Monday, April 21, 2025
முகப்புஉலகம்அமெரிக்காஏமன் மக்கள் மீது காலராவை ஏவிவிடும் அமெரிக்க-சவுதி கூட்டணி

ஏமன் மக்கள் மீது காலராவை ஏவிவிடும் அமெரிக்க-சவுதி கூட்டணி

-

ண்ணெய் வளம் மிக்க வளைகுடா நாடான ஏமன் இன்று காலரா நோயின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கிறது. அமெரிக்க ஆதரவிலான சவுதிக் கூட்டுப்படைகளின் வான்வெளித் தாக்குதல்கள் மற்றும் கடற்படை முற்றுகைகளால் ஏமன் மக்களின் சுகாதார நிலைமைகள் மற்றும் நீராதாரங்கள் சூறையாடப்பட்டு விட்டன.

காலராவினால் பாதிக்கப்பட்டுள்ள ஏமன் மக்களின் எண்ணிக்கையோ இலட்சத்தையும் தாண்டிக் கொண்டிருக்கிறது. ஐக்கிய நாடுகளின் புள்ளிவிவரத்தின் படி ஒவ்வொரு மணி நேரத்திலும் ஒரு மனித உயிர் பறிபோகிறது. 2017, ஏப்ரல் 27 ஆம் தேதியில் இருந்து இதுவரை 859 மனித உயிர்கள் பலியாகி உள்ளன.

அமெரிக்க-சவுதி கூட்டுப்படைகளின் தொடர் தாக்குதல்களால் தூய்மையான உணவு மற்றும் குடிநீர் கிடைப்பதில் இருந்து  ஏமன் மக்கள் தடுக்கப்பட்டுள்ளனர். இதன் நேரடி விளைவான காலரா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் பெரும்பாலான மருத்துவமனைகள் மூடப்பட்டு விட்டன.

ஏமன் மக்களை விழுங்கி வரும் காலரா நோயின் கோரத்தைப் பற்றிய மேலதிக விவரங்களுக்கு அல்ஜசீராவில் (aljazeera) வெளியான காணொளியைக் காணலாம்.

நன்றி: அல்ஜசீரா
செய்தி ஆதாரம்:  Cholera Death Toll Tops 859 in War-Torn Yemen as U.S.-Backed Saudi Assault Continues

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க