Wednesday, April 23, 2025
முகப்புசெய்திமாடு தடை : தீப்பொறியாய் தெறிக்கும் விவசாயிகள் - வீடியோ

மாடு தடை : தீப்பொறியாய் தெறிக்கும் விவசாயிகள் – வீடியோ

-

றைச்சிக்காக மாடுகள் விற்பதை தடை செய்து வெளியான அறிவிப்பைத் தொடர்ந்து நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பலைகள் கிளம்பின. குறிப்பாக மேற்கு வங்கம், கேரளா, கோவா, புதுவை மற்றும் வடகிழக்கு மாநில அரசுகள் இந்த தடையை அமல்படுத்த முடியாது என அறிவித்துவிட்டன. தமிழகத்தின் மக்கள் மத்தியில் குறிப்பாக விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவினாலும் மோடியின் எடுபிடியான எடப்பாடி அரசு கள்ள மெளனம் சாதித்து வருகிறது.

ரெய்டுகள் மற்றும் அதிகாரவர்க்க செல்வாக்கு என தமிழகத்தை மோடி அரசு கட்டுப்படுத்தி வருவதன் மூலம், ஓ.பி.எஸ் – எ.பி.எஸ் என தமிழகத்தில் இனி முதலமைச்சராக யார் வந்தாலும் சரி மிச்சர் சாப்பிட மட்டும் தான் வாய்திறக்க வேண்டும் என்பது பா.ஜ.க -வின் உத்திரவாக உள்ளது. பா.ஜ.க காலால் இட்டதை தலையால் செய்து முடிக்கிறது இந்த அ.தி.மு.க. கிரிமினல் கும்பல். அதன் ஒரு பகுதியாகத் தற்போது ஜி.எஸ்.டி -யை சட்டசபையில் நிறைவேற்றியுள்ளது தமிழக அரசு.

பா.ஜ.க -வின் தமிழக அல்லக்கைகளோ மெரினாவில் மக்களால் காறி உமிழப்பட்டாலும் அதைத் துடைத்துப் போட்டுவிட்டு; இடுப்பு வேட்டியை இறுக்கிக் கொண்டு டி.வி-க்களில் வரிந்து கட்டுகின்றனர். அவர்களும் பல்வேறு மாடுலேசன்களில் பேசிப் பார்க்கின்றனர், மாட்டுக்கறி சாப்பிட தடை ஏதும் இல்லை. நமது நாட்டின் விலங்கினங்களைப் பாதுகாக்கத் தான் இந்த சட்டம் எனப் பம்முகிறார் பொன்னார். தமிழிசையோ மாட்டுக்கறி எப்படி உண்பது என்பதை அதைச் சாப்பிடுபவர்களிடம் போய் கேளுங்கள் என்கிறார். அர்ஜுன் சம்பத் மாடுகளை கோசாலைகளில் விடச் சொல்லுகிறார். இவ்வாறு தமிழகத்தில் தலைகீழாக தண்ணீர் குடிக்கும் ஆசனங்களைச் செய்துகாட்டினாலும் அவை எடுபடுவதில்லை. ஆனாலும் தினசரி பா.ஜ.க பக்கவாத்தியங்களை அரங்கேற்றம் செய்து வைக்கின்றன ஊடகங்கள்.

மற்றொரு பக்கம் மத்தியில் ஆளும் மோடி கும்பல் சாதாரன மக்களின் புரத உணவான மாட்டுக்கறிக்கு தடை போட்டுவிட்டு; தனது ஊளைச்சதையை குறைக்க யோகா டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறது. மாடு, மாட்டு சாணி, மாட்டு மூத்திரம் இவற்றை வைத்தே அரசியல் நடத்திவரும் காவிக் கும்பலின் தடையை சாதாரண விவசாயிகள் தங்கள் வார்த்தைகளால் தோலுரித்துக் காட்டுகின்றனர்.

தீ பற்ற காத்திருக்கும் சருகுகளாய் மக்களிடமிருந்து பொறியாக தெறிக்கும் வார்த்தைகளைக் கேளுங்கள். இந்த வீடியோவைப் பாருங்கள் பரப்புங்கள்!

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க