Thursday, April 17, 2025
முகப்புபார்வைஃபேஸ்புக் பார்வைபுதுதில்லி ரப்பர் ஸ்டாம்ப் - பந்தாடுகிறது தமிழ் ஃபேஸ்புக்

புதுதில்லி ரப்பர் ஸ்டாம்ப் – பந்தாடுகிறது தமிழ் ஃபேஸ்புக்

-

தமிழச்சி (Tamizachi)

***

லித் சமூகத்தை சேர்ந்தவங்க …தாக்கப்படும் போதும்,கொல்லப்படும் போதும்,அவர்களின் குடியிருப்புகள் தீ வைத்து அழிக்கப்படும் போதும் அமைதியா வேடிக்கை பார்த்துகிட்டு இப்ப தலித் சமூகத்தை சேர்ந்தவரை குடியரசு கேன்டிடேட் ஆக நிறுத்தி இருப்பது எப்படி இருக்குனா…ஒரு குடும்பத்த உசுரோட கொளுத்தி புட்டு…அவன் குடும்ப தலைவனுக்கு சிலை வைக்கற மாதிரி இருக்கு இவிங்க டிராமா……ஆனா நீங்க எல்லாம் நிமிசத்துக்கு ஒரு போஸ்ட் அவர் தலித் இனத்தவர்னு போட்டு போட்டு….நாளைக்கே அவர் குடியறசு தலைவர் ஆனாலும் கூட அவருடைய மற்ற நல்ல பின்புலம் எதாச்சும் இருந்தா கூட அதை வெளிக்கொனறாது…அவர் தலித் இனத்தவர் என்ற ஒரு கருத்தை மட்டும் மக்கள் மனசில் பதித்த எல்லா நல்ல ஆர் எஸ் எஸ் உள்ளங்களுக்கும் நன்றி…….எப்படி எடியூரப்பா ஹோட்டல்ல வாங்கிட்டுப் போய் தலித் வீட்ல உக்காந்து சாப்டேனு போஸ்டர் அடிச்சி ஒட்டினாரோ…எப்படி செத்துப்போன நந்தினி வீட்ல உக்காந்து பொன்னர் மீன் வருவல் சாப்டு ஆறுதல் சொன்னாரோ அது மாதிரி தான் இருக்கு உங்க குடியரசு தலைவர் கேன்டிடேட் அனோன்ஸ்மென்ட்

Arun Santhosh

***

பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் முன்பு உத்திரப்பிரதேச எம்பியாக இருந்த போது தனது தொகுதி நிதியில் கட்டிய மேம்பாலம்
இந்தியர் என்றால் அதிகம் பகிருங்கள்….

Prabakar Kappikulam

***

மோடி-அமித்ஷா குடுமி சும்மா ஆடாது…

பிஜேபியின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், உபியில் தலித் பிரிவில் வரும் கோரி (Kori) என்னும் நெசவு சாதியை சேர்ந்தவர்.. இந்த சாதியானது, குஜராத்தில் கோலி (Koli) எனப்படும் OBC பிரிவில் வருகிறது.. அங்குள்ள மக்கள் தொகையில் 20% இந்த கோலி பிரிவு மக்கள் தான்.. வட இந்தியாவில் கோரி, கோலி என பல பெயர்களில் இந்த சாதியினர் உள்ளனர்.. மாநிலத்துக்கு மாநிலம் SC, OBC என பட்டியல் மாறும்..

பல ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருபதாலும், படேல் பிரிவின் கோபத்தாலும், சில மாதங்களில் நடைபெறும் குஜராத் சட்டமன்ற தேர்தலில் பிஜேபிக்கு கடுமையான சவால் உள்ளது.. இந்நிலையில் கோலி பிரிவினரின் வாக்குகளை கவரவே, ராம்நாத் கோவிந்த்தை ஜனாதிபதி வேட்ப்பாளராக அறிவித்துள்ளது மோடி-அமித்ஷா ஜோடி.. அகில இந்திய கோலி சாமாஜ்ஜின் (Akhil Bhartiya koli Samaj) தலைவர் யார் தெரியும்மா?? இந்த ராம்நாத் கோவிந்த்தான்.. (A lawyer by profession, Kovind had also been BJP Scheduled Caste Morcha chief (1998-2002) and President of the All-India Koli Samaj.)..

