் கொடையாளர்களை பின்தொடர்கிறது.

அவர்கள் சரியான வாய்ப்பும், பள்ளிக் கல்வியும், ஆதரவும் கிடைக்கும் போது இந்த “தீட்டப்படாத வைரங்கள்” இறுதியாக தாங்கள் பிரகாசிக்கும் வாய்ப்பை எப்படி பெறுகிறார்கள் என நமக்கு காட்டுகின்றனர்.

நன்றி : அல்ஜசீரா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க