Tuesday, April 22, 2025
முகப்புசெய்திமெரினா நட்சத்திரங்களே வாருங்கள் ! காஞ்சிபுரம் கல்லூரியில் புமாஇமு வரவேற்பு

மெரினா நட்சத்திரங்களே வாருங்கள் ! காஞ்சிபுரம் கல்லூரியில் புமாஇமு வரவேற்பு

-

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியின் தொடக்க நாளான 16.06.17 மற்றும் 20.06.17 ஆகிய நாட்களில் மெரினாவில் மிளிர்ந்த நம்பிக்கை நட்சத்திரங்களே கல்லூரி வானில் ஒளிவீச வாருங்கள்

என வாழ்த்தி வரவேற்கும் பு.மா.இ.மு என்று புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தலைமையில் இனிப்புடன் வரவேற்பு பிரசும் கொடுத்து வரவேற்றோம்.

முதலாம் ஆண்டு கல்லூரிக்கு வரும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் தரும் வகையில் கல்லூரி நிர்வாகம் தான் இதனை நடத்த வேண்டும். ஆனால் இப்படி செய்வதன் மூலம் மாணவர்கள் தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும் தவறை தட்டி கேட்பவர்களாக மாறிவிடுவார்கள் என்ற காரணத்திற்காகவே கல்லூரி நிர்வாகம் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை.

முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் உறுப்பினர்களான மூன்றாம் ஆண்டு மாணவர்கள் புதிதாக வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் நாங்கள் உங்களை வரவேற்கிறோம். நாம் ஒற்றுமையாக இருப்போம். உங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றாலோ உதவி தேவைப்பட்டாலோ சொல்லுங்கள் என்று கூறினோம். இதை கேட்ட புதிய மாணவர்களின் பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் இப்படித்தான் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கூறினர்.

கல்லூரியின் வாயிலில் கூட்டமாக மாணவர்களை வரவேற்பு நிகழ்ச்சி நடத்தியதை பார்த்த இரண்டு பேராசிரியர்கள் மாணவர்களை சாலை மறியல் போராட்டத்திற்கு அழைத்துச் செல்கிறார்களே என்று நினைத்து அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். சீனியர் மாணவர்கள் நாங்கள் முதலாம் ஆண்டு மாணவர்களை வறவேற்கிறோம் என்று கூறியதும் சரி என்று பின்னர் சீனியர் மாணவர்களின் HOD மற்றும் பேராசிரியர்களை அழைத்து நீங்கள் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சிகளை வகுப்பறைகளிலே கூட நடத்துங்கள். நாங்கள் அனுமதிக்கிறோம் என்று கூறினார்கள்.

கல்லூரி மாணவர்கள் மத்தியில் இத்தகைய வரவேற்பு நிகழ்ச்சி பெரும் உற்சாகத்தையும் நாம் அமைப்பாக வேண்டும் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சீனியர் மாணவர் ஒருவர் கூறும் பொழுது நான் போன வருசம் எல்லாம் ஜூனியர்களிடம் இப்படி கைகுலுக்கி வரவேற்று சிரித்து பேசியது எல்லாம் கிடையாது. ஆனால் பு.மா.இ.மு மூலம் இப்படி நட்பாக பழக வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளது என்றார்.

பொதுவாக புதிதாக சேரும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் ரேகிங் பயம் என்பதை போக்கி நட்பாக பழகும் பண்பாட்டையும், புதிய மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் நல்ல மாணவர்கள் உள்ள கல்லூரியில் தான் நம் பிள்ளையை சேர்த்துள்ளோம் என்ற நம்பிக்கையையும், கல்லூரி பேராசிரியர்களுக்கும் புதிதாக வரும் மாணவர்களை வரவேற்க வேண்டும், என்ற உயரிய பண்பாட்டையும் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி விதைத்துள்ளது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
காஞ்சிபுரம்.