Monday, April 21, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கடாஸ்மாக்கை மூடுறியா என்ன ? குமரி மாவட்டம் காட்டுவிளை மக்கள் போராட்டம் !

டாஸ்மாக்கை மூடுறியா என்ன ? குமரி மாவட்டம் காட்டுவிளை மக்கள் போராட்டம் !

-

ன்னியாகுமரி மாவட்டம் கட்டிமாங்கோடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட காட்டுவிளை ஊரில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட அரசுக்கு  உத்தரவிட்டு 3.07.2017 அன்று மாலை தொடங்கி தற்போது வரை  உறுதியுடன்  சுற்று வட்டாரத்திலுள்ள ஆறு கிராம மக்கள் போராடி வருகின்றனர்.

மக்கள் போராட தொடங்கியும் திமிருடன் விற்பனையை போலீஸ் பாதுகாவலுடன் தொடர்ந்து நடத்திய நிர்வாகம் சிறிது நேரத்தில் ஏராளமான மக்கள் கூடியதும் உடனடியாக  கடையை மூடியது. வழக்கம்போல ஆட்சியரை போய் பார்த்து மனு கொடுங்கள், ஆட்சியர்தான் கடையை மூடும் அதிகாரம் படைத்தவர் என்று போலீஸ் கூறியதை மக்கள் ஏற்கத் தயாராக இல்லை.

நிரந்தரமாக கடையை மூடுவதுடன் சாராய பாட்டில்களையும் எடுத்துச் சென்றால்தான் நாங்கள் இந்த இடத்தை விட்டு செல்வோம் என்று உறுதியுடன் போராடி வருகின்றனர். ஏற்கனவே இந்த பகுதி மக்களால் நடத்தப்பட்ட போராட்டத்தின்போது இந்த பகுதிக்குள் எந்த டாஸ்மாக் கடையும் அமைக்கமாட்டோம் என்று ஆட்சியர் உறுதியளித்திருந்தார், இதையும் சுட்டி காட்டி மக்கள் போராடி வருகின்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

கடைசிச் செய்தி: மக்களின் உறுதியான போராட்டத்தைத் தொடர்ந்து இன்று 04.07.2017 காலை டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தினர். படங்கள் இணைப்பில்:

தகவல் :
மக்கள் அதிகாரம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க