பல்லாவரம் இரயில் நிலையத்தில்லிருந்து சுமார் 2-3 கீ.மீ துரத்தில் உள்ளது பாரதி நகர் மலைமகள் தெரு இந்த பகுதி திரிசூலம் இரயில் நிலையம் எதிரே நாம் பார்க்கும் பரந்து விரிந்த உள்ள மலையடிவாரத்தை சுற்றி மக்கள் குடியிருப்பதை போலத்தான் இங்கு 600 குடும்பங்கள் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வாழ்ந்து வருகிறார்கள்.
இப்பகுதி மக்கள் மேற்குறிப்பிட்ட மலையருகில் குடியிருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கூலி வேலை செய்யும் சாதாராண உழைக்கும் மக்கள். வேலைக்கு செல்வோர் பள்ளி – கல்லுரி செல்லும் மாணவர் – மாணவிகள் அனைவருமே மலைக்கு கீழே இறங்கி வந்து தான் வெளியே செல்லமுடியும். நகரங்களில் பிழைப்புத் தேடி வந்து குடியேறிய இம்மக்கள் வந்து வாழத் தொடங்கிய பிறகுதான் காடாக இருந்த இந்த இடம் குடியிருப்பாக பரிணமித்தது. கடந்த 5 -10 ஆண்டுகளுக்கு முன்புதான் இம்மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட இடத்தில் மைதானம் போல் உள்ள சமவெளி பகுதியை குறிப்பாக மக்கள் செல்லும் வழியை ஆக்கிரமித்துள்ளான் ஆபாச சாமியார் நித்தியானந்தா. இவனது சீடர்கள் என்ற பெயரில் உள்ள பொறுக்கிகளின் அட்டகாசம் அப்பகுதி பெண்ககளை நிம்மதியிழக்க செய்கின்றது.
குறிப்பாக நித்தியானந்தாவின் சீடர்கள் பகுதி மக்களிடம் ஐந்து லட்சம் தருவதாகவும் ஆசிரமத்தில் சேருமாறும் கட்டாயப்படுத்துகின்றனர். ஆனால் இவர்களின் யோக்கியதை என்ன? தினசரி மாலையில் சப்பாத்தி மாவாவில் காஞ்சாவை கலந்து தின்பதும் கஞசவை புகைப்பதும்தான் இந்த கும்பலின் ஆன்மீக பணியாக உள்ளது. இவைத்தவிர தினமும் விடியற் காலை 4 மனிக்கெல்லாம் ஒலி பெருக்கி மூலம் பஜனை என்ற பெயரில் கத்துவது, பகுதி மக்கள் அனைவரின் ஒய்வை குலைப்பதாக உள்ளது. எல்லா வற்றுக்கும் மேலாக அந்த மைதானத்தில் சிறுவர்கள் விளையாடப் போனால் அவர்களை விரட்டுவது தின சரி வேலைக்கு சென்று வரும் பெண்களை கேலி கிண்டல் மற்றும் ஆபசமாக பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 17.6.2017 அன்று வேலை நிமித்தமாக வெளியே வந்த பெண்ணை பட்ட பகலில் கட்டிப்பிடித்து வக்கிரமாக நடந்துள்ளான் நித்தியானந்தாவின் சீடன் ஒருவன். இந்த பொறுக்கித் தனத்திற்குகெதிராக மானம் உள்ளவர்கள் எவரும் போராடத்தான் செய்வார்கள் அதன் அடிப்படையில்தான் நித்தியானந்தா கும்பலுக்கு பகுதி மக்கள் தக்க பதிலடி கொடுத்தார்கள்.
சற்றும் நாகரீகம் இல்லாமலும் சட்டத்தை மீறி செயல்படவும் செய்யும் இந்த கயவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீசு கும்பல் போராடிய மக்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் 9 பேரை சித்தரவதை செய்து சிறையில் அடித்துள்ளது.
இது குறித்து பகுதியில் ஜெயலட்சுமி என்ற பெண்மணி கூறுகையில் இவனுங்க அட்டகாசம் சொல்லி மாளாது என்றும், நித்தியின் சீடர்கள் நீங்கள் நித்தியானந்தாவிடமே மோதுகிறீர்களா? என எங்களை மிரட்டுகின்றனர். பெங்களுரூவிலே மடத்துக்கான இடத்தை கைப்பற்றியபோது அரசாங்கமும் சட்டமும் எங்களை ஒன்னும் பன்ன முடிவில்லை. என பகிரங்கமாக மிரட்டுகின்றனர். மறுபுறம் அரசு அதிகார வர்க்கம் குறிப்பாக போலீசு கும்பலுக்கு கோடிக்கணக்கான பணம் கொட்டி கொடுக்கப்படுகின்றது அதனால்தான் போலீசு உள்ளீட்ட அரசு நிர்வாகம் நித்தியானந்தாவின் அடியாளாக செயல்படுகின்றது. 18.6.17 அன்று மாவட்ட வருவாய் துறை அதிகாரி தலைமையில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்த பகுதி மக்களை தாம்பரம் வட்டச்சியார் அலுவலகத்தில் அடைத்து நித்தியானந்தாவிற்கு ஆதரவாக கையெழுத்து போடச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளனர். பகுதி மக்களோ “விருப்பமில்லை” என கையெழுத்து போட்டோம் என்றனர்.
தன் நலனையும் தன்னுடைய குடும்ப நலனையும் மறுத்து அனைத்து விதமான ஆசைகளையும் அறுத்தெறிந்து புலன் அடக்கத்துடன் இறைப் பணி செய்வது என்ற நடைமுறையெல்லாம் காலம் கடந்தாதகி விட்டது. இது கார்ப்பேரேட்டுகளின் காலம் என்பதால் சொத்துக்கள் பிரமாண்ட மடங்கள் சேட்லைட் ஒளி பரப்பு நடத்தும் சொந்த தொலைக்காட்சி நிறுவனம் இப்படித் தான் நித்தியானந்தா போன்றோர் உருவாகியுள்ளனர் இப்படிப்பட்ட நபர்கள் மக்களுக்கு அருளாசி வழங்க என்ன அருகதையிருக்கின்றது?
இதற்குகெதிராக பகுதி மக்களை அணி திரட்டி போராடும் வகையிலும் அரசை அம்பலப்படுத்தியும் பு.ஜ.தொ.மு சார்பாக சார்பாக சுவரொட்டி இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.
தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
காஞ்சிபுரம் மாவட்டம்.