சரி, பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதியாகியதால், பிராமணர்கள் ஓட்டு காங்கிரஸ்சுக்கு வந்ததா?? பிரதீபா படேலை ஜனாதிபதியாகியதால் படேல் சாதி ஓட்டு காங்கிரஸ்சுக்கு வந்ததா?? அல்லது முதன் முதலாக தலித் ஒருவரை, K.R. நாராயணனை ஜனாதிபதியாகியதால், எல்லா தலித் ஓட்டுகளும் காங்கிரஸ்சுக்கு வந்ததா??
அப்துல் கலாமை குடியரசுத் தலைவர் ஆக்கியதால், இசுலாமியர் மீது நஞ்சு கக்குவதை பிஜேபி RSS நிறுத்தி விட்டார்களா?..

இதெல்லாம் வெறும் அடையாள பதவிகள் தானே..

– Prakash JP,
***

திகாரம் இல்லா #பதவி அது .. ஒன்னும் செய்ய முடியாம அப்பேற்பட்ட Missile man அப்துல் காலம் ஐயாவே வெறும் கனவு மட்டுமே காண வைச்ச பதவி .. இந்த பஞ்சு மிட்டாய் லுலாயி எல்லாம் வேணாம் ..

பவர் புள் மத்திய மந்திரியாக ராஜாவை #திமுக செய்து அழகு பார்த்தது .. மகாராஷ்டிரா முதல் மந்திரியாக ஷிண்டவை #காங்கிரஸ் அமர்த்தி பெருமை சேர்த்தது .. இத மாதிரி அதிகாரத்தை அவர்கள் கையில் கொடுக்க முடியுமா முடியாதா ..

போடுறது லெப்ட்ல வெமுலாவை ., ரைட்ல கோவிந்த வுக்கு ரப்பர் ஸ்டாம்ப் போஸ்ட் .. இதிலே எங்களை மாதிரி உண்டா ன்னு ஓவர் சவுண்ட் வேற ..

ரொம்ப ஓல்ட் ஸ்டைல் பாலிடிக்ஸ் #bjp #rss .. போங்க போய் எல்லா இந்தியர்கள் கணக்கில் 100 kilos தங்க கட்டி போடறேன் ., காவேரியை டைரக்ட் ஆ பைப் மூலம் வீட்டு குழாய்க்கு கொண்டு வரேன் .. வித்தியாசமா ட்ரைன்னு பண்ணுங்க

Venkat Ramanujam
***
ன்று வரை பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தவரின் தகுதியாக தலித் என்று தான் உரக்க சொல்லப் படுகிறது ….(அப்ப அப்ப ஆளுநர் வக்கீல் …)

நாட்டின் முதல் குடிமகனாக தேர்ந்தெடுக்கப் படபோறவர் என்ன சாதி என்பது தான் தகுதியா ????
ரப்பர் ஸ்டாம்பா வர என்ன தகுதி வேணும்….
குறிப்பு: அவரின் ஜாதி சில மாநிலத்தில் SC பிரிவிலும் சில மாநிலத்தில் BC பிரிவிலும் வருதாம்….

Raja Prabhu VK

***

ப்படித்தான் ராம்னாத் சாலையில் செல்லும் போது…

ஒரு முறை மோடி அழைக்கும் போது…

இப்படி பல கதைகள் வரும்!!! எஞ்சாய் மக்களே!!!

Raja Prabhu VK

***

Meenakshi Sundaram Somaya

***

Manoj Savarimuthuraj….ன் பதிவு… (ஆதாரத்துக்கு 26.03.2010 ல் Hindustan Times நாளிதழ் செய்தியோட லிங்க் முதல் கமெண்ட்ல போட்டிருக்கு)

யாரை குடியரசு தலைவராக பெறப் போகிறோம் ?

