Monday, April 21, 2025
முகப்புகலைகவிதைடீக்கடையும் பேக்கரியும்

டீக்கடையும் பேக்கரியும்

-

டீக்கடையும் பேக்கரியும்
……………………….
சுற்றுலா ஸ்தலமாகிறது
மோடியின் டீக்கடை
மக்கள் சாரை சாரையாக
புனித ஸ்தலம் நோக்கி செல்கிறார்கள்

அரசரின் மாண்பை அறிய
அவர் முன்னேறி வந்த வழியை அறிய
டீக்கடையைப் போலவே
கருகல் வாசனையுடைய
பேக்கரி ஒன்றும் உண்டு

ரத்த வாசனையுள்ள
ஒரு கேக்கை சாப்பிட்டு விட்டு
ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க டீ கடையில்
தேநீர் அருந்துங்கள்
அவ்வளவு புத்துணர்ச்சியாக இருக்கும்

பெஸ்ட் பேக்கரிக்கு வரும்
சுற்றுலா பயணிகளைவிட
அதிகமாக இருக்குமா
டீக்கடைக்கு வருபவர்கள்
எண்ணிக்கை?

4.7.2017
மாலை 4.47

(குஜராத்தில் மோடி ஆட்சியில் 2002 மார்ச் 1 ஆம் தேதி முஸ்லீம்களுக்கு எதிரான இனப் படுகொலையின் போது பெஸ்ட் பேக்கரியில் அபயம் தேடிய 14 பேரை காவி பயங்கரவாதிகள் கொடூரமாக எரித்துக் கொலை செய்தனர் )

நன்றி: –  மனுஷ்ய புத்திரன் 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க