Monday, April 28, 2025
முகப்புபுதிய ஜனநாயகம்புதிய ஜனநாயகம் - ஜூன் 2017 மின்னிதழ்

புதிய ஜனநாயகம் – ஜூன் 2017 மின்னிதழ்

-

புதிய ஜனநாயகம் ஜூன் 2017 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள் :

1. விவசாய நெருக்கடிக்குத் தீர்வு – உழவனின் அதிகாரமே!
உழவர்களின் எதிரிகள்தான் அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்பதைத்தான் நடப்பவையெல்லாம் எடுத்துக்காட்டுகின்றன. இந்நிலையில் ம.பி., மகாராஷ்டிர மாநில உழவர்கள் தம்மைத்தாமே வருத்திக்கொண்டு, ஆட்சியாளர்களின் கருணையைக் கோரும் சாத்வீகமான போராட்டத்தை நடத்தாமல், ஆட்சியாளர்களை அச்சுறுத்தும் போராட்டங்களை நடத்த முன்வந்திருப்பது காலத்திற்கேற்ற நியாயமான மாற்றம்தான்.

2. ஐ.ஐ.டி. யில் மாட்டிறைச்சி விழா!
அக்லக் கொலைக்கும் சூரஜ் தாக்குதலுக்கும் அடிப்படையில் வேறுபாடு இல்லை. இது தமிழகம் என்ற ஒரு வேறுபாட்டைத் தவிர.

3. ஐ.டி. ஆட்குறைப்பு: கனவு கலைகிறது நிஜம் சுடுகிறது!
வேலை கொடுப்பதல்ல, இலாபம் ஈட்டுவதே மூலதனத்தின் நோக்கம் என்பதைப் பொட்டில் அடித்தாற்போலப் புரிய வைக்கிறது, ஐ.டி. துறையில் நடந்துவரும் மாற்றங்கள்.

4. கொம்பில் சிக்கிய கோமாளி
கால்நடைச் சந்தைகளை முறைப்படுத்துவது என்ற பெயரில் மோடி அரசு அறிவித்திருக்கும் விதிகள், கோமாதாவை ” இன அழிப்பு” செய்வதன் வாயிலாக, இனி வேறு யாரும் பசுக்கொலை செய்யத் தேவையில்லாத நிலையை உருவாக்கும்.

5. அ.தி.மு.க. அம்மா அரசு: ஆளத் தகுதியற்ற கழிசடைகளின் கூடாரம்!
அதிகாரத்தைப் பயன்படுத்தித் தமிழகத்தைக் கொள்ளையடிப்பதும் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்க இந்து மதவெறி பா.ஜ.க.விற்குப் பல்லக்குத் தூக்குவதும்தான், அ.தி.மு.க.வின் ஒரே வேலை

6. சமஸ் வழங்கும் இட்டிலி உப்புமா!
சித்தாந்த ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் தடுமாற்றமின்றி பாசிசத்தை எதிர்த்து நிற்கும் சக்திகள் யாரென்று எச்.ராஜாவுக்கும் பொன்னாருக்கும் தெரிந்திருப்பதால்தான் அவர்கள் நக்சல் ஆதரவு இயக்கங்களை ஒடுக்கச் சொல்கிறார்கள். சமஸ் ஒதுக்கச் சொல்கிறார். இரண்டு சொற்களுக்கும் அவற்றின் பொருளுக்கும் ஒரு எழுத்துக்கு மேல் வேறுபாடு இல்லை.

7. நீட் தேர்வு: வெளக்குமாறுக்குப் பட்டுக் குஞ்சம்!
தமிழக மாணவர்களின் உரிமைகளைப் பறித்ததைத் தாண்டி, தனியார் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையையோ, முறைகேடுகளையோ நீட் தேர்வு தடுத்துவிடவில்லை.

8. தோற்றுப்போன நீதித்துறை!
வழக்கை இழுத்தடித்துக் குற்றவாளிகளைக் காப்பாற்றும் அல்லது அப்பாவிகளைச் சட்டவிரோதமான முறையில் தண்டிக்கும் நீதிபதிகளுக்கு என்ன தண்டனை

9. சகரான்பூர்: பல்லிளிக்கிறது ஆதித்யநாத்தின் தாக்கூர் சாதிவெறி!
யோகி ஆதித்யநாத் நல்லவர், வல்லவர், திறமைசாலி என்று பில்டப் கொடுக்கிறது நம்மூர் ஆதித்தனார் பத்திரிகையான தினத்தந்தி. அங்கே, ஆதித்யநாத்தின் முகமூடியைக் கிழிக்கிறது தலித் மக்களின் போராட்டம்.

புதிய ஜனநாயகம் ஜூன் 2017 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 2 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

புதிய ஜனநாயகம் மாத இதழின் ஆண்டுச் சந்தா : உள்நாடு ரூ.180

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க