டந்த 2009-ல் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி , சமூக ,பொருளாதார நிலையில் பின் தங்கிய சிறுபான்மையினருக்கு ( முஸ்லீம் 10 + இதர பிரிவு 5) வேலைவாய்ப்பில் 15% இடஒதுக்கீடு வழங்கலாம் என பரிந்துரைக்கிறது. அது குறித்த கேள்வியை அப்போதுதான் புதிதாக பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்ட ராம்நாத் கோவிந்தாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அதற்கு அவர் கூறியது

” என்னது இட ஒதுக்கீடா , முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் ஏலியன்கள். ரங்கநாத் மிஸ்ரா குழு பரிந்துரைகளை உடனடியாக நீக்க வேண்டும் ” என்றார்..

“சார், ரொம்ப பின் தங்கி இருந்தா கொடுக்கலாமே ” என மீண்டும் வினவ ,

“முஸ்லீம்களையும், கிறிஸ்தவர்களையும் சிறுபான்மையினர் என சொல்வது அரசியலமைப்புக்கு எதிரானது” என்றார்.

அப்போ , சீக்கிய தலித்துகளுக்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறதே என கேட்ட பொழுது ” ஏலியன்களுக்கு இட ஒதுக்கீடு ஏன் ? என்றார்…

செய்தி ஆதாரம் : Islam, Christianity alien, so cannot get quota: BJP

Radhakrishnan Tirunelveli

***

செயல் கோலம் போட்டுட்டு இருக்காராம்.. கோயிந்து ஜனாதிபதி ஆகிட்டாராம்..

காவி பாய்ஸ்..

எதுக்கும் எதுக்கும் கம்பேர் பண்றதுன்னு கூட அறிவில்லாம இருக்கிறீங்க சரி…

செயல் கோலமாவது போடுறார்..

ஆனா அத்வானி கையில கோல மாவு கூட இல்லாம குச்சியை கையில் பிடிச்சிட்டு நிக்கிறாரே.. வெக்கமா இல்லையா?

சித்தன் ஆனந்த்குமார்

***

லித் என்பவர் யார்?

படித்து, பட்டம் பெற்றவுடன் தன் மக்களை விட்டு தூரமாகச் சென்று சாதி அடையாளத்தை மறைத்து வாழ்பவர் தலித்தாக இருக்கலாம் பிறப்பால். ஆனால் தன் அடையாளங்களை மறைத்து, மூன்றாம் தர பார்ப்பனன் போல் வாழ நினைப்பவர் எப்படி தலித்தாக முடியும்?

அந்த வகையில் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், பிறப்பால் தலித்தாக இருந்தாலும் அவர் தலித்தே அல்ல. எந்த இந்து மதம் அவரை தலித், தீண்டதகாதவன் என முத்திரை குத்தி தனியே ஒதுக்கி வைத்து கல்வி, அரசியல், பொருளாதரம் என எதிலும் இடம் கொடுக்கமால் ஒதுக்கி வைத்ததோ, அந்த இந்துமதத்தின் வாலைப் பிடித்து தொங்கி, தன்னை நிரூபித்துக்கொண்டிருக்கும் அவர் ஒரு போதும் தலித்தாக வாழ முடியாது…தலித்தாக இருக்க முடியாது.

ஆகையால் பாஜக செய்யும் சாதி அரசியலுக்கு பலியாகமல் இருப்பதே உத்தமம்.

நாச்சியாள் சுகந்தி

***

னாதிபதி, ஆளுநர் பதவிகள் என்பது மன்னராட்சியின் நீட்சியே. மக்களாட்சியில்(?) மன்னர்களுக்கு என்ன வேலை? விருது கொடுப்பதும், பதவிப்பிரமாணம் செய்துவைப்பதை தவிர நாட்டிற்கு எந்த விதத்திலும் பிரயோஜனம் இல்லை.

ஆனால் ஒருவருக்கு மட்டும் மிக மிக நன்மை. அது வேறு யாருமல்ல அந்த ஜனாதிபதி தான்.

இதே பிஜேபி தான் அப்துல்கலாமையும் ஜனாதிபதி ஆக்கினார்கள். நாட்டிற்கு ஏதாவது நல்லது நடந்ததா..? சோனியாவை பதவிக்கு வராமல் நிறுத்தி வைத்தார். சோனியா மன்மோகன் என்ற பொம்மையை வைத்து ஆண்டார். சிறுபான்மையினர் வாழ்வில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்ததா..

இப்போது ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரை ஜனாதிபதி ஆக்கப்போகிறார்கள். இங்கே பிரதமரே கார்பொரேட் பொம்மை தான் எனும்போது ஜனாதிபதி யார் வந்தால் என்ன? ஒரு மாற்றமும் நடந்துவிட போவதில்லை. வெட்டிப் பெருமையை தலித்துகள் கேட்கவில்லை. குறைந்தபட்ச சமூக நீதியை தான் கேட்கிறார்கள். அதற்கே நிறைய போராட வேண்டியிருக்கிறது.

ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த கவுன்சிலரினால் கூட சிறு மாற்றம் நிகழ வாய்ப்பிருக்கிறது. ஆகவே பொம்மை அதிகாரத்தை விட உண்மை அதிகாரம் தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தேவை.

Karthikeyan Fastura

***

ன்று பாபாசாஹிப் அம்பேத்கரை வீழ்த்துவதற்காக, காங்கிரஸ் கட்சியின் வலதுசாரிகள் கண்டெடுத்தது பீஹாரிலிருந்து பாபுஜி ஜெகஜீவன் ராம்!

இன்று அதே நோக்கத்திற்காக, அதே சக்திகள், அதே பீஹாரிலிருந்து ராம்நாத் கோவிந்த்!

Kallal Anbalagan

***

நீங்கள் தலித்தா பார்பனரா என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். உங்கள் எஜமானன் யார், நீங்கள் யாருக்கு விசுவாசமாக இருப்பீர்கள் என்பதுதானே கேள்வி.

அனுஷ்
***

கே.ஆர் நாராயணன் என்கிற தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை ஜனாதிபதி ஆக்கிய காங்கிரஸ் கட்சி நாங்கள் தலித்தை ஜனாதிபதி ஆக்கிவிட்டோம் என்று பீற்றித் திரியவில்லை. தலித் சமுதாயத்தை சேர்ந்த கே.ஆர் நாராயணன் ஜனாதிபதி ஆனதால் தலித் சமுதாயத்தின் இன்னல்கள் நீங்கவும் இல்லை. அவர்களின் துயரம் இன்றளவும் நீடிக்கவே செய்கிறது.

அப்துல் கலாம் என்கிற ஒரு முஸ்லிமை ஜனாதிபதி ஆக்கியதால் முஸ்லிம் சமுதாயத்தின் எந்த இன்னலும் இதுவரை நீங்கியதே இல்லை. இன்னல்கள் நீங்காதது ஒரு புறமிருந்தாலும் பாபர் மஸ்ஜித் போன்ற முஸ்லிம்களின் உரிமைக்காக ஒரு ஜனாதிபதி பதவியில் இருந்தவரால் கூட குரல் எழுப்ப முடியவில்லை.

இதனால்தான் ஜனாதிபதி பதவி என்பது ஒரு ரப்பர் ஸ்டாம்ப் பதவி என்று பலரும் விமர்சிக்கின்றனர். பாஜக-வினர் கூட இந்த ரப்பர் ஸ்டாம்ப் என்கிற விமர்சனத்தை செய்தவர்கள் தான்.

எதார்த்தம் இப்படியிருக்க ராம்நாத் கோவிந்த் என்கிற தலித் ஜனாதிபதி ஆகிவிட்டால் தலித் சமுதாயத்தினரின் வாழ்வு வளமாகிவிடும் என்று டவுசர் வாலாக்கள் அள்ளி விடுவதெல்லாம் தார்ப்பாயில் வடிகட்டிய பொய். இதை தலித் சமுதாயம் நம்ப போவதில்லை. அப்படி நம்பினால் அவர்களை விட ஏமாளிகள் இங்கே வேறு யாரும் இல்ல

 Usman Khan