Wednesday, April 23, 2025
முகப்புசெய்திஎன்னவெல்லாம் செய்வார் ராம்நாத் கோவிந்த் ?

என்னவெல்லாம் செய்வார் ராம்நாத் கோவிந்த் ?

-

ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவராக பதவியேற்று விட்டார். இத்தனை நாட்களாக கவர்னராக இருந்தவர் இப்போது குடியரசுத் தலைவர். பிரதமரின் அதிகாரத்தை மையமாக கொண்டு இயங்கும் இந்தியா போன்ற நாட்டில் குடியரசுத் தலைவருக்கு பெரியளவில் ஆணி பிடுங்கும் வேலைகள் இருப்பதில்லை. சொல்லப் போனால் மோடி பிரதமராக தெரிவு செய்யப்பட்ட பின் அவரது அமைச்சரவை சகாக்களுக்கே கூட பெரிய வேலைகள் இல்லை – அவர்களுக்கும் சேர்த்து மோடியே வேலை செய்கிறார்.

இப்போதெல்லாம் எல்லா மாநிலங்களின் முதலமைச்சர்கள், மாநில அமைச்சர்களுக்கும் சேர்த்து தானே சிந்திக்கும் பொறுப்பை மோடி ஏற்றுக் கொண்டிருக்கிறார். நீட், ஜி.எஸ்.டி, மாட்டிறைச்சி என மாநில அரசுகளின் உரிமைகளை மத்திய அரசு பறித்துக் கொண்டுள்ளது. எனவே, திருவாளர் மோடி, ஒரு நாளில் 48 மணி நேரம் உழைப்பதாக பக்தர்கள் சொல்கிறார்கள். உண்மையாகத் தான் இருக்க வேண்டும்.

போகட்டும். உண்மையில் பிடுங்குவதற்கு ஆணி எதுவுமே இல்லாமல் குடியரசுத் தலைவர் மாளிகையில் காலம் தள்ளுவதற்கே தனி திறமை வேண்டும். பிக்பாஸ் பங்களாவிலாவது பொரணி பேசுவதற்கு காயத்ரியும் சினேகனும் இருக்கிறார்கள்; பாவம் ராம்நாத் கோயிந்து.

குடியரசுத் தலைவர் என்னவெல்லாம் செய்யலாம் என டிவிட்டர்வாசிகள் சிலர் பரிந்துறைத்துள்ளனர் – நாட்டின் முதல் குடிமகன் – அவற்றில் சிலவற்றைப் பரிசீலிக்கலாம்.

@Ramesh Srivats https://twitter.com/rameshsrivats/status/889722785471148033

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் இன்றைய நிகழ்ச்சி நிரல்:
1. ராஜ்காட்டுக்குச் செல்ல வேண்டும்
2. உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.
3. பிரனாப் முகர்ஜியிடம் இருந்து வைஃபை பாஸ்வேர்டை வாங்கிக் கொள்ள வேண்டும்.

@vijaynair
பாஸ்வேர்டை sonia123 என்பதில் இருந்து modi123 என மாற்றிக் கொள்ள வேண்டும்.

@Rameshsrivats
இப்போது பிரனாப் முகர்ஜிக்கு எப்படி கீசரின் சுவிட்சைப் போட வேண்டும், தண்ணீர் பம்பின் சுவிட்ச்சை எப்படிப் போட வேண்டும் என்றெல்லாம் பிரதிபா பாட்டீல் பாடம் எடுத்துக் கொண்டிருப்பார்.

@Pradeepvikraman
4. அட்லஸ் மேப் ஒன்றை வாங்க வேண்டும். ஒரு சுற்றுலாவுக்குத் திட்டமிட வேண்டும்,

@bdhaps
5. அப்படியே House of Cards படம் பார்க்கலாம்

@bhakbhosedk
குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அழகான மொகலாயத் தோட்டத்தில் ஒரு கோசாலையை நாம் இனி பார்க்கலாம். அட ஒரு ஆர்.எஸ்.எஸ் காரன் புனித பசுவின் மேல் உள்ள காதலில் இதைக் கூட செய்ய மாட்டாரா?

@iamviyer
நெட்பிளிக்ஸ் பார்த்து என்ஜாய் செய்யட்டும்.

@vj_reddevil89
ட்விட்டர் கணக்கின் பெயரை மாற்றி விட்டு ஐந்து வருடங்களுக்கு சும்மா உட்கார்ந்து ரிலாக்ஸ் செய்யட்டுமே

@max4974
அப்படியே நாக்பூரில் இருந்து வரும் உத்தரவுக்காக காத்திருக்கட்டும்.

@debnayak13
கோவிந்த் ஏற்கனவே ஜியோ அன்லிமிட்டட் பிளான் வைத்திருப்பார்.

@chooranvendor
சீக்கிரம் வைஃபை பாஸ்வேர்டை மாற்றி விட வேண்டும். இல்லையென்றான் பிரனாப் ஓசியில் நெட்ப்ளிக்சில் படம் பார்க்க குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்து கொண்டிருப்பார்.

@sandeep_jopat
அப்படியே கண்ணுக்கு எட்டும் தொலைவில் இருக்கும் எல்லா சொந்தக்காரர்களுக்கும் தில்லியில் உள்ள நல்ல கல்லூரிகளில் இடம் பிடித்துக் கொடுக்கலாம்.

பழைய தி.மு.கவினர் கவர்னர் பதவியை ஆட்டின் தாடி என கிண்டலடிப்பது வழக்கம். மோடியின் இந்தியாவில் மாநில முதல்வர்களையே ஆட்டின் தாடிகளாக்கி விட்ட நிலையில், ஒரிஜினல் ஆட்டு தாடியான குடியரசுத் தலைவர் பதவிக்கு ஒரு அலங்கார பொம்மை என்பதைத் தாண்டி என்ன மதிப்பு இருந்து விடப்போகிறது?

இந்தப் பதவியை வழங்கியதன் மூலம் தலித் சமூகத்தவர்களுக்கு பாரதிய ஜனதா மாபெரும் சலுகை வழங்கி விட்டதாக வெட்டியாக சீன் போடுகின்றனர் பக்தர்கள். பொம்மையான குடியரசுத் தலைவர் பதவியை தலித் சமூகத்தைச் சேர்ந்தவருக்கு வழங்கியதன் மூலம் இழிவு படுத்தியுள்ளனர் என்பதே உண்மை.

அடுத்து வரும் ஐந்தாண்டுகளை வெட்டியாக கழிக்கவுள்ள ராம்நாத் கோவிந்த் வேறு என்னென்ன ஆணிகளையெல்லாம் பிடுங்கலாம் என்பதை நீங்களும் பரிந்துரை செய்து அவருக்கு உதவலாமே?