Wednesday, April 23, 2025
முகப்புசெய்திமதிமாறனை மிரட்டும் பாஜக கும்பலைக் கண்டித்து சென்னைப் பல்கலையில் ஆர்ப்பாட்டம் !

மதிமாறனை மிரட்டும் பாஜக கும்பலைக் கண்டித்து சென்னைப் பல்கலையில் ஆர்ப்பாட்டம் !

-

டந்த வாரம் நடந்த நியூஸ்-7 விவாத நிகழ்ச்சியில் பூணூலை உருவி சாதிவெறி – மதவெறியுடன் நடந்து கொண்ட நாராயணன் மற்றும் நாராயணனுக்கு ஆதரவாக மறுநாளே அதே வெறியுடன் காணொளி வெளியிட்ட எஸ்.வி.சேகரைக் கண்டித்தும், தொடர்ச்சியாக எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் ஜனநாயக சக்திகளுக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்து வரும் ஆர்.எஸ்.எஸ், பாஜக பயங்கரவாத கும்பலை கண்டித்தும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் நேற்று (29.06.2017) காலை 11:00 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தியா முழுவதும் மதவெறி பயங்கரவாத அட்டூழியங்களில் ஈடுபட்டு வரும் ஆர்.எஸ்.எஸ், பாஜக பயங்கரவாதிகளின் வேலைகள் தமிழகத்தில் செல்லுபடியாகாது என்று நம்பிக்கையூட்டும் முகமாக ஆர்ப்பாட்டம் வீச்சாக நடந்தது. இந்திய மக்களை அச்சுறுத்தி வரும் காவி பயங்கரவாதம் பெரியார் பிறந்த தமிழ் மண்ணில் தான் புதைக்கப்படும் என்பதற்கு அடையாளமாக இந்த ஆர்ப்பட்டம் நடைபெற்றது.

தமிழக மாணவர்களே, இளைஞர்களே ஜனநாயக சக்திகளே பார்ப்பன பாசிஸ்டுகளுக்கெதிரான போரில் அனைவரும் ஓரணியில் திரளுங்கள்.
 தகவல் :
அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம்,
சென்னைப் பல்கலைக்கழகம்.