Monday, April 21, 2025
முகப்புசெய்திபாஜகவின் சாதனைகள் : அருணாச்சலில் கொலை - மராட்டியத்தில் வன்புணர்ச்சி !

பாஜகவின் சாதனைகள் : அருணாச்சலில் கொலை – மராட்டியத்தில் வன்புணர்ச்சி !

-

குழந்தைகள் கடத்தல், இணையத்தில் பிராத்தல் தொழில், கொலை, கொள்ளை என தொடர்ச்சியாக செய்திகள் வந்து குவிகின்றன.

பாஜக ஆட்சிக்கு வரும் அனைத்து மாநிலங்களிலும் பாஜக கட்சியைச் சேர்ந்த ரவுடிகள் மற்றும் பொறுக்கிகளின் ஆட்டம் அளவுக்கு மீறிச் செல்வதை சமீபத்தில் வரும் செய்திகள் மீண்டும் மீண்டும் நிருபிக்கின்றன. குழந்தைகள் கடத்தல், இணையத்தில் பிராத்தல் தொழில், கொலை, கொள்ளை என தொடர்ச்சியாக செய்திகள் வந்து குவிகின்றன.

சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு, தற்போதைய மணிப்பூர் முதலமைச்சரான பாஜகவைச் சேர்ந்த “நாங்தொம்பாம் பிரேனின்” மகனான அஜய், ஒரு இளைஞரை சுட்டுக் கொன்றதாகக் கைது செய்யப்பட்டார். அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டு தற்போது அவருக்கு ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் அருணாச்சலப் பிரதேச பாஜக அரசின் துணை சபாநாயகரான தும்கே பாக்ராவின் மகனும், பாஜகவின் ”வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணி”யின் முக்கியக் கட்சியான “அருணாசலப்பிரதேச மக்கள் கட்சி”யின் எம்.எல்.ஏவான “டபாங் டலோ”வின் மகனும் இதே போன்ற குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்

தும்கே பாக்ராவின் மகனான காஜும் பாக்ரா, கடந்த மார்ச் 26 அன்று தனது குடும்பத்துக்குச் சொந்தமான தங்கும் விடுதி ஒன்றின் வெளியே ’கெஞ்சம் கம்சி’ என்ற காங்கிரஸ்காரரைச் சுட்டுக் கொன்றுள்ளார்.

இச்சம்பவம் நடந்து முடிந்து மூன்று மாதங்களுக்குள்ளாகவே மற்றொரு தலைவரான “டபாங் டலோ”வின் மகனான “டோகி” தனது கூட்டாளியான “யம்ளி படு”வோடு சேர்ந்து கடந்த ஜூன் 24 அன்று ’பப்பங் நயு’ என்பவரை அங்குள்ள பிரபல தங்கு விடுதியில் வைத்துக் கொன்றுள்ளார். உடனிருந்து கொலை செய்த யம்ளியும் நீர்வளத்துறை செயலர் “கேயம் படு”வின் மகனாவார்.

இரண்டு கொலைகளுமே இவர்களுக்கும் எதிர்த் தரப்புக்கும் இடையே நடைபெற்ற வாக்குவாதத்தின் இறுதியிலேயே நடைபெற்றிருக்கின்றன.

அருணாச்சலப்பிரதேசத்தில் நிகழ்த்தப்பட்ட இக்கொலைகளின் தாக்கத்திலிருந்து வெளிவருவதற்குள் கடந்த ஜூலை 4 அன்று மராட்டியத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் இரவீந்திர பவந்தாடெ என்பவரைப் பாலியல் பலாத்காரக் குற்றத்திற்காகக் கைது செய்தது போலீசு. இரவீந்திர பவந்தாடெ ஒரு பெண்ணிடம், அவரைத் திருமணம் செய்து கொள்வதாகவும், அவருக்கு வேலை வாய்ப்பு வாங்கித் தருவதாகவும் வாக்குறுதியளித்து நெருங்கிப் பழகி வந்துள்ளார்.

சம்பவத்தன்று பேருந்தில் அப்பெண் பயணம் செய்து கொண்டிருக்கும் போது அருகில் வந்த இரவீந்திர பவந்தாடெ, அப்பெண்ணைப் பலவந்தப்படுத்தி அப்பெண்ணிற்கு முத்தம் கொடுத்து அப்பெண்ணின் மீது பாய்ந்து அப்பெண்ணை பலாத்காரம் செய்யவும் முயன்றுள்ளார். இது அனைத்தும் மற்ற பயணிகளின் முன்னிலையில் ந்டந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பெண் கட்சிரோலி போலீசு நிலையத்தில் இரவீந்திர பவந்தாடே மீது “பெண்ணை பொதுவெளியில் மானபங்கப்படுத்துதல்”, “பாலியில் வன்முறையில் ஈடுபடுதல்” ஆகிய பிரிவுகளின் கீழ் புகார் அளித்துள்ளார்.

இந்தச் சம்பவம் பேருந்தில் உள்ள சிசிடிவி எனப்படும் ஒளிப்பதிவு கருவியில் பதிந்துள்ளது. அந்த ஒளிப்பதிவு சமூக வலைத்தளங்களிலும் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து இரவீந்திர பவந்தாடெயைக் கைது செய்திருக்கிறது போலீசு. வழக்கம் போல இரவீந்திர பவந்தாடெ பாஜகவிலேயே இல்லை என கைகழுவி விட்டது பாஜக. ஆனால் இரவீந்திர பவந்தாடெ தான் 2014 ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அர்மோரி சட்டமன்றத் தொகுதியின் பாஜக பொறுப்பாளராக இருந்திருக்கிறார்.

தமிழகத்தில் கூட விசுவ ஹிந்து பரிஷத், இந்து முன்னணி போன்ற சங்கிகளின் அடியாட் படைகளின் மாநிலப் பொறுப்பாளர்களாக இருந்த ரவுடிகள் தங்களுக்குள் அடிதடி ஏற்பட்டு ஒருவரை மாற்றி ஒருவர் கொலை செய்யும் செய்திகளையும், கள்ளக்காதல் தகராறில் கொலை செய்யப்படுவதையும் படித்து வருகிறோம்.

பொறுக்கிகளின் புகலிடம் என்றுமே பாசிஸ்டுகளின் கட்சியாகத் தான் இருக்க முடியும் ஏனெனில், அத்தகைய பாசிஸ்டுகளுக்கு மட்டும் தான் கட்சியையும் ஆட்சியையும் நடத்தவே பொறுக்கிகளின் துணை என்றும் தேவைப்படும். அதற்குச் சிறந்த உதாரணம்: தமிழகத்தில் ஜெயா – இந்தியா முழுவதற்கும் ஆர்.எஸ்.எஸ்.

செய்தி ஆதாரம